என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அமெரிக்கா துப்பாக்கி சூடு"
வாஷிங்டன்:
அமெரிக்காவில் பால்டி மோர் நகரில் யூதர்களின் பாரம்பரிய விழா நடை பெற்றது. அதையொட்டி அங்கு இசை நிகழ்ச்சி நடந்தது. அதை ஏராளமானவர்கள் ரசித்து பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் சர்வாதிகாரி ஹிட்லர் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினார். அதே நேரத்தில் வெளியே துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது.
இதனால் பீதி அடைந்த மக்கள் அங்கிருந்து தப்பி வெளியேற முயன்றனர். பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் முண்டியடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.
கலிபோர்னியா மது பாரில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பிட்ஸ்பர்க் நகரில் யூதர்களின் இசை நிகழ்ச்சி யில் முன்னாள் கடற்படை வீரர் சுட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். மதவெறி காரணமாக இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றது.
அது போன்று இங்கும் யூதர்களுக்கு எதிரான மத வெறி தாக்குதல் நடைபெறும் என்ற எண்ணத்தில் மக்களிடையே பீதி ஏற்பட்டது.
அங்கு போலீசார் வர வழைக்கப்பட்டனர். அவர்கள் கூட்டத்தில் டிரம்பை வாழ்த்தி கோஷமிட்ட நபரை பிடித்து சென்றனர். ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. வழக்கும் பதிவு செய்யவில்லை. கூச்சலிட்ட நபரின் பெயரும் வெளியிடப்படவில்லை. #Americashot
நியூயார்க்:
அமெரிக்காவில் நியூ ஓர்லன்ஸ் புறநகரில் பிரபலமான மது பார் உள்ளது. நேற்று அங்கு பலர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது மர்ம நபர்கள் 2 பேர் மது பாருக்குள் நுழைந்தனர். கோட்டுடன் தொப்பியுடன் கூடிய உடை அணிந்து இருந்தனர். அவர்கள் யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென சரமாரியாக சுட்டனர்.
இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. மது பாரில் இருந்தவர்கள் உயிர் பிழைக்க ஓட்டம் பிடித்தனர். ஓடிச் சென்று மறைவிடங்களில் பதுங்கினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் குண்டு பாய்ந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். அவர்களில் 2 பேர் ஆண்கள், ஒருவர் பெண் ஆவார். இவர்கள் தவிர 7 பேருக்கும் குண்டு காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் அனைவரும் நியூ ஓர்லியன்ஸ் நகரில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது மர்ம நபர்கள் 10 பேரை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எனவே, முன்விரோதம் காரணமாக இத்தாக்குதல் நடந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. அந்த கோணத்திலும் விசாரணை நடக்கிறது. #gunfiring
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்