search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து கால்பந்து அணி"

    2-வது இடம் பிடித்தால் அரையிறுதி வரை எளிதாக இருக்கும் என்பதால் இங்கிலாந்து, பெல்ஜியம் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது. இன்று ‘ஜி’ மற்றும் ‘எச்’ பிரிவில் இடம்பிடித்துள்ள 8 அணிகள் தங்கள் கடைசி லீக் ஆட்டத்தில் மோதுகின்றன.

    ‘ஜி’ பிரிவில் நடைபெறும் ஒரு ஆட்டத்தில் இங்கிலாந்து - பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகள் மூலம் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. இங்கிலாந்து 8 கோல்கள் அடித்துள்ளது. 2 கோல்கள் வாங்கியுள்ளது. பெல்ஜியமும் அதேபோன்றுதான். இரு அணிகளுக்கு இடையிலான மஞ்சள் அட்டை வாங்கிய வித்தியாசம் அடிப்படையில் இங்கிலாந்து முதல் இடம் பிடித்துள்ளன.



    இன்றைய போட்டி டிராவில் முடிந்தால் இங்கிலாந்து முதல் இடத்தில் நீடிக்க வாய்ப்புள்ளது. பெல்ஜியம் 2-வது இடம்பிடிக்கும். ஆனால் ‘ஜி’ பிரிவில் முதல் இடம் பிடித்தால் அடுத்த சுற்றுகள் கடினமாக இருக்கும். அதேவேளையில் 2-வது இடம் பிடித்தால் எளிதாக இருக்கும் வகையில் அட்டவணை உள்ளது.

    இங்கிலாந்து, பெல்ஜியத்தில் 2-வது இடம் பிடிக்கும் அணி நாக்அவுட் சுற்றில் கொலம்பியா, ஜப்பான் அல்லது செனகல் அணியை எதிர்கொள்ள வேண்டும். காலிறுதியில் சுவிட்சர்லாந்து அல்லது ஸ்வீடனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அரையிறுதியில் ஸ்பெயின், ரஷியா, குரோசியா அல்லது டென்மார்க் ஆகியவற்றில் ஒரு அணியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.



    விளையாட்டில் விட்டுக்கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகும். அதுவேளையில் எளிதாக இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்ற விருப்பமும் இருக்கும். இதனால் இரண்டு அணிகளுக்கும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
    உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - அர்ஜென்டினா அணிகள் மோதும் என பெக்காம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்த அணிதான் இறுதிப் போட்டிக்கு முன்னேறும், இந்ததெந்த அணிகள்தான் கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ளது என்று முன்னாள் நட்சத்திர வீரர்கள் கணித்து வருகிறார்கள். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான டேவிட் பெக்காம், இங்கிலாந்து - அர்ஜென்டினா அணிகள்தான் இறுதிப் போட்டியில் மோதும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டேவிட் பெக்காம் கூறுகையில் ‘‘அர்ஜென்டினா இங்கிலாந்தை எதிர்த்து இறுதிப் போட்டியில் விளையாடும் என்று நம்புகிறேன். என்னுடைய தேர்வு எதுவென்றால், அது இங்கிலாந்து அணியாகத்தான் இருக்கும். நான் இங்கிலாந்தை சார்ந்தவன் என்பதாலும், அந்த உணர்ச்சி எனக்கு இருப்பதாலும் இதைச் சொல்கிறேன்.



    உலகக்கோப்பை தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கிலாந்து மிகவும் இளம் வீரர்களை கொண்ட அணியாக உள்ளது. அவர்கள் அதிக அளவில் அனுபவம் பெறவில்லை என்பதால், உலகக்கோப்பையில் அவர்களது பயணம் மிகவும் கடினமானதாக இருக்கப்போகிறது’’ என்றார்.



    1966-ம் ஆண்டு மட்டுமே உலகக்கோப்பையை வென்றுள்ள இங்கிலாந்து, பெக்காம் தலைமையில் 2006-ம் ஆண்டு காலிறுதிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×