search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி காங்கிரசின் கோட்டை என நிரூபித்த பாராளுமன்ற தேர்தல் முடிவு
    X

    புதுச்சேரி காங்கிரசின் கோட்டை என நிரூபித்த பாராளுமன்ற தேர்தல் முடிவு

    • கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தாலும், எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்க வைக்கும்.
    • கடந்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் காங்கிரஸ் இழந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் தேர்தலில் படுதோல்வி அடைந்தது. 15 இடங்களில் போட்டியிட்டு, லாஸ்பேட்டை, மாகி ஆகிய 2 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது.

    கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தாலும், எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்க வைக்கும். ஆனால் கடந்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் காங்கிரஸ் இழந்தது. காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தி.மு.க. 6 தொகுதியில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்தது.

    இதனால் காங்கிரஸ், தி.மு.க. இடையே யார் பெரியவர்? என்ற மோதல் கூட அவ்வப்போதுநிகழ்ந்து வந்தது. இது புதுச்சேரி காங்கிரசாரிடையே மீண்டும் தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் சிட்டிங் எம்.பி.யாக இருந்த வைத்திலிங்கம் போட்டியிட மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை காங்கிரஸ் சரியாக பயன் படுத்திக்கொண்டது. கடந்த சட்டசபை தேர்தலின்போது, காங்கிரசிலிருந்து பலரும் வெளியேறி பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரசுக்கு சென்றனர். இந்த அணியின் வெற்றிக்கும் உதவியாக இருந்தனர்.

    ஆனால் பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் காங்கிசுக்கு வாக்களித்துள்ளனர். இதன் மூலம் புதுச்சேரி காங்கிரசின் கோட்டை என்பதை வைத்திலிங்கத்தின் வெற்றி நிரூபித்துள்ளது.

    Next Story
    ×