search icon
என் மலர்tooltip icon

    ஸ்பெயின்

    • சுமார் 11000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மரங்கள், செடி, கொடிகள் கருகின.
    • ஸ்பெயினில் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 500 முறை காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகளில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. நேற்று காலையில் பன்டகோர்டா மாவட்டத்தில் முதலில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் பிற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியதால் மக்கள் பீதியடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். விமானப்படை விமானம் மூலம் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்படுகிறது. எனினும் தீ கட்டுக்குள் வரவில்லை. சுமார் 11000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மரங்கள், செடி, கொடிகள் கருகின.

    தீப்பற்றிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்படுகின்றனா. லா பால்மா தீவில் இருந்து மட்டும் 2500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவசரகால சேவைகள் தங்கள் பணிகளை எளிதில் செய்து முடிக்க ஏதுவாக மீட்பு பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்து வெளியேறும்படி லா பால்மா கவுன்சிலின் தலைவரும், தீவின் முக்கிய அதிகாரியுமான செர்ஜியோ ரோட்ரிக்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

    தீ மிக விரைவாக பரவியதாக கேனரி தீவுகளின் பிராந்திய அரசாங்க தலைவர் பெர்னாண்டோ கிளாவிஜோ கூறினார். காற்று, பருவநிலை மற்றும் வெப்ப அலைகள் காரணமாக இந்த அளவுக்கு தீ பரவி வருவதாக அவர் தெரிவித்தார்.

    ஐரோப்பிய காட்டுதீ தகவல் அமைப்பின் தரவுகளின்படி, ஸ்பெயினில் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 500 முறை காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதில் 300,000 ஹெக்டேர்களுக்கு அதிகமான நிலம் நாசமானது. இது ஐரோப்பாவின் மிக மோசமான பாதிப்பாக கருதப்படுகிறது.

    இந்த ஆண்டு இதுவரை காட்டுத்தீயில் 66,000 ஹெக்டேர் நிலம் அழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • காரை ஓட்டிவந்தவர்கள் அதில் இருந்து வெளியேறி கார் மேலே அமர்ந்து கொண்டிருந்தனர்.
    • சிலர் மரங்களை பிடித்து தப்பினர். சிலரை பொதுமக்கள் மீட்டனர்.

    ஸ்பெயினின் ஜராகோசா மாகாணத்தில் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் அங்குள்ள நகருக்குள் திடீரென்று வெள்ளம் புகுந்தது. சாலையில் கட்டுக்கடங்காத வேகத்தில் வெள்ளம் பாய்ந்து சென்றது.

    அப்போது பல கார்கள் வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டன. காரை ஓட்டிவந்தவர்கள் அதில் இருந்து வெளியேறி கார் மேலே அமர்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் காருடன் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டனர். சிலர் மரங்களை பிடித்து தப்பினர். சிலரை பொதுமக்கள் மீட்டனர். கார்கள் மீது பொதுமக்கள் அமர்ந்தபடி வெள்ளத்தில் இழுத்து செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • ஏற்கனவே சட்டம் உள்ளது, ஆனால் எதிர்ப்பு கிளம்பியதால் அமல்படுத்தவில்லை
    • பாலினம், மத நம்பிக்கைகள், உடை உட்பட எந்தவொரு பாகுபாட்டிற்கு எதிராகவும் மக்களை பாதுகாக்க வேண்டும்

    ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி பெற்ற ஒரு பிராந்தியம் கட்டலோனியா. இதன் தலைநகரமான பார்சிலோனா உலகில் உள்ள சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்று.

    கட்டலோனியாவில் பொது நீச்சல் குளங்களில் பெண்களை மேலாடையின்றி செல்ல நகரம் மற்றும் நகர அரங்குகளுக்கு உத்தரவிட்டதையடுத்து கட்டலோனியாவில் ஆர்வலர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

    பெண்கள் மேலாடையின்றி செல்ல 2020-ம் ஆண்டே கட்டலோனியா அனுமதி அளித்துள்ளது. ஆனாலும், இச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும், சில நகராட்சி நீச்சல் குளங்கள் இந்த நடைமுறையைத் தடுத்துள்ளன என ஒவ்வொரு கோடை காலத்திலும் பத்திற்கும் மேற்பட்ட புகார்கள் வந்த வண்ணம் இருந்திருக்கிறது.

