search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் மீண்டும் நிறம் மாறிய கடல்: வானிலை மாற்றத்திற்கான அறிகுறியா? பொதுமக்கள் அச்சம்
    X

    புதுச்சேரியில் மீண்டும் நிறம் மாறிய கடல்: வானிலை மாற்றத்திற்கான அறிகுறியா? பொதுமக்கள் அச்சம்

    • கடல் நீர் நிறம் மாறியதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
    • கடல் நீரை சோதனைக்காக ஆராய்ச்சியாளர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அதன் அழகை ரசித்து செல்வது வழக்கம். ராக் பீச் என அழைக்கப்படும் புதுவை கடற்கரை 2 கி.மீ. தூரம் நீளம் கொண்டது. சுற்றுலா பயணிகள் மற்றும் வாக்கிங் செல்வோர் இந்த சாலையை தினசரி பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 17-ந்தேதி பழைய வடிசாராய ஆலையின் பின்புறம் உள்ள குறிப்பிட்ட பகுதியில் கடல் நீரின் செம்மண் கலரில் நிறம் மாறியிருந்தது. பிற பகுதிகளில் நீல வண்ணத்தில் இருக்கும் போது, அந்த பகுதி மட்டும் செம்மண் நிறத்தில் மாறியிருந்தது. ஒரு கிலோ மீட்டர் அளவில் குருசுகுப்பம் பகுதி வரை செம்மண் நிறமாக காட்சியளித்தது.

    இதனால் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த சுற்றுலா பயணிகள் தலைமை செயலகம் எதிரே உள்ள மணல் பரப்பில் இறங்கி, நிறம் மாறியிருந்த கடலின் அழகை புகைப்படம் எடுத்தனர்.

    கடல் நீர் நிறம் மாறியதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. அந்த நீரை சோதனைக்காக ஆராய்ச்சியாளர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் ஏற்கனவே கடல் நீர் செம்மண் கலரில் மாறியிருந்த அதே பகுதியில் மீண்டும் இன்று காலை கடல் நீர் நிறம் மாறியது. செம்மண் கலரில் மாறிய கடலை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    இதனால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    3-வது முறையாக புதுச்சேரி கடல் நிறம் மாறியதால் ஏதாவது வானிலை மாற்றம் ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×