search icon
என் மலர்tooltip icon

    பிலிப்பைன்ஸ்

    • கப்பலில் தீ வேகமாக பரவியதால் பயணிகள் பலர் கடலில் குதித்தனர்.
    • இந்த விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 31 பேர் கருகி செத்தனர்.

    மணிலா:

    பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டனாவ் தீவின் ஜாம்போங்கா நகரில் இருந்து சுலு மாகாணம் ஜோலோ தீவுக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

    இந்தக் கப்பல் பலுக் தீவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கப்பலில் தீ வேகமாக பரவியதால் அலறிய பயணிகள் பலர் கடலில் குதித்தனர்.

    தகவலறிந்து விரைந்து வந்த கடலோர காவல்படை மீனவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கப்பலில் இருந்து 230 பயணிகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். கப்பலில் எரிந்த தீயை அணைக்க கடலோர காவல் படை கப்பலில் இருந்து தண்ணீர் அடிக்கப்பட்டது.

    இந்த விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 31 பேர் கருகி செத்தனர். காணாமல் போன 7 பேரை தேடி வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 31 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கப்பலில் தீ வேகமாக பரவியதால் பயணிகள் அலறினார்கள்.
    • கடலோர காவல்படை மீனவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    மணிலா:

    பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மிண்ட னாவ் தீவின் ஜாம்போங்கா நகரில் இருந்து சுலு மாகாணம் ஜோலோ தீவுக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்த கப்பல் பலுக் தீவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

    கப்பலில் தீ வேகமாக பரவியதால் பயணிகள் அலறினார்கள். பலர் கடலில் குதித்தனர். கடலோர காவல்படை மீனவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கப்பலில் இருந்த பயணிகளை சிறிய படகுகளில் ஏற்றினர். மறுமுனையில் கப்பலில் எரிந்த தீயை அணைத்து கடலோர காவல் படை கப்பலில் இருந்து தண்ணீர் அடிக்கப்பட்டது.

    இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட 12 பேர் பலியானார்கள். 7 பேர் மாயமாகி உள்ளனர். கப்பலில் இருந்து 230 பயணிகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

    • ஆழமற்ற நிலநடுக்கங்கள் ஆழமான நிலநடுக்கங்களை விட அதிக தீங்கு விளைவிக்கும்.
    • தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு பற்றிய அறிக்கைகளை அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர்.

    தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று மதியம் 2 மணியளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 6ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மிண்டனாவ் தீவில் உள்ள மலை சார்ந்த தங்கச் சுரங்க மாகாணமான தாவோ டி ஓரோவில் உள்ள மரகுசன் நகராட்சியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஆழமற்ற நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ஆழமற்ற நிலநடுக்கங்கள் ஆழமான நிலநடுக்கங்களை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்பதால், சேதம் குறித்து உடனடியாக உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கைகள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு பற்றிய அறிக்கைகளை அதிகாரிகள் சரிபார்த்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் ஏற்படுகிறது.
    • கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக அவர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

    மணிலா:

    தென் கிழக்கு ஆசியாவின் தீவு நாடான பிலிப்பைன்சில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள், கிளர்ச்சியாளர்கள் உள்ளனர். குறிப்பாக பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். ஆனது இங்கு அடிக்கடி தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது. அதுபோல அரசுக்கு எதிராக இடதுசாரி கிளர்ச்சியாளர்களும் அவ்வப்போது மோதலில் ஈடுபடுகின்றனர்.

    இவர்கள் கிராமப்புறம் மற்றும் ராணுவ வீரர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு ராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் ஏற்படுகிறது.

    இந்த நிலையில் மத்திய பிலிப்பைன்ஸ் பகுதியில் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சுமார் 20 பேர் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு இருந்தனர்.

    இதனையடுத்து கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக அவர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர்.

    • 5 ஆண்டுகளுக்கும் மேல் சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு தங்களது தினசரி ஊதியத்தை மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
    • மேயர் புளோரிடோ தனது ஊழியர்களுக்கு காதலர் தின போனஸை தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக வழங்கி வருகிறார்.

    பிலிப்பைன்ஸில் உள்ள ஜெனரல் லூனா நகரத்தின் மேயர் மாட் புளோரிடோ காதலர்கள் இல்லாமல் சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு காதலர் தின பரிசாக போனஸ் வழங்கி அசத்தி உள்ளார். சிங்கிள் ஊழியர்கள் கூடுதல் நேரம் பணிபுரிந்ததற்காக மேயர் தனது பாராட்டுக்களுடன் போனசும் வழங்கியுள்ளார்.