    இதனை தடுக்கும் வகையில், எந்த வகையான பாரபட்சத்தையும் தடுக்க, உள்ளூர் அதிகாரிகளுக்கு இப்போது உத்தரவிடப்பட்டிருக்கிறது.

    கட்டலோனியா அரசாங்கத்தின் சமத்துவம் மற்றும் பெண்ணியம் துறை அவர்களுக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில், பெண்கள் மேலாடையின்றி செல்வதைத் தடுப்பது, அவரவர்களின் உடல் தொடர்பாக ஒவ்வொரு நபரின் தேர்வுக்கான சுதந்திரத்தையும் மீறுவதும், மக்கள் தொகையில் இருந்து விலக்கி வைப்பதுமாகும்.

    பாலினம், மத நம்பிக்கைகள், உடை உட்பட எந்தவொரு பாகுபாட்டிற்கு எதிராகவும் உள்ளூர் அதிகாரிகள் மக்களை பாதுகாக்க வேண்டும். தாய்ப்பாலூட்டுவதை அனுமதிக்க வேண்டும். முழு உடலையும் மறைக்கும் நீச்சல் உடைகளை பயன்படுத்துவதையும் அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கை கூறியிருக்கிறது.

    கட்டலோனியா பிராந்தியத்தின் சமத்துவத் துறையின் செய்தித் தொடர்பாளர், இந்த கடிதம் வெறுமனே ஒரு நினைவூட்டல் என்றும், இருப்பினும், இனிமேல் நகராட்சிகள் இதற்குக் கீழ்ப்படிவது கட்டாயமாகும் என்று கூறியிருக்கிறார்.

    கட்டலோனியா பிராந்திய அரசாங்கத்தை, சுதந்திரத்திற்கு ஆதரவான கட்டலோனியா குடியரசுக் கட்சி (இடது) ஆண்டு வருகிறது. தற்போது கூறப்பட்டிருக்கும் உத்தரவுகளின்படி, "டவுன் ஹால்" எனப்படும் மக்கள் கூடும் நகர மண்டபங்களில் உள்ள நீச்சல் குளங்களில் இந்த விதிமுறைகள் மீறப்பட்டால், சுமார் ரூ. 4 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.

    மேலாடையின்றி செல்ல அனுமதிக்கப்படாத டவுன் ஹால்களுக்கு எதிரான புகார்களில், பெரும்பான்மையானவை முக்ரான் லியுர்ஸ் (Mugron Lliures) என்ற பெண்ணியக் குழுவைச் சேர்ந்தவர்களால் பதிவு செய்யப்பட்டவை.

    இந்த குழுவின் செய்தித்தொடர்பாளர் மரியோனா டிராபல் இது குறித்து கூறியதாவது:-

    இது ஒரு பாலின சமத்துவப் பிரச்சினை. ஆண்கள் (மேலாடையின்றி) செல்லலாம், ஆனால் பெண்களால் முடியாது என்கிற நிலையிருக்கிறது. இதனை சரி செய்ய அவர்கள் (அதிகாரிகள்) ஏன் இவ்வளவு நேரம் எடுத்தார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் நாங்கள் தற்போது மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்ற வாரம், முர்சியா எனும் தெற்கு பகுதி நகரத்தில் நடைபெற்ற பிரைட் எனும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள், பாடகர் ரோசியோ சைஸ், மேலாடையின்றி மேடையில் ஏறிய பிறகு, ஒரு கொடியால் அவரது உடற்பகுதியை மூடினர். அவரது நிகழ்ச்சிக்கு பிறகு, உள்ளூர் காவல்துறையினரால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.

    ஸ்பெயின் நாட்டில், நீச்சல் குளங்களில் மேலாடையின்றி செல்ல பெண்களுக்கான அனுமதி குறித்த விவாதங்கள், அந்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பேசுபொருள் ஆன செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
    • இதில் பெலாரசின் அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    ஸ்பெயின்:

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.

    இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, நம்பர் 1 வீராங்கனை போலந்தின் இகா ஸ்வியாடெக்குடன் மோதினார்.

    இதில் சபலென்கா 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது.
    • இதில் போபண்ணா, மேத்யூ எப்டென் ஜோடி தோல்வி அடைந்தது.

    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ரோகன் போபண்ணா (இந்தியா)- மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி, ரஷியாவின் கச்சனாவ், ரூப்லவ் ஜோடியுடன் மோதியது.

