search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்கானிஸ்தான் அணி"

    உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க மட்டுமே வரவில்லை. மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் எச்சரித்துள்ளார். #CWC2019 #WorldCup2019
    இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் வருகிற 30-ந்தேதி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. ஜூலை 14-ந்தேதி வரை நடக்கும் இந்தத் தொடரில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்றில் சிறப்பாக விளையாடி ஆப்கானிஸ்தான் அணி இடம்பிடித்தது.

    அந்த அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக ரஷித் கான் உள்ளார். ஐசிசி தரவரிசையில் டி20 கிரிக்கெட்டின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக இருக்கும் ரஷிகத் கான், உலகக்கோப்பையில் விளையாடும் முன்னணி அணிகளுக்கு எங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடுவது குறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘நாங்கள் இந்த உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடுவது அவசியமானது. உலகக்கோப்பையைில் சும்மா வந்து கலந்து கொண்டு பின்னர் சொந்த நாடு திரும்ப வேண்டும் என்பதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் ஒரு அணியாக சரியான திட்டமிடுதலுடன் இங்கிலாந்து செல்வோம்.



    உலகக்கோப்பை தொடரில் விளையாடும் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடியதால், உலகக்கோப்பைக்கு தயாராக ஐபிஎல் மிகச்சிறந்த தொடராகும். தலைசிறந்த பயிற்சியாளர்கள் நம்மீது அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். இது எனக்கு மிகப்பெரிய சந்தோசத்தை கொடுத்துள்ளது. மிகவும் சந்தோசமாக ஐதராபாத் அணியில் விளையாடுகிறேன். ஏராளமான நேர்மறையான விஷயங்களை கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அதை உலகக்கோப்பைக்கு எடுத்துச் செல்வேன்.
    ×