search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி பாகூர் மூலநாதர் கோவிலில் 108 தேங்காய் உடைத்து அண்ணாமலை தரிசனம்
    X

    பாகூர் மூலநாதர் கோவிலில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தரிசனம் செய்த காட்சி.

    புதுச்சேரி பாகூர் மூலநாதர் கோவிலில் 108 தேங்காய் உடைத்து அண்ணாமலை தரிசனம்

    • கோவிலின் வரலாறு குறித்து ஆலய அர்ச்சகர்கள் சங்கர், பாபு ஆகியோர் விளக்கினர்.
    • பால விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் பாகூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட 1,400 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த வேதா அம்பிகை சமேத ஸ்ரீ மூலநாதர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் இன்று காலை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சிறப்பு வழிபாடு நடத்தி சாமி தரிசனம் செய்தார்.

    கோவிலின் வரலாறு குறித்து ஆலய அர்ச்சகர்கள் சங்கர், பாபு ஆகியோர் விளக்கினர்.

    கோவிலில் உள்ள மூலநாதர், கணபதி, முருகன், நவக்கிரகங்கள், துர்க்கை, பைரவர், பொங்கு சனி பகவான், சண்டீஸ்வரர் உட்பட தெய்வங்களை பற்றி எடுத்துக்கூறினர்.

    பின்னர் பால விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

    108 தேங்காய் உடைத்து அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் வளாகத்தை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தார்.

    இதன்பின் வேதாம்பிகை சன்னதியில் சிறிது நேரம் தியானம் செய்த பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    Next Story
    ×