என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இங்கிலாந்து ஊடகங்கள்
நீங்கள் தேடியது "இங்கிலாந்து ஊடகங்கள்"
லண்டனில் ஒரு கண்காட்சி திறப்பு விழாவுக்கு தனது கருப்பு நிற காரில் வந்த இளவரசி மேகன் மார்க்கல் கார் கதவை தானே சாத்திய நிகழ்வு வெளிநாட்டு ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்துள்ளது. #MeghanMarkle
லண்டன்:
நாம் காரில் இருந்து இறங்கியவுடன், கார் கதவை நாமே சாத்துவது அனிச்சை செயலான ஒன்று.
ஆனால், இங்கிலாந்து இளவரசி மேகன் மார்க்கல், கார் கதவை அவரே சாத்தியது, இங்கிலாந்து மக்களை அதிர்ச்சியிலும், பிரமிப்பிலும் ஆழ்த்தி உள்ளது. இங்கிலாந்து பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாகவும் ஆகி உள்ளது.
ஏனென்றால், பாதுகாப்பு காரணங்களுக்காக, அரச குடும்பத்தினர், கார் கதவை தாங்களே சாத்துவது இல்லை.
இளவரசர் சார்லஸின் மகன் இளவரசர் ஹாரியை மணந்தவர்தான், மேகன் மார்க்கல். அவருக்கு வயது 37. அமெரிக்க நடிகையாக இருந்தவர்.
சமீபத்தில், லண்டனில் ஒரு கண்காட்சி திறப்பு விழாவுக்கு தனது கருப்பு நிற காரில் அவர் வந்தார். அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இளவரசியை கைகுலுக்கி வரவேற்ற ஒருவர், அவரது கார் கதவை மூட முனைந்தார். அந்த வினாடி, சற்றும் எதிர்பாராமல், இளவரசியே கார் கதவை சாத்தி விட்டார். அந்த நபர், கையை சடாரென்று விலக்கிக்கொண்டு, ஆச்சரியத்தில் வாய் பிளந்தார்.
இந்த நிகழ்வுதான், புகழ்பெற்ற பி.பி.சி., சன், டெய்லி மெயில் உள்ளிட்ட ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்துள்ளது. இந்த வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. அத்துடன், நாடு முழுவதும் விவாதப்பொருளாகவும் ஆகி உள்ளது.
இங்கிலாந்து அரச குடும்பத்தினரின் ஒவ்வொரு அசைவையும் கவனிப்பதற்கு என்றே ஒரு சாரார் இங்கிலாந்தில் உள்ளனர். அவர்கள், இளவரசி மேகன் மார்க்கலையும் கவனித்து வருகிறார்கள். அவர் எவ்வித பாசாங்கும் இல்லாமல், எளிமையாக இருப்பார் என்று அவர்கள் கணித்துள்ளனர்.
அரண்மனை தொடர்பான செய்திகளை சேகரிக்கும் பத்திரிகையாளர்களில் ஒருவர், “வெல்டன் மேகன்” என்று எழுதி உள்ளார். மற்றொருவர், “இளவரசி மேகன் எந்த மரபையும் மீறவில்லை. அவர் பழக்க தோஷத்தில்தான் கதவை மூடி உள்ளார்” என்று எழுதி உள்ளார். #MeghanMarkle

×

X