search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமலாக்கத்துறை விசாரணை"

    தமிழகத்தில் குட்கா ஊழல் தொடர்பான விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. #GutkhaScam #EDProbe
    சென்னை:

    தமிழகத்தில் குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. புகாரில் சிக்கியுள்ள அமைச்சர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த, முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், குட்கா ஊழல் நடந்தபோது உள்ள அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் விவரங்களை வெளியிட்டார்.


    அந்த விவரங்களை தருமாறு ஜார்ஜிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது. 2011 முதல் 2015 வரையிலான கால கட்டத்தில் பணிபுரிந்ததாக பல்வேறு அதிகாரிகளின் பெயர்களை ஜார்ஜ் வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. #GutkhaScam #EDProbe
    பிட்காயின் மோசடி வழக்கு தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டி கணவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்தனர். #Bitcoin #ShilpaShetty
    மும்பை:

    ஆன்லைன் மூலம் ‘பிட்காயின்’ எனப்படும் மெய்நிகர் கரன்சி புழக்கத்தில் உள்ளது. இதில் பலர் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த பரிமாற்றம் சட்டவிரோதமானது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

    இதற்கிடையே, ‘பிட்காயின்’ முதலீட்டாளர்களிடம் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக அமித் பரத்வாஜ் என்பவர் உள்பட 9 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுபற்றிய விசாரணையில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பு இருப்பதற்கான சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

    இதன் அடிப்படையில், விசாரணைக்கு வருமாறு ராஜ் குந்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதை ஏற்று, மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராஜ் குந்த்ரா நேற்று ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
    ×