என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
சிறுமி பாலியல் கொலை குற்றவாளி ஜெயிலில் தற்கொலை முயற்சி
- புதுச்சேரியில் போதைப்பொருளை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.
- விவேகானந்தன் சோப்பை தின்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கருணாஸ் (வயது19) மற்றும் விவேகானந்தன் (57) ஆகியோர் கைது செய்யப்பட்டு புதுச்சேரி காலாப்பட்டு மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
கஞ்சா போதையில் நடந்த இந்த படுகொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
புதுச்சேரியில் போதைப்பொருளை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.
கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை விரைவாக பெற்றுத்தர வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தியா கூட்டணி கட்சியினர், அ.தி.மு.க., சமூக நல அமைப்புகள் சார்பில் பந்த் போராட்டமும் நடத்தப்பட்டது.
இதற்கிடையே காலாப்பட்டு ஜெயிலில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகளை ஒரே அறையில் அடைத்து வைப்பது வழக்கம்.
ஆனால் அவர்களோடு சேர்த்து அடைத்து வைத்தால் சிறுமி கொலை குற்றவாளிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கருதியதால், புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் விவேகானந்தனும், கருணாசும் தனி அறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கைதி விவேகானந்தன் தனது சட்டையை கழற்றி அதில் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த அதே அறையில் இருந்த கைதி கருணாஸ் கூச்சலிட்டார்.
இதையடுத்து சிறை வார்டன்கள் ஓடி வந்து அவரை தடுத்தனர். சிறையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். ஏற்கனவே விவேகானந்தன் சோப்பை தின்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதனால் வார்டன்கள் அவரை எச்சரித்துள்ளனர். தொடர்ந்து அவர் அடைக்கப்பட்டுள்ள அறையை கண்காணித்தும் வருகின்றனர். இதனிடையே குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க இன்று புதுவை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.