search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்"

    நாட்டில் ஷரியத் நீதிமன்றங்களை அமைப்பது தொடர்பாக டெல்லியில் அனைத்து இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. #AIMPLB
    புதுடெல்லி:

    ஷரியத் நீதிமன்றங்களின் நோக்கம் இதர நீதிமன்றங்களை அனுகாமல், ஷரியத் சட்ட திட்டப்படி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாகும். தற்போது உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் 40 ஷரியத் நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதேபோல் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஷரியத் நீதிமன்றங்களை அமைக்க ஆலோசித்து வருவதாக அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவித்து இருந்தது.

    இந்நிலையில், அதற்கான ஆலோசனைக்கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் மூத்த உறுப்பினர் ஜபர்யாப் ஜிலானி, பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் ஷரியத் நீதிமன்றங்கள் தொடர்பான விஷயத்தில் ஆலோசனை செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.

    மேலும், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஷரியத் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கூறவில்லை எனவும், எங்கு தேவை இருக்கிறதோ அங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றே அறிவித்து இருந்ததாக குறிப்பிட்டார்.

    தொடர்ந்து பேசிய அவர், அனைத்து இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவதாகவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பயிற்சி வகுப்புகளை நடத்தி வருவதாகவும் கூறினார். #AIMPLB
    ×