search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் புனித நீராடி ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்

    • கோவில்களில் பக்தர்கள் அதிகாலையில் முதல் குருசாமி முன்னிலையில் மாலை அணிந்து கொண்டு விரதம் இருக்க தொடங்கினர்.
    • பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் விற்பனை களை கட்டியது.

    தருமபுரி:

    தமிழகம் முழுவதும் கார்த்திகை மாதத்தில் ஒரு மண்டலம் விரதம் இருந்து ஐயப்பன் சாமிக்கு பக்தர்கள் இருமுடி கட்டி கார்த்திகை முதல் தேதி முதல் சபரிமலைக்கு சென்று வருவது வழக்கம்.

    இதைத்தொடர்ந்து இன்று கார்த்திகை முதல் தேதி என்பதால் ஏராளமான தருமபுரி மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் கோவில்களில் நீண்ட வரிசையில் வந்து மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

    தருமபுரியில் உள்ள சீனிவாசராவ் தெருவில் உள்ள ஐயப்ப கோவிலில் இன்று அதிகாலை பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இதேபோன்று கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், சாலை விநாயகர் கோவில், சித்தி விநாயகர் கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் அதிகாலையில் முதல் குருசாமி முன்னிலையில் மாலை அணிந்து கொண்டு விரதம் இருக்க தொடங்கினர்.

    இதன் காரணமாக தருமபுரியில் கடைவீதியில் உள்ள பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் துளசி மாலை உள்ளிட்ட மாலை வகைகள், கருப்பு, நீல நிறங்களில் சட்டை, வேஷ்ட விற்பனையும் களை கட்டியது.

    இதேபோன்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடி காவி மற்றும் கருப்பு வேஷ்டி அணிந்து நீண்ட வரிசையில் நின்று குருசாமி, குருக்கள் கைகளால் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர்.

    மண்டல விரதத்தை தொடங்குவதற்காக குருசாமியின் முன்னிலையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து தங்களது விரதத்தை தொடங்கினர்.

    இதேபோன்று இன்று கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து, கோவில்களில் சுவாமி தரிசனம் செய்து மாலை அணிவார்கள். அதன்படி கிருஷ்ணகிரியில் ஐயப்பன் சுவாமி கோவிலில் உள்ள ஐயப்பன் சன்னதியில் காலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

    ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்து, மாலையணிந்து விரதத்தை துவக்கினார். கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு சபரிமலைக்கு மாலை அணிய கிருஷ்ணகிரி ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்தனர்.

    இதேபோன்று மாவட்டத்தில் ஓசூர், பர்கூர், சூளகிரி ஆகிய பகுதிகளிலும் ஐயப்பன் கோவில்களில் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.

    Next Story
    ×