search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழா: ஆரோவில்லில் போன் பயர் கூட்டு தியானம்
    X

    ஆரோவில்லில் போன் பயர் கூட்டு தியானம் நடந்த காட்சி.

    அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழா: ஆரோவில்லில் போன் பயர் கூட்டு தியானம்

    • வெளிநாட்டினர், ஆரோவில் வாசிகள், பொதுமக்கள் போன் பயரை சுற்றி அமர்ந்து கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.
    • பாரத் நிவாஸில் நடந்த 77-வது சுதந்திர தின கண்காட்சியில் ஆரோவில் வாசிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

    சேதராப்பட்டு:

    புதுவை அருகே ஆரோவில் சர்வதேச நகரம் உள்ளது.

    இங்கு ஆண்டுக்கு 3 முறை அதாவது அன்னை பிறந்த தினமான பிப்ரவரி 21, ஆரோவில் உதய தினமான பிப்ரவரி 28 அரவிந்தரின் பிறந்த தினமான ஆகஸ்டு 15 ஆகிய 3 நாட்கள் அதிகாலையில் போன் பயர் எனப்படும் வெட்டவெளியில் தீ மூட்டி வெளிநாட்டினர் மற்றும் ஆரோவில் வாசிகள் கூட்டு தியானத்தில் ஈடுபடுவது வழக்கம்.

    இன்று அரவிந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு ஆரோவில் சர்வதேச நகரத்தின் மையப் பகுதியில் உள்ள மாத்தீர் மந்திர் அருகே அமைந்த ஆம்பி தியேட்டர் வெட்ட வெளியில் பார்ன் பயர் தீ மூட்டப்பட்டது.

    இதில் வெளிநாட்டினர், ஆரோவில் வாசிகள், பொதுமக்கள் போன் பயரை சுற்றி அமர்ந்து கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆரோவில் சர்வதேச நகரம் உருவாக்கப்பட்டதின் நோக்கம் குறித்து அன்னை பேசிய பேச்சு இசையுடன் ஒளிபரப்பப்பட்டது. மூட்டப்பட்ட தீப்பிழம்பில் மாத்திர மந்திரம் பல பலவென மின்னியது. கூட்டு தியானம் முடிந்து பாரத் நிவாஸில் நடந்த 77-வது சுதந்திர தின கண்காட்சியில் ஆரோவில் வாசிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர். தொடர்ந்து பாரத் நிவாஸில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

    Next Story
    ×