    குறிப்பாக, 5 ஆண்டுகளுக்கும் மேல் சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு தங்களது தினசரி ஊதியத்தை மூன்று மடங்காகவும், மற்ற ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியமும் வழங்கப்படுகிறது. அல்லது ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து மேயர் மாட் புளோரிடோ கூறுகையில், " காதலர் தினத்தன்று சிங்கிள்கள் என்ன செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் அவர்களின் நிலையை உணர்கிறேன். காதலர் தினத்தன்று யாரும் அவர்களுக்கு சாக்லேட், பூக்கள் கொடுக்க மாட்டார்கள். அதனால் அவர்களுக்கு இதுபோன்ற ஊக்கத்தொகையை வழங்க நினைத்தோம். இதன் மூலம்,யாராவது தங்களைக் கவனித்துக்கொள்கிறார்கள், யாரோ தங்களை நேசிக்கிறார்கள் என்பதை அவர்களால் உணர முடியும்" என்றார்.

    மேயர் புளோரிடோ தனது ஊழியர்களுக்கு காதலர் தின போனஸை தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக வழங்கி வருகிறார். 289 டவுன்ஹால் ஊழியர்களில், 37 பேர் தாங்கள் சிங்கிள் தான் என்பதை உறுதி செய்த பிறகு இழப்பீட்டிற்கு தகுதி பெற்றனர். மேலும், தகுதியான ஊழியர்களிடம் அவர்களது கடைசி உறவு, பிரிந்ததற்கான காரணம் மற்றும் அவர்கள் ஏன் இன்னும் தனிமையில் இருக்கிறார்கள் என்பது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.

    • விமானம் பிலார் நகருக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்தது.
    • விபத்தில் விமானிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான 'மார்செட்டி எஸ்.எப். 260' ரக விமானம், அந்த நாட்டின் படான் மாகாணத்தில் உள்ள பிலார் நகரில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. விமானத்தில் 2 விமானிகள் இருந்தனர்.

    இந்த விமானம் பிலார் நகருக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்தது. அதை தொடர்ந்து அங்குள்ள வயல்வெளியில் விமானம் விழுந்து நொறுங்கியது.

    இந்த கோர விபத்தில் விமானிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.

    • ஒரு கிலோ வெங்காயம் வாங்கவேண்டுமானால் ஒரு நாள் ஊதியத்தை விட அதிகம் செலவாகிறது.
    • பணவீக்கம் அதிகரித்து வருவதால், உலகளவில் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன.

    பிலிப்பைன்ஸ் நாட்டின் உணவுகளில் வெங்காயம் அத்தியாவசியமான இடத்தை பிடித்துள்ளது. பெரும்பாலான உணவுப் பொருட்களில் வெங்காயம், பூண்டு ஆகியவை பிரதானமாக சேர்க்கப்படுகிறது. பிலிப்பைன்ஸில் மட்டும் சராசரியாக மாதத்திற்கு சுமார் 17,000 மெட்ரிக் டன் காய்கறிகள் தேவைப்படுகிறது.

    இந்த நிலையில்தான் மக்களின் முக்கிய காய்கறிகளில் ஒன்றான வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கிலோவுக்கு 600 பிசோஸ் (இந்திய மதிப்பு ரூ.887) என்ற விலையில் விற்கப்படுகிறது. இது கோழி இறைச்சியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு விலை அதிகம் ஆகும். பன்றி இறைச்சி அல்லது மாட்டிறைச்சியை விட 25-50 சதவீதம் அதிகம்.

    ஒரு கிலோ வெங்காயம் வாங்கவேண்டுமானால் ஒரு நாள் வேலைக்கான பிலிப்பைன்ஸின் குறைந்தபட்ச ஊதியத்தை விட அதிகம் செலவு செய்ய வேண்டி உள்ளது.

    உள்நாட்டு உற்பத்தி, விநியோகம் குறைந்து வருவதாலும், அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் மார்ச் மாதத்திற்குள் சுமார் 22,000 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டும் என வேளாண் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

    ரஷ்யா-உக்ரைன் போர், விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் தீவிர காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் உலகளாவிய பணவீக்கம் அதிகரித்து, உலகளவில் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன. இதன் தாக்கம் பிலிப்பைன்சிலும் எதிரொலித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தை சேர்ந்த கபடி பயிற்சியாளர் குர்பிரித்சிங்.
    • மணிலாவில் இருந்து வீடு திரும்பி கொண்டு இருந்த குர்பிரித்சிங்கை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

    மணிலா:

    பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தை சேர்ந்த கபடி பயிற்சியாளர் குர்பிரித்சிங். அவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா சென்றார். அங்கு வியாபாரம் செய்து கொண்டு இளம் வீரர்களுக்கு கபடி பயிற்சியும் அளித்தார்.

