search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராஜபாளையம் பகுதியில் மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படுமா?- அமைச்சர் பதில்
    X

    ராஜபாளையம் பகுதியில் மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படுமா?- அமைச்சர் பதில்

    • புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு மானியத்துடன் கடன் உதவி கிடைக்க அரசு உதவி செய்து வருகிறது.
    • விளையும் மாம்பழங்கள் அந்த மாவட்டத்திலேயே முழுமையாக விற்பனையாகி விடுகிறது.

    சட்டசபையில் தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில் ராஜபாளையம் தொகுதியில் மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்க அரசு ஆவண செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதில் அளித்து கூறும் போது, ராஜபாளையம் தொகுதியில் மாம்பழம் பதப்படுத்துதல் மற்றும் மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்க செயல் குறிப்பு தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை. அங்கு விளையும் மாம்பழங்கள் அந்த மாவட்டத்திலேயே முழுமையாக விற்பனையாகி விடுகிறது.

    மாம்பழ கூழ் தயாரிப்பதற்கு பெங்களூரா, அல்போன்சா வகை மாம்பழங்களே உகந்ததாகும். இந்த வகை மாம்பழங்கள் ராஜபாளையம் பகுதியில் விளைவது இல்லை. இருப்பினும் புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு மானியத்துடன் கடன் உதவி கிடைக்க அரசு உதவி செய்து வருகிறது.

    எனவே தொழிற்சாலை தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் மாவட்ட தொழில்லையை அலுவலகத்தில் அணுகினால் தேவையான உதவிகளையும், ஆலோசனைகளையும் அரசு வழங்கும் என்றார்.

    Next Story
    ×