என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி
நீங்கள் தேடியது "அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி"
ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பி வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்கள் என்று அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி கூறி உள்ளார். #ADMK #Rathinasabapathy
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-
அரசுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அ.தி.மு.க. அரசை ஊழல் அரசு என்று பேசி வருவதாகவும், நான் உள்பட 4 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாகவும் தினந்தோறும் பத்திரிகை, தொலைக்காட்சி செய்திகளில் மட்டுமே வருகிறது.
இதுவரை எனக்கு விளக்கம் கேட்டு எந்த ஒரு நோட்டீசும் வரவில்லை. அப்படி நோட்டீஸ் வந்தால் என்னையும் சேர்த்து 4 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பேன்.
அ.தி.மு.க. என்பது ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்று முதலில் வலியுறுத்தியவன் நான் தான். எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, அம்மாவால் கட்டிக்காக்கப்பட்டு இன்று தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்சி உடையக் கூடாது என்று முதல் குரல் கொடுத்தவனும் நான் தான்.
பிரச்சினை எழுந்தபோது தற்போதைய ஆட்சி பலமாக இருந்ததால் நான் கூறியதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கேட்கவில்லை. ஆனால் இன்றைய நிலையில் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் பிரிந்து சென்ற அ.தி.மு.க.வினர் மீண்டும் திரும்பி வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்கள்.
அதற்கான காலம் கடந்து விட்டது. மீண்டும் அனைவரும் ஒன்று சேருவார்கள் என்ற நிலை இனியும் வராது என்று தான் நினைக்கிறேன். ஏனென்றால் கட்சியை காப்பாற்றி தமிழக மக்களுக்கு நல்லதொரு ஆட்சியை வழங்கவேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக தோன்றவில்லை. அதையும் தாண்டி முதல்வரின் வேண்டுகோளை ஏற்று அனைவரும் ஒன்று சேர்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Rathinasabapathy

இன்று மக்கள் செல்வாக்கு என்பது டி.டி.வி.தினகரனுக்கு மட்டும்தான் இருக்கிறது. எனவே அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்று தெரிவித்து வருகிறேன். பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த அ.தி.மு.க.வினரின் விருப்பம்.
பிரச்சினை எழுந்தபோது தற்போதைய ஆட்சி பலமாக இருந்ததால் நான் கூறியதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கேட்கவில்லை. ஆனால் இன்றைய நிலையில் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் பிரிந்து சென்ற அ.தி.மு.க.வினர் மீண்டும் திரும்பி வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்கள்.
அதற்கான காலம் கடந்து விட்டது. மீண்டும் அனைவரும் ஒன்று சேருவார்கள் என்ற நிலை இனியும் வராது என்று தான் நினைக்கிறேன். ஏனென்றால் கட்சியை காப்பாற்றி தமிழக மக்களுக்கு நல்லதொரு ஆட்சியை வழங்கவேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக தோன்றவில்லை. அதையும் தாண்டி முதல்வரின் வேண்டுகோளை ஏற்று அனைவரும் ஒன்று சேர்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Rathinasabapathy
×

X