search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஏனாமில் அரசு பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் 4 பேர் பணி நீக்கம்
    X

    ஏனாமில் அரசு பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் 4 பேர் பணி நீக்கம்

    • போலி பி.எட். சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
    • துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் ஏனாம் பிராந்தியம் ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ளது.

    ஏனாம் பிராந்திய அரசு பணிகளில் ஆந்திர மாநில பல்கலைக்கழக கல்லூரியில் படித்தவர்கள் உள்ளனர். அரசு துறை பணிகளில் உள்ளவர்கள் போலியாக பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்று பணியில் சேர்ந்திருப்பதாக புகார்கள் வந்தது.

    இதுதொடர்பாக அவ்வப்போது துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஏனாம் அரசு பள்ளியில் பணியாற்றிய சமூக அறிவியல் ஆசிரியர் முகமதுயாகூப் போலி பி.எட். சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

    இவர் 2000-ம் ஆண்டு பி.எட். படித்ததாக சான்றிழ் அளித்துள்ளார். ஆனால் அவர் படித்த கல்லூரியில் 2003-ல் தான் பி.எட். படிப்பு தொடங்கியது என தெரியவந்துள்ளது.

    இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து ஏனாம் கல்வித்துறை அவர் மீது நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்துள்ளது.

    இதனிடையே ஏனாம் தொடக்கப் பள்ளியில் 2023-ம் முதல் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் தனலட்சுமி, வெங்கடலட்சுமி, சந்தோஷி ஆகியோர் வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வை முடிக்காததால் கோர்ட்டு உத்தரவின்படி பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×