search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிக விக்கெட்"

    டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார். #ENGvIND #JamesAnderson
    இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிக விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து வீரர் ஆவார். ஓவல் டெஸ்டில் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் (தவான், புஜாரா) கைப்பற்றினார். இறுதி கட்டத்தில் சமியை போல்ட் செய்த அவர் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனையை படைத்தார்.

    டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்களில் 4-வது இடத்தில் இருந்த மெக்ராத்தை (ஆஸ்திரேலியா) கீழே தள்ளி ஆண்டர்சன் அந்த இடத்தை பிடித்துள்ளார். மெக்ராத் 124 டெஸ்டில் 563 விக்கெட் எடுத்துள்ளார். ஆண்டர்சன் 143 டெஸ்டில் 564 விக்கெட் கைப்பற்றியுள்ளார். 

    சுழற்பந்து வீச்சாளர்களான முத்தையா முரளீதரன் (இலங்கை) 800 விக்கெட்டுகளுடன் முதல் இடத்திலும், ஷேன் வார்னே (ஆஸ்திரேலியா) 708 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும், அனில் கும்ளே (இந்தியா) 619 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். #ENGvIND #JamesAnderson 
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான டோனி டி20 போட்டிகளில் அதிக விக்கெட்கள் விழ காரணமாக இருந்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். #VIVOIPL #IPL2018 #MSDhoni

    புனே:

    ஐபிஎல் தொடரின் 56-வது மற்றும் கடைசி லீக் புனேயில உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 153 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. தொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணி 19.1 ஒவரில் 159 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. 

    இப்போட்டியில், பஞ்சாப் அணி பேட்டிங்கின் போது சென்னை அணியின் விக்கெட் கீப்பர் டோனி மூன்று கேட்சுகள் பிடித்தார். இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிக விக்கெட்கள் விழ காரணமாக இருந்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை டோனி படைத்தார். டோனி இதுவரை 216 விக்கெட்கள் விழ காரணமாக இருந்துள்ளார். இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கம்ரான் அக்மல் 215 விக்கெட்களுடன் இரண்டாவது இடத்திலும், இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் குமார் சங்ககாரா 202 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.



    மேலும் டி20 போட்டிகளில் அதிக கேட்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை டோனி படைத்தார். டி20 போட்டிகளில் டோனி இதுவரை 144 கேட்சுகள் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் சங்ககாரா (142), தினேஷ் கார்த்திக் (139) ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர். #VIVOIPL #IPL2018 #MSDhoni
    ×