search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிபர் ஏஞ்செலா மெர்கல்"

    பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் மரணத்தின் மீதான மர்மங்கள் தீரும் வரை சவுதிக்கு ஆயுதங்களை விற்க மாட்டோம் என ஜெர்மனியின் அதிபர் ஏஞ்ஜெலா மெர்கல் அறிவித்துள்ளார். #AngelaMerkel #Germany #Saudi #JamalKhashoggi
    பெர்லின்:

    சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் முடியாட்சியை எதிர்த்து கடுமையாக விமர்சித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்தில் கொல்லப்பட்டார். இந்த தகவலை சமீபத்தில் சவுதி அரசு உறுதி செய்தது.

    இதனை அடுத்து, சவுதிக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் அழுத்தம் கொடுக்க துவங்கியுள்ளனர். பத்திரிகையாளரின் மரணத்துக்கு முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.



    அதன் ஒருபகுதியாக செக் குடியரசின் பிரதமர் ஆண்ட்ரெஜ் பேபிஸ் உடன் ஜெர்மனி அதிபர் ஏஞ்செலா மெர்கல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் படுகொலை குறித்து முழுமையான விசாரணை நடத்தி, கொலையில் உள்ள மர்மங்கள் நீக்கப்படும் வரையில் சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யப்போவது இல்லை என தெரிவித்துள்ளார்.

    480 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான ஆயுதங்களை சவுதிக்கு ஏற்றுமதி செய்ய கடந்த மாதம் ஜெர்மனி ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. #AngelaMerkel #Germany #Saudi #JamalKhashoggi
    ×