search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் தனியார் கருத்தரிப்பு மையத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம்
    X

    புதுவையில் தனியார் கருத்தரிப்பு மையத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம்

    • சுகாதாரத்துறை ஆய்வு செய்த போது, கருத்தரிப்பு மையத்தில் வெளிப்புற சிகிச்சைக்கு மட்டுமே அனுமதி பெற்றுவிட்டு, உட்புற சிகிச்சை, பிரசவம் நடத்தியது தெரியவந்தது.
    • விசாரணை அறிக்கை கலெக்டர் வல்லவனிடம் ஒப்படைக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை சாரம் கவிக்குயில் நகரை சேர்ந்த பெருமாள்-சுலோச்சனா தம்பதிக்கு நீண்டகாலமாக குழந்தையில்லை.

    இந்த நிலையில் புதுவை இந்திரகாந்தி சதுக்கத்தில் உள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தை அணுகி சிகிச்சை பெற்றனர். 2021-ல் கருவுற்ற சுலோச்சனாவுக்கு கடந்த மார்ச் 18-ந்தேதி ஆண், பெண் என இரட்டை குழந்தை பிறந்தது. குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழ் கேட்டு மருத்துவமனையை அணுகிய போது இழுத்தடித்துள்ளனர்.

    இதனால் சுகாதாரத்துறையில் தம்பதி புகார் அளித்தனர். சுகாதாரத்துறை ஆய்வு செய்த போது, இந்த கருத்தரிப்பு மையத்தில் வெளிப்புற சிகிச்சைக்கு மட்டுமே அனுமதி பெற்றுவிட்டு, உட்புற சிகிச்சை, பிரசவம் நடத்தியது தெரியவந்தது. விசாரணை அறிக்கை கலெக்டர் வல்லவனிடம் ஒப்படைக்கப்பட்டது.

    கலெக்டர் சுகாதாரத்துறைக்கு அனுப்பிய உத்தரவின்பேரில், இயக்குனர் ஸ்ரீராமுலு தனியார் கருத்தரிப்பு மையத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் உடனடியாக உட்புற சிகிச்சைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×