search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக வலுவான ஆதாரங்கள் இல்லை- கனடா பிரதமர் ஒப்புதல்
    X

    நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக வலுவான ஆதாரங்கள் இல்லை- கனடா பிரதமர் ஒப்புதல்

    • கனடாவுக்கான இந்திய தூதரை திரும்ப பெற மத்திய அரசு முடிவு செய்தது.
    • கனடா மண்ணில் கனட நாட்டவர் ஒருவர் கொல்லப்பட்டதில் இந்திய அரசின் ஏஜெண்டுகள் ஈடுபட்டுள்ளனர்.

    ஒட்டாவா:

    கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

    இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியதால் இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த இந்தியா, ஆதாரங்களை அளிக்கும்படி கேட்டது. ஆனால் எந்த ஆதாரத்தையும் கனடா அளிக்கவில்லை.

    இதற்கிடையே இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த போவதாக கனடா தெரிவித்தது. இதனால் கனடாவுக்கான இந்திய தூதரை திரும்ப பெற மத்திய அரசு முடிவு செய்தது. மேலும் இந்தியாவில் கனடா அதிகாரிகள் 6 பேரை வெளியேற உத்தரவிட்டது.

    இந்த நிலையில் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக் கொண்டு உள்ளார்.

    இதுகுறித்து அவர் ஜனநாயகத்தில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த பொது விசாரணை ஆணையத்தில் கூறியதாவது:-

    நிஜ்ஜாா் கொலையில் இந்திய உளவாளிகளின் தொடா்பு குறித்து உளவுத் தகவலின் அடிப்படையில் குற்றச்சாட்டை முன் வைத்தேன். இதன் விசாரணையில் இந்தியாவின் ஒத்துழைப்பை எதிா்பாா்த்தோம். ஆனால், அவா்கள் தொடா்ந்து ஆதாரம் கோரி வந்தனா்.

    ஆனால் நிஜ்ஜாா் கொலையில் இந்திய உளவாளிகளின் பங்கை நிரூபிக்க எங்களிடம் வலுவான ஆதாரமில்லை. முதன்மையாக உளவுத்துறையின் தகவல் மட்டுமே இருந்தது.

    எனவே இணைந்து பணியாற்றி ஆதாரத்தைக் கண்டறியலாம் என்று தெரிவித்தோம். அதற்கு இந்தியா சம்மதிக்கவில்லை. இந்தியாவில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற 'ஜி20' உச்சி மாநாட்டின்போது இப்பிரச்சனையை கனடா எழுப்பியிருக்க முடியும்.

    ஆனால், அதை நாங்கள் தவிா்த்தோம். விசாரணைக்கு சிறிதும் ஒத்துழைக்காத இந்தியா, கனடா மீதான தாக்குதல்களைத் தொடா்ந்து வந்தது.

    பிரதமா் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்துடன் கருத்து வேறுபாடு கொண்ட கனடா நாட்டவர்கள் பற்றிய தகவல்களை இந்திய தூதர்கள் சேகரித்து இந்திய அரசு மற்றும் லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல் போன்ற கிரிமினல் அமைப்புகளுக்கு அனுப்பினர். இதில் இந்தியா ஈடுபட்டு உள்ளது என்பதை மிகவும் தெளிவாகவும், நம்ப முடியாத அளவிற்கு தெளி வாகவும் "கனடா உளவுத் துறை தெரிவித்தது. கனடா இறையான்மையை இந்தியா மீறியுள்ளது.

    கனடா மண்ணில் கனட நாட்டவர் ஒருவர் கொல்லப்பட்டதில் இந்திய அரசின் ஏஜெண்டுகள் ஈடுபட்டுள்ளனர். இது தனது அரசாங்கம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×