search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிபர் டொனால்ட் டிரம்ப்"

    வடகொரியாவின் குறைந்த தூர ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    டோக்கியோ:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளார்.  அங்கு அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேசவுள்ளார்.

    இந்நிலையில், வடகொரியாவின் குறைந்த தூர ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சிறிய ரக ஆயுதங்களை வடகொரியா பரிசோதனை செய்துள்ளது.  இதனால் என்னுடைய நிர்வாகத்தில் உள்ள சிலர் மற்றும் வேறு சிலருக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.  
    ஆனால் எனக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை.  கிம் எனக்கு அளித்த வாக்குறுதியை காத்திடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என பதிவிட்டுள்ளார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இடையிலான சந்திப்பில், வடகொரிய விவகாரம், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் ஈரான் விவகாரம் ஆகியவை விவாதிக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்தது.
    ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்கும் மோடியை சந்திக்கிறார்.
    வாஷிங்டன்:

    சமீபத்தில் நடைபெற்ற இந்திய பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

    அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ள மோடிக்கு பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்கும் மோடியை சந்திக்கிறார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.



    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜப்பானில் ஜூன் மாதம் 28, 29ம் தேதிகளில் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்கிறார். அப்போது அவர் இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்க உள்ள மோடியை சந்திக்கிறார் என தெரிவித்துள்ளது.

    தேர்தலில் அபார வெற்றி பெற்று தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றிய பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    அமெரிக்க பாராளுமன்றத்தில் டிரம்ப் உரையின் போது தூங்கி கொண்டிருந்த ஜோசுவா டிரம்ப்க்கு இணையதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. #JoshuaTrump #Trump
    வாஷிங்டன்:

    அமெரிக்க பள்ளி ஒன்றில் ஜோசுவா டிரம்ப் என்ற 11 வயது சிறுவன் படித்து வருகிறான்.

    அமெரிக்க அதிபரின் பெயர் இந்த சிறுவனுக்கும் சூட்டப்பட்டு இருந்ததால் சிறுவனை சக மாணவர்கள் கிண்டலடித்து வந்தனர்.

    இதனால் கடும் மன உளைச்சலில் தவித்து வந்தான். மேலும் அவனை மாணவர்கள் கிண்டலடிப்பது தொடர்ந்து அதிகரித்து வந்தது.

    இந்த பிரச்சினையால் அந்த சிறுவனையே பள்ளி நிர்வாகம் நீக்கப்போவதாக அறிவித்தது.

    இந்த சிறுவன் விவகாரம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் டிரம்பின் கவனத்துக்கும் இது வந்தது.

    அமெரிக்க அதிபர் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க கூட்டு பாராளுமன்ற கூட்டத்தில் உரை நிகழ்த்துவது வழக்கம்.

    இந்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அதிபர் தரப்பில் இருந்து சிறப்பு அழைப்பாளர்களை பாராளுமன்றத்துக்கு வரவழைக்கலாம். அதன்படி அதிபர் டிரம்ப் தனது மனைவி உள்பட 13 பேரை அழைத்திருந்தார்.

    அதில், சிறுவன் ஜோசுவா டிரம்பும் ஒருவன். சக மாணவர்கள் கேலி- கிண்டலால் பாதிக்கப்பட்டு இருந்த அவனை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் சிறுவனை டிரம்ப் அழைத்திருந்தார்.

    பாராளுமன்றத்தில் டிரம்ப் தீவிரமாக உரை நிகழ்த்தி கொண்டு இருந்தார். ஆனால், அந்த சிறுவன் அதை கண்டுகொள்ளவே இல்லை. தனது இருக்கையில் அமர்ந்து நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தான்.



    இந்த புகைப்படம் ஊடகங்களில் வெளியானது. அந்த படத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் பரவ விட்டு இது சம்பந்தமாக விமர்சனமும் செய்து இருக்கிறார்கள்.

    டிரம்ப் உரையில் எதுவும் இல்லாததால் சிறுவன் தூங்கி விட்டான் எனவும், டிரம்ப் உரை தூங்குவதற்குத்தான் உதவும் என்று பலவாறு கிண்டலடித்து அந்த படத்துக்கு கருத்து கூறி தகவல் வெளியிட்டுள்ளனர்.

    மேலும் டிரம்ப் உரையின் போது தூங்கியதற்கான அந்த சிறுவனுக்கு பாராட்டும் தெரிவித்து இருக்கிறார்கள்.

    அமெரிக்காவில் இந்த வி‌ஷயம் பரபரப்பாக பேசப்படும் ஒன்றாக மாறி இருக்கிறது. #JoshuaTrump #Trump
    அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் சந்திப்பு நடைபெறும் என நம்புவதாக வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். #DonaldTrump #KimJongUn
    வாஷிங்டன்:

    வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.
     
    இதற்கிடையே, டிரம்ப் - கிம் சந்திப்பு சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி நடைபெற்றது. அப்போது இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டனர்.



    அப்போது, தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுத சோதனைக் கூடங்களை அழித்து விடுவோம். இனி அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ள மாட்டோம் என்று வடகொரியா அறிவித்தது. அதேபோல், அமெரிக்காவும் வடகொரியா மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்குவதாக அறிவித்திருந்தது.

    இந்நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் சந்திப்பு நடைபெறும் என நம்புவதாக வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். அப்போது, இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். #DonaldTrump #KimJongUn
    அமெரிக்க செனட் சபையில் பேசிய அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபருடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி என தெரிவித்துள்ளார். #Trump #NorthKoreaIssue
    வாஷிங்டன்:

    எலியும் பூனையுமாக கடந்த பல ஆண்டுகளாக இருந்த அமெரிக்கா - வடகொரியா சமீபத்திய சிங்கப்பூர் சந்திப்புக்கு பிறகு நண்பர்களாக மாறியுள்ளது.

    ஏவுகணை மனிதர் என டிரம்ப்பால் விமர்சிக்கப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், கடந்த 12-ம் தேதி சிங்கப்பூரில் டிரம்பை சந்தித்து பேசினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு உலக தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

    இந்நிலையில், வடகொரியா அதிபருடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.  

    கிம்முடனான சந்திப்புக்கு பிறகு அமெரிக்காவின் வாஷிங்டன்னில் செனட் சபை நேற்று கூடியது. அதில் அதிபர் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது பேசிய டிரம்ப், வடகொரியா அதிபர் கிம்முடனான சந்திப்பு மிக பெரிய வெற்றியாக அமைந்து விட்டது. அந்த சந்திப்பு மறக்க முடியாத அனுபவத்தை தந்துள்ளது.

    இரு நாடுகளுக்கு இடையே நல்ல உறவு நிலவி வருகிறது. வடகொரியா அறிவித்தபடி ஏற்கனவே இயங்கி வந்த அணு ஆயுத சோதனை மையங்களை அழித்துள்ளது. அணு ஆயுத ஏவுகணை சோதனைகளையும் நிறுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். #Trump #NorthKoreaIssue
    ×