search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஃபோர்டு இகோஸ்போர்ட்"

    ஃபோர்டு இகோஸ்ப்ரோர்ட் காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் டாப் என்ட் வேரியன்ட் மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ஃபோர்டு இகோஸ்போர்ட் 2018 காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் டாப்-என்ட் வேரியன்ட் டைட்டானியம் எல் பெயரில் மே 14-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அறிமுகம் செய்யப்பட்டதும் டெமோ கார்கள் கிடைக்கும் என்றும் புதிய இகோஸ்போர்ட் டைட்டானியம் எஸ் விநியோகஸ்தர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

    புதிய மாடலில் 1.0 லிட்டர் இகோபூஸ்ட் டர்போ-பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படும் என்றும் இந்த இன்ஜின் 124 பிஎஸ் மற்றும் 170 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. இதன் 1.5 லிட்டர் டிராகன் டீசல் இன்ஜின் எஸ் மாடலிலும், சிக்னேச்சர் எடிஷன் மாடலில் 1.5 லிட்டர் டிராகன் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இகோஸ்போர்ட் எஸ் மற்றும் சிக்னேச்சர் எடிஷன் மாடலில் 17 இன்ச் அலாய் வீல், சர்வதேச மாடல்களில் வழங்கப்பட்டதை போன்ற வடிவமைப்பு மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இகோஸ்போர்ட் டைட்டானியம் எஸ் மாடலில் ஸ்மோக்டு HID ஹெட்லேம்ப் மற்றும் ஃபாக் லேம்ப்கள் வழங்கப்படுகிறது. 

    இதன் ரூஃப் கருப்பு நிறத்திலும், முன்பக்க கிரில் டார்க் ஃபினிஷ் செயய்ப்பட்டுள்ளது. உள்புறம் டைட்டானியம் எஸ் மாடலில் 4.2 இன்ச் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சீட் மற்றும் டோர் ட்ரிம்களில் ஆரஞ்சு ஹைலைட்கள் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் உள்புறத்துக்கு ஏற்ப எஸ் பேட்ஜிங், புதிய சேட்டின் ஆரஞ்சு நிற பெயின்ட் செய்யப்படுகிறது.

    புதிய மாடல் அறிமுகம் செய்யப்படும் நிலையில், டைட்டானியம் பிளஸ் வேரியன்ட்-இல் 17 இன்ச் வீல்கள் நீக்கப்பட்டு 16 இன்ச் வீல்கள் வழங்கப்படும். இகோஸ்போர்ட் சிக்னேச்சர் எடிஷன் மாடலில் ஸ்பாயிலர், புளு ட்ரிம், சீட் ஸ்டிட்சிங் டீடெயில், இஎஸ்சி மற்றும் ஹில் அசிஸ்ட் (HLA) உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது. 

    இந்தியாவில் புதிய ஃபோர்டு இகோஸ்போர்ட் டாடா நெக்சன், ஹூன்டாய் கிரெட்டா மற்றும் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
    ×