search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுமதி தரக்கூடாது"

    ரெயில் நிலையங்களில் உணவகம் நடத்த குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அனுமதி தரக்கூடாது. அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    இந்தியாவில் உள்ள ரெயில் நிலையங்களில் உணவகம் நடத்த ரெயில்வே நிர்வாகம் லைசென்ஸ் வழங்குகிறது. ஈரோடு ரெயில் நிலையத்தில் உணவகம் நடத்த பி.கே.அமினா என்பவருக்கு ரெயில்வே நிர்வாகம் லைசென்ஸ் வழங்கியது. லைசென்ஸ் காலம் முடிவடைந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் புதுப்பிக்கப்பட்டது.

    இந்தநிலையில், மீண்டும் லைசென்சை புதுப்பிக்கக்கோரி அமினா, ரெயில்வே துறையை நாடினார். அவரது கோரிக்கையை ரெயில்வே நிர்வாகம் எதிர்த்தது. இதைத்தொடர்ந்து அவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோர், ‘ரெயில் நிலையங்களில் உணவகம் நடத்த குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அனுமதி தரக்கூடாது. அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். மனுதாரருக்கு ஏற்கனவே ஒருமுறை லைசென்ஸ் புதுப்பிக்கப்பட்டுள்ளது’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 
    ×