    முதல் செட்டை 6-3 என ரஷியா வென்றது. இரண்டாவது செட்டை போபண்ணா ஜோடி 6-3 என கைப்பற்றியது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் ரஷிய ஜோடி சிறப்பாக ஆடி 10-3 என்ற கணக்கில் வென்றது.

    இறுதியில், ரஷிய ஜோடி 6-3, 3-6, 10-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது.

    • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்று இன்று நடைபெற்றது.
    • இதில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார்.

    பாரீஸ்:

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதலாவது அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், குரோசிய வீரர் போர்னா கொரிக்குடன் மோதினார்.

    இதில் 6-4, 6-3 என்ற நேர்செட்டில் வென்று அல்காரஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

    • சான்டியாகோ கான்செலஸ் (மெக்சிகோ)- ரோஜர் வாஸ்செலின் (பிரான்ஸ்) இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
    • சபலென்கா 6-4, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவில் அரை இறுதி ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)- மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி சரிவில் இருந்து மீண்டு வந்து 5-7, 7-6 (7-3), 10-4 என்ற செட் கணக்கில் சான்டியாகோ கான்செலஸ் (மெக்சிகோ)- ரோஜர் வாஸ்செலின் (பிரான்ஸ்) இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    அதேபோல், மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, கிரேக்க வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதினார்.

    இதில் சபலென்கா 6-4, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.
    • இதில் பெலாரசின் அரினா சபலென்கா வென்று இறுதிக்கு முன்னேறினார்.

    ஸ்பெயின்:

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, கிரேக்க வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதினார்.

    இதில் சபலென்கா 6-4, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • ஏற்கனவே பெலாரசின் அரினா சபலென்கா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    ஸ்பெயின்:

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், குரோசியா வீராங்கனை பெட்ரோ மாட்ரிக்குடன் மோதினார்.

    இதில் இகா ஸ்வியாடெக் 6-0, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் கிரேக்க வீராங்கனை மரியா சக்காரி, ரோமானிய வீராங்கனை இரினா கமாலியா பிகுவுடன் மோதினார்.

    இதில், முதல் செட்டை இழந்த சக்காரி அடுத்த இரு சுற்றுகளை கைப்பற்றி அசத்தினார். இறுதியில், சக்காரி 6-7, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால் இறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா அரையிறுதிக்கு முன்னேற்றம்.
    • ஆண்கள் ஒற்றையர் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் கால் இறுதிக்கு முன்னேற்றம்.

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால் இறுதி ஆட்டம் நடைபெற்றது.

    இந்த ஆட்டத்தின் ஒன்றில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 2வது இடத்தில் இருப்பவருமான அரினா சபலென்கா (பெலாரஸ்) சரிவில் இருந்து மீண்டு வந்து 2-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எகிப்தின் மேயர் ஷெரிப்பை வீழ்த்தி அரை இறுதியை எட்டினார்.

    அதேபோல் ஆண்கள் ஒற்றையர் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் 6-1, 6-2 என்ற நேர்செட்டில் ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) வெளியேற்றி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு சிட்சிபாஸ் முன்னேறினார்.
    • ஏற்கனவே ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    பாரீஸ்:

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், ஸ்பெயின் வீரர் பெர்னபே ஜபாடாவுடன் மோதினார்.

    இதில் 6-3, 6-1 என்ற நேர்செட்டில் வென்று சிட்சிபாஸ் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் ஜான் லெனார்ட் ஸ்டர்ப், அர்ஜென்டினா வீரர் பெடொ காசினுடன் மோதினார். இதில் ஸ்டர்ப் 7-6, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    ஏற்கனவே ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், ரஷிய வீரர் கச்சனோவ் ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

    • ஆண்கள் ஒற்றையர் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் எகிப்தின் மேயர் ஷெரிப்பை வீழ்த்தி அரினா சபலென்கா அரை இறுதிக்குள் நுழைந்தார்.

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் 6-1, 6-2 என்ற நேர்செட்டில் ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) வெளியேற்றி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான அரினா சபலென்கா (பெலாரஸ்) சரிவில் இருந்து மீண்டு வந்து 2-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எகிப்தின் மேயர் ஷெரிப்பை வீழ்த்தி அரை இறுதியை எட்டினார்.

    ×