என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அமெரிக்கா ராணுவம்
நீங்கள் தேடியது "அமெரிக்கா ராணுவம்"
சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு அருகே தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 60க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.#SomaliaMilitants
மொகடிஷு:
சோமாலியா நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு பயங்கரவாதிகளான அல் ஷபாப் குழுக்கள் ஏராளமாக இயங்கி வருகின்றன. சோமாலியா அரசை கவிழ்த்துவிட்டு மிகவும் கண்டிப்பு நிறைந்த இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவ வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக உள்ளது.
உள்நாட்டு ராணுவ வீரர்கள் மீது அவ்வப்போது அதிரடியாக தாக்குதல் நடத்திவரும் இந்த பயங்கரவாதிகள் மத்திய ஆப்பிரிக்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் பன்னாட்டு அமைதிப் படையினரையும் கொன்று குவிக்கின்றனர்.
இந்நிலையில், சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு அருகேயுள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது நேற்று சோமாலியா அரசு படைகளுடன் இணைந்து அமெரிக்கா ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 60-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பெண்டகனில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. #SomaliaMilitants
உத்தரகாண்ட் மாநிலத்தின் சவுபாட்டியா காட்டுப்பகுதியில் 14 நாட்களாக நடைபெற்றுவந்த இந்தியா - அமெரிக்கா கூட்டுப் போர் பயிற்சி இன்றுடன் நிறைவடைந்தது. #YudhAbhyasconcludes
புதுடெல்லி:
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அடர்த்தியான காட்டுப்பகுதிகளை ஒட்டியுள்ள சவுபாட்டியா மலையடிவாரத்தில் இந்தியா - அமெரிக்கா ராணுவத்தை சேர்ந்த கூட்டுப் படைகள் கடந்த 16-ம் தேதியில் இருந்து கடுமையான போர் பயிற்சி மேற்கொண்டு வந்தன.
கடந்த 2004-ம் ஆண்டில் இந்தியா - அமெரிக்கா இடையிலான பாதுகாப்புத்துறை தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட ‘யுத் அப்யாஸ்’ ஒப்பந்தத்தின்படி நான்காவது முறையாக நடைபெற்ற இந்த போர் பயிற்சியில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ஒன்றாவது பட்டாலியன் படைப்பிரிவு வீரர்களும், அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த 23-வது பட்டாலியன் படைப்பிரிவு வீரர்களும் பங்கேற்றனர்.
தற்போது நடைபெற்ற யுத் அப்யாஸ்-2018’ பயிற்சியின்போது மறைந்திருந்து தாக்குதல், மலையேற்றம் போன்ற பல்வேறு கடுமையான பயிற்சிகளை இருநாட்டு வீரர்களும் மேற்கொண்டனர். மலைகளின் மீதேறி எதிரிப் படைகளின் பதுங்குக்குழிகளை அழிப்பதற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.
அமெரிக்க ராணுவ மேஜர் வில்லியம் கிரஹாம் மற்றும் இந்தியாவின் மேஜர் ஜெனரல் கபீந்திரசிங் உள்ளிட்டோர் இந்தப் பயிற்சிகளை பார்வையிட்டு வந்தனர்.
இந்நிலையில், 14 நாட்களாக நடைபெற்றுவந்த கூட்டுப் போர் பயிற்சி இன்று (சனிக்கிழமை) நிறைவடைந்தது. #YudhAbhyasconcludes
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X