என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இங்கிலீஷ் பிரிமீயர் லீக்
நீங்கள் தேடியது "இங்கிலீஷ் பிரிமீயர் லீக்"
இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரின் சிறந்த வீரராக லிவர்பூல் அணியைச் சேர்ந்த பின்கள வீரரான விர்ஜில் வான் டிக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடர் நடத்தப்பட்டு வருகிறது. உலகில் உள்ள தலைசிறந்த லீக்கில் இதுவும் ஒன்று.
கடந்த 2017-18 சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வருடத்திற்கான 2018-19 சீசனில் மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இன்றிரவு நடைபெறும் போட்டிகள் முடிவில் யார் சாம்பியன் என்பது தெரியவரும்.
மேலும், இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கப்படும். அதன்படி இந்த சீசனின் சிறந்த வீரராக லிவர்பூல் அணியின் பின்கள (Defender) வீரரான விர்ஜில் வான் டிஜ்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2012-13 சீசனில் பின்கள வீரர் ஒருவர் சிறந்த வீரருக்கான விருதை பெற்றார். அதன்பின் தற்போது விர்ஜில் வான் இந்த விருதை பெற்றுள்ளார்.

யுவான்டஸ் அணிக்காக விளையாடி வரும் டைபாலாவை 85 மில்லியன் பவுண்டுக்கு வாங்க பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது மான்செஸ்டர் யுனைடெட். #ManUnited #EPL
இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் தலைசிறந்த கால்பந்து அணிகளில் ஒன்று மான்செஸ்டர் யுனைடெட். இந்த சீசனில் மான்செஸ்டர் யுனைடெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் தவரிசையில் 6-வது இடம்பிடித்து யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான வாய்ப்பை இழந்தது.
இதனால் அணியை வலிமைப்படுத்த அந்த அணியின் பயிற்சியாளர் முடிவு செய்துள்ளார். இதனால் இத்தாலியின் தலைசிறந்த கிளப்பான யுவான்டஸில் விளையாடி வரும் பவுலோ டைபாலாவை 85 மில்லியன் பவுண்டுக்கு வாங்க பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
முன்கள வீரரான டைபாலா அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2015-ல் இருந்து யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 125 போட்டிகளில் விளையாடி 57 கோல் அடித்துள்ளார். அர்ஜென்டினா அணிக்காக 19 போட்டிகளில் களம் இறங்கி ஒரு கோல் அடித்துள்ளார்.

இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்தில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் எவர்டனை 2-0 என வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. #EPL
இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி எவர்டன் அணியை எதிர்கொண்டது. முதல் பாதி நேரத்தின் கூடுதல் நேரத்தில் (45+2) மான்செஸ்டர் சிட்டி அணியின் லபோர்ட்டே கோல் அடித்தார். இதனால் 1-0 என மான்செஸ்டர் சிட்டி முன்னிலைப் பெற்றது.
2-வது பாதி நேரத்தில் 90 நிமிடம் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. கூடுதல் நேரத்தின் 7-வது நிமிடத்தில் கேப்ரியல் ஜீசஸ் கோல் அடிக்க மான்செஸ்டர் சிட்டி 2-0 என வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மான்செஸ்டர் சிட்டி 26 போட்டிகளில் 20 வெற்றி, நான்கு தோல்விகள் மூலம் 62 புள்ளிகள் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. லிவர்பூல் 25 போட்டிகளில் 19 வெற்றி, ஒரு தோல்வியுடன் 62 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.
டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் 57 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், செல்சி 50 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் 48 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

×

X