    இந்த நிலையில் மணிலாவில் இருந்து வீடு திரும்பி கொண்டு இருந்த குர்பிரித்சிங்கை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். கொலைக்கான காரணம் தெரியவில்லை. உடலை இந்தியா கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

    • இடைவிடாது கொட்டிய பேய் மழையால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாகின.
    • வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கிய 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் கிறிஸ்துமஸ் தினத்தன்று பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இடைவிடாது கொட்டிய பேய் மழையால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாகின. குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. டஜன் கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

    கனமழை, வெள்ளத்தால் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் சுமார் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கிய 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை, வெள்ளத்துக்கு 6 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், பிலிப்பைன்சில் கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 12 பேர் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

    • இடைவிடாது கொட்டிய பேய் மழையால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாகின.
    • 19 பேர் மாயமாகி உள்ளனர்.

    மணிலா :

    பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் தினத்தன்று பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இடைவிடாது கொட்டிய பேய் மழையால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாகின.

    குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. டஜன் கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

    கனமழை, வெள்ளத்தால் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் சுமார் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கிய 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை 6 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 19 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

    • கப்பல் தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்தபோது திடீரென்று பழுதடைந்தது.
    • கப்பலில் இருந்த ஒருவர் இலங்கை கடற்படையினரை தொடர்பு கொண்டு தாங்கள் ஆபத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

    மணிலா:

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தவித்து வருகிறார்கள்.

    வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் மக்கள் இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கிறார்கள். அவர்கள் கடல் வழியாக படகு, கப்பல் மூலம் செல்கிறார்கள்.

    இந்த நிலையில் இலங்கை அகதிகளை ஏற்றி சென்ற கப்பல் பழுதடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்து வருகிறது.

    இலங்கையில் இருந்து பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்பட 317 பேர் ஒரு கப்பலில் அங்கிருந்து புறப்பட்டனர். அந்த கப்பல் தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்தபோது திடீரென்று பழுதடைந்தது. இதனால் கப்பல் அங்கிருந்து நகர முடியாமல் நடுக்கடலில் தத்தளிக்கிறது.

    இதற்கிடையே கப்பலை இயக்கியவர் அதிலிருந்து குதித்து தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவர் எப்படி தப்பினார் என்ற விவரம் தெரிய வில்லை.

    317 பேர் இருந்த அந்த கப்பல் கடலில் மூழ்கும் நிலையில் இருந்தது. இதனால் கப்பலில் உள்ள இலங்கை அகதிகள் தவிப்புக்குள்ளானார்கள்.

    இதற்கிடையே கப்பலில் இருந்த ஒருவர் இலங்கை கடற்படையினரை தொடர்பு கொண்டு தாங்கள் ஆபத்தில் இருப்பதாக தெரிவித்தார். மேலும் கப்பலில் இருந்த ஒருவர் பேசும் ஆடியோ வெளியானது.

    கப்பல் காற்றினால் தள்ளப்பட்டு பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமுக்கு இடையே தத்தளித்துக் கொண்டிருப்பதாக கூறினார். தங்களை காப்பாற்றுமாறும் ஐ.நா.விடம் இதனை தெரியப்படுத்தும் படியும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதையடுத்து கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடியது.

    இந்த நிலையில் படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு வியட்நாம் நோக்கி அழைத்துச் செல்லப்படுவதாக சிங்கப்பூர் அதிகாரிகள் இலங்கைக்கு தகவல் தெரிவித்தனர். இலங்கை கடற்படை கப்பலில் இலங்கையர் ஒருவர் இருப்பது மட்டுமே உறுதிபடுத்தி உள்ளது என்றும் மற்றவர்கள் யார் என்ற விவரம் வியட்நாமில் தரை இறங்கிய பின்னரே கண்டறியப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கப்பல் தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்தபோது திடீரென்று பழுதடைந்தது.
    • கப்பலை இயக்கியவர் அதிலிருந்து குதித்து தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    மணிலா:

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தவித்து வருகிறார்கள்.

    வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் மக்கள் இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கிறார்கள். அவர்கள் கடல் வழியாக படகு, கப்பல் மூலம் செல்கிறார்கள்.

    இந்த நிலையில் இலங்கை அகதிகளை ஏற்றி சென்ற கப்பல் பழுதடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்து வருகிறது.

    இலங்கையில் இருந்து பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்பட 317 பேர் ஒரு கப்பலில் அங்கிருந்து புறப்பட்டனர். அந்த கப்பல் தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்தபோது திடீரென்று பழுதடைந்தது.

    இதனால் கப்பல் அங்கிருந்து நகர முடியாமல் நடுக்கடலில் தத்தளிக்கிறது.

    இதற்கிடையே கப்பலை இயக்கியவர் அதிலிருந்து குதித்து தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவர் எப்படி தப்பினார் என்ற விவரம் தெரிய வில்லை.

    இதனால் கப்பலில் உள்ள இலங்கை அகதிகள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். நடுக்கடலில் தத்தளிக்கும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இலங்கை அகதிகள் நடுக்கடலில் சிக்கி இருப்பது தொடர்பாக பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×