search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரியலூர் விபத்து"

    • வசந்த் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக ஜெயங்கொண்டத்திலிருந்து சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது.
    • விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியை ஒட்டிய ஆமணக்கதோண்டி என்ற இடத்தை சேர்ந்தவர் வீரப்பெருமாள்(வயது 75). இவர் தனது வீட்டில் இருந்து அருகிலுள்ள கடைக்கு சைக்கிளில் சென்றார்.

    சாலையை கடக்க முயன்ற போது எதிரே ஜெயங்கொண்டம் அடுத்த கல்லேரி கிராமம் கோவில் தெருவை சேர்ந்த வசந்த் (35) என்பவர் இவர் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக மோட்டாசைக்கிளில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தார்.

    எதிர்பாராதவிதமாக சாலையை கடக்க நின்று கொண்டிருந்த வீரபெருமாள் மீது மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வீரபெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    வசந்த் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக ஜெயங்கொண்டத்திலிருந்து சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது. இதில் வசந்த் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார், அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி வசந்த் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் வீரபெருமாள், வசந்த் ஆகியோரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மருவத்தூர் தாண்டி சென்றபோது அங்கே நடுரோட்டில் டயர் வெடித்து நின்ற டிராக்டரில் மோதி விபத்து ஏற்பட்டது.
    • விபத்து குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் விசாரணை நடத்தி டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் பாக்கியராஜ் (வயது38). இவர் மாணவர் விடுதியில் சமையலராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று இரவு செந்துறையில் இருந்து தனது பைக்கில் ஊருக்கு புறப்பட்டார். வழியில் விழுப்பணங்குறிச்சி கிராமத்தில் சித்தாள் வேலை செய்து கொண்டிருந்த அவரது உறவினர்களான சுரேஷ் மனைவி அமுதா (33) மற்றும் பரமசிவம் மனைவி அமராவதி (30) ஆகிய 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.

    பின்னர் அவர்கள் 2 பேரையும் தனது பைக்கில் அழைத்து கொண்டு ஊருக்கு சென்று கொண்டு இருந்தார்.

    மருவத்தூர் தாண்டி சென்றபோது அங்கே நடுரோட்டில் டயர் வெடித்து நின்ற டிராக்டரில் மோதி விபத்து ஏற்பட்டது.

    இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம்அடைந்தனர். தகவல் அறிந்த உறவினர்கள் அவர்களை மீட்டு செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கே சிகிச்சை பலனின்றி அமுதா பரிதாபமாக உயிரிழந்தார்.

    பின்னர் பாக்கியராஜ் மற்றும் அமராவதி ஆகியோரை மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாக்கியராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அவரது உடலை மீண்டும் செந்துறை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் விசாரணை நடத்தி டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே பாக்கியராஜின் உறவினர்கள், செந்துறை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை. அதனால் சிகிச்சைக்காக கொண்டு வந்தவர்கள் உயிர் இழந்தனர். மருத்துவமனையில் போதி மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை நியமித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு கொடுக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதனைத் தொடர்ந்து செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷ் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன் பின்னர் போலீசாரே உடலை ஆம்புலன்சில் ஏற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ஜெயங்கொண்டம் அருகே இன்று காலை லாரி மீது பஸ் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். 10 பேர் காயம் அடைந்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    சென்னை கோயம்பேட்டில் இருந்து தஞ்சாவூர் நோக்கி நேற்றிரவு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை தஞ்சாவூர் அய்யம்பேட்டையை சேர்ந்த குமார் (வயது 46) என்பவர் ஓட்டினார். நடத்துனராக அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் பணியில் இருந்தார். பஸ்சில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    இன்று அதிகாலை 4.30 மணியளவில் அந்த பஸ் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த காரைக்குறிச்சி கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தது.

    அப்போது சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக அரசு பஸ் வேகமாக மோதியது. இதில் சென்னை கொரட்டூரில் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வரும் ரகுபதி (67) என்பவர் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே வந்து சாலையில் விழுந்து பரிதாபமாக இறந்தார். மேலும் 10 பேர் காயம் அடைந்தனர்.

    அதிகாலை நேரம் என்பதால் இந்த விபத்து நடந்த போது பஸ்சில் பயணிகள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். பஸ் விபத்தில் சிக்கியதும் அனைவரும் அலறினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்த ஹரிகரன் (12), மகேஸ்வரி (22), பாலாஜி, அமுதா, ராஜேஸ்வரி, யுவராஜ் உள்ளிட்ட 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தில் பலியான ரகுபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை கோயம்பேடு, எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்த ரகுபதி தனது மனைவி விஜயகுமாரி மற்றும் 2-வது மகள் லாவண்யா, பேத்தி மவுலிகாவுடன் தஞ்சாவூரில் உள்ள மூத்த மகள் வீட்டிற்கு புறப்பட்டு வந்துள்ளார். லாவண்யாவுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த ரகுபதி அவருக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக தஞ்சை வந்ததாகவும் தெரியவந்தது.
    அரியலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் முதியவர்-மருத்துவமனை ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கீழப்பளூர் வாளகுடியை சேர்ந்தவர் தனபால் (வயது 61). இவரது மனைவி பானுமதி. இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இன்று காலை ஏலாக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். சத்திரத்து ஏரி - ஆண்டவர் கோவில் இடையே செல்லும் போது ஏலாக்குறிச்சி தனியார் மருத்துவமனை ஊழியர் ஞானபிரகாசம் (55) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், தனபால் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின. இதில் தனபால், ஞானபிரகாசம் ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் திருமானூர் போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த பானுமதி சிகிச்சைக்காக தஞ்சைஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து திருமானூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×