என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
நைஜீரியா நாட்டில் ஆற்றில் படகு கவிழ்ந்து 26 பேர் பலி
- ஆற்றின் நடுவில் சென்ற போது திடீரென அந்த படகு கவிழ்ந்தது.
- தண்ணீரில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 30 பேரை அவர்கள் மீட்டனர்.
நைஜர்:
வட மத்திய நைஜீரியா நாட்டில் நைஜர் மாகாணம் மொக்வா நகரில் இருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு படகில் விவசாய பணிகளுக்காக சென்று கொண்டு இருந்தனர். அங்குள்ள ஆற்றில் அணையை கடந்து விவசாய பண்ணைக்கு படகு சென்றது. இந்த படகில் பெண்கள், குழந்தைகளும் பயணம் செய்தனர்.
ஆற்றின் நடுவில் சென்ற போது திடீரென அந்த படகு கவிழ்ந்தது. இதனால் அதில் பயணம் செய்தவர்கள் ஆற்றுக்குள் விழுந்து தத்தளித்தனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தண்ணீரில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 30 பேரை அவர்கள் மீட்டனர். ஆனாலும் இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 26 பேர் ஆற்றில் மூழ்கி இறந்து விட்டனர். அவர்களது உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். படகில் சென்ற பலரை காணவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.