என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி
நீங்கள் தேடியது "அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி"
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று முடிவின்படி 1191 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் உள்ளார்.
கரூர் :
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இத்தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் செந்தில்நாதன், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அ.ம.மு.க. சார்பில் சாகுல் அமீது, நாம் தமிழர் கட்சி சார்பில் செல்வம், மக்கள்நீதி மய்யம் கட்சி சார்பில் மோகன் ராஜ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 63 பேர் போட்டியிட்டனர்.
மொத்தமுள்ள 2 லட்சத்து 5 ஆயிரத்து 273 வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 81 ஆயிரத்து 143 பேரும், பெண் வாக்காளர்கள் 91 ஆயிரத்து 972 பேரும் என மொத்தம் 1 லட்சத்து 73 ஆயிரத்து 115 பேர் வாக்களித்தனர். இது 84.33 சதவீதம் ஆகும்.
இன்று காலை வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அடுத்ததாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
முதல் சுற்று வாக்கு விபரம் வருமாறு:-
செந்தில்பாலாஜி (தி.மு.க.)-5,102
செந்தில்நாதன் (அ.தி.மு.க.)-3,911
சாகுல் அமீது (அ.ம.மு.க.)-347
செல்வம் (நாம் தமிழர்)-91
மோகன்ராஜ் (மக்கள் நீதி மய்யம்)-57
முதல் சுற்று முடிவின் படி 1191 வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில்பாலாஜி முன்னிலையில் இருந்தார்.

வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு கரூர் தளவாபாளையம் குமாரசாமி என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.
இன்று காலை வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அடுத்ததாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
முதல் சுற்று வாக்கு விபரம் வருமாறு:-
செந்தில்பாலாஜி (தி.மு.க.)-5,102
செந்தில்நாதன் (அ.தி.மு.க.)-3,911
சாகுல் அமீது (அ.ம.மு.க.)-347
செல்வம் (நாம் தமிழர்)-91
மோகன்ராஜ் (மக்கள் நீதி மய்யம்)-57
முதல் சுற்று முடிவின் படி 1191 வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில்பாலாஜி முன்னிலையில் இருந்தார்.
×

X