search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இணைய தளம்"

    பெண்ணின் புகைப்படத்தை கிராபிக்ஸ் செய்து இணைய தளத்தில் ஆபாசமாக வெளியிட்ட சிவகாசி வாலிபரை போலீசார் கைது செய்தனர். #YouthArrested
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல் அருகே உள்ள பங்காருபேட்டை வட்டம் கெரேகொடி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மஞ்சுளா. இவர் தங்கவயல் உரிகம் பேட்டையில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

    அதில் தனது புகைப்படங்களை யாரோ கிராபிக்ஸ் மூலம் மாற்றி அமைத்து ஆபாசமாக பதிவு செய்து, இணைய தளத்தில் வெளியிட்டு இருப்பதாக கூறி இருந்தார்.

    இதன்பேரில் இன்ஸ்பெக்டர் அஞ்சப்பா தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது புகைப்படத்தை வெளியிட்டவரின் செல்போன் எண்ணை கண்டறிந்து பார்த்ததில், தமிழகத்தில் உள்ள சிவகாசியை சேர்ந்த வாலிபர் கருப்பசாமி என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சிவகாசிக்கு சென்ற போலீசார் கருப்பசாமியை கைது செய்தனர். அவரை தங்கவயல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #YouthArrested

    வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள உயிரினங்கள் பற்றி தெரிந்து கொள்ள இணையதளம் வழியாக நேரடி ஒளிப்பரப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. #EdappadiPalaniswami #vandalurzoo
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 12.10.2017 மற்றும் 16.08.2018 ஆகிய நாட்களில் நேரில் வந்து புதியதாகப் பிறந்த சிங்கக் குட்டிகளுக்கு பெயர் சூட்டினார்

    அதோடு அண்ணா உயிரியல் பூங்காவில் ரூ.10.85 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளவும், கிண்டி சிறுவர் பூங்காவில் ரூ.1.80 கோடியிலும், சேலம் குரும்பம்பட்டி உயிரியல் பூங்காவில் ரூ.1.07 கோடி தொகையில் மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் அளித்தார்.



    10.01.2018 தேதி முதல் பூங்காவில் இணையதளம் மூலம் நுழைவுச் சீட்டு மற்றும் சுற்றிப்பார்க்கும் வாகனங்களில் பயணச்சீட்டு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக www. aazp.in மற்றும் www.vandalurzoo.com என இரண்டு இணைய தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

    602 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவானது இந்தியாவில் உள்ள பூங்காக்களில் பெரிய பூங்காவாகும். இப்பூங்காவிற்கு ஒவ்வொரு வருடமும் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை புரிகின்றனர்.

    உயிர்ப்பன்மை, அழிநிலை விலங்குகளின் எண்ணிக்கை மற்றும் பூங்காவின் பரப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெரிய பூங்காவாக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தால் ‘சிறப்பு மையம்’ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    170 இனங்களைச் சார்ந்த பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன வகையைச் சார்ந்த 2142 அடைப்பிட விலங்குகள் உள்ளன. இவ்விலங்குகள் பற்றி அறிந்துகொள்ள www.aazoopark.gov.in எனும் நேரடி ஒளிப்பரப்பு வசதி இணையதளம் வழியாக செய்யப்பட்டுள்ளது. #EdappadiPalaniswami #vandalurzoo
    ×