search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்திரேலிய அரசு"

    இந்தியாவில் இருந்து குழந்தைகளை தத்தெடுக்க விதிக்கப்பட்ட தடையை 8 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அரசு நீக்கியுள்ளது. #IndianChildren #ChildrenAdoption
    சிட்னி:

    இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுத்து வந்தனர். இந்த நிலையில் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குழந்தைகள் கடத்தப்படுவதாக புகார்கள் வந்தன.

    இதனால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் கூட இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குழந்தைகளை தத்தெடுத்து வர தடை விதிக்கப்பட்டது.

    இதற்கிடையே இந்தியாவில் 2015-ம் ஆண்டு சிறுவர்கள் நீதி சட்டம் இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டில் தத்தெடுத்தல் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன.

    இந்த நிலையில் குழந்தைகள் தத்தெடுக்க மீண்டும் அனுமதிப்பது குறித்து இந்தியா - ஆஸ்திரேலியா அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தின. அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.


    இதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து குழந்தைகளை தத்தெடுக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட உள்ளது.

    இந்த தகவலை ஆஸ்திரேலிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  #IndianChildren #ChildrenAdoption
    ×