என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
பகவத் கீதை போதனைகள் எனக்கு மனவலிமை அளிக்கிறது- ரிஷி சுனக்
- மிகவும் கடினமான நேரங்களில் அக்ஷதா எனக்கு பகவத் கீதையின் போதனைகளை செல்போனில் அனுப்புவார்.
- கடந்த சில வாரங்களாக பகவத் கீதைதான் எனக்கு பலம் கொடுத்தது என்றார்.
இங்கிலாந்து பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததால் புதிய பிரதமருக்கான தேர்வை ஆளும் கன்சர் வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது.
இதன் இறுதிச் சுற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், மந்திரி லிஸ் டிரஸ் இடையே பலப்பரீட்சை நடந்து வருகிறது. இதில் ரிஷி சுனக்கை விட லிஸ் டிரஸ் முன்னிலையில் உள்ளார்.
இந்த நிலையில் ரிஷி சுனக் தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் வாட்போர்ட்டில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அங்கிருந்த பக்தர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரிஷி சுனக் கூறும் போது, பிரதமர் தேர்தல் கடுமையான சவாலாக இருக்கிறது. மிகவும் கடினமான நேரங்களில் அக்ஷதா எனக்கு பகவத் கீதையின் போதனைகளை செல்போனில் அனுப்புவார். கடந்த சில வாரங்களாக பகவத் கீதைதான் எனக்கு பலம் கொடுத்தது என்றார்.
ரிஷி சுனக்-அக்ஷதா மூர்த்தி தம்பதிக்கு கோவில் சார்பில் கிருஷ்ணர் படங்கள் அடங்கிய புத்தகம் வழங்கப்பட்டது. அவர்கள் கோ -பூஜையும் செய்தனர்.