search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய கிரிக்கெட் வாரியம்"

    இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் அக்டோபர் 22-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்ய லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்த முட்டுக்கட்டை போட முயற்சித்த இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை அந்த பதவியில் இருந்து நீக்கி கடந்த 2017-ம் அண்டு ஜனவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.

    லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தும் வரை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தை கவனிக்க நிர்வாக கமிட்டி உறுப்பினர்களையும் கோர்ட்டு பின்னர் அறிவித்தது. கடந்த 2 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக பணிகளை 3 பேர் கொண்ட கமிட்டி கவனித்து வருகிறது.

    இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எதிரான வழக்கில் கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்டு இருக்கும் வக்கீல் நரசிம்மாவுடன், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உறுப்பினர்களான வினோத் ராய், டயானா எடுல்ஜி, ரவி தோட்ஜி ஆகியோர் ஆலோசனை நடத்தி இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தலுக்கான தேதியை முடிவு செய்துள்ளனர்.

    இதன்படி இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் அக்டோபர் 22-ந் தேதி நடைபெறும் என்று நிர்வாக கமிட்டி நேற்று அறிவித்தது. மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தலை செப்டம்பர் 14-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் கூறும் போது, ‘நான் சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்டேன். எனது பணி இரவு வாட்ச்மேன் போன்றது என்று நான் சொல்லி வந்தேன். ஆனால் இந்த இரவு வாட்ச்மேன் பணி நீண்ட காலம் நீடித்து விட்டது. எங்கள் பணி மிகவும் குறிப்பிடத்தக்கது என்பதால் மகிழ்ச்சி அளிக்கிறது. லோதா கமிட்டி சிபாரிசுகளை மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். அதில் இருந்த சில பிரச்சினைகளை கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்ட வக்கீல் பல முறை மாநில சங்கத்தினரிடம் பேசி பிரச்சினையை சரி செய்தது மகிழ்ச்சிக்குரியது. புதிதாக தேர்வு செய்யப்படும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஜனநாயக முறைப்படி இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தை நடத்துவார்கள் என்று நம்புகிறோம்’ என்றார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எதிரான வழக்கில் தோல்வியை சந்தித்ததால் இழப்பீடு தொகை ரூ.11 கோடியை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வழங்கி விட்டோம் என்று பாக். கிரிக்கெட் வாரிய தலைவர் இஷான் மணி தெரிவித்துள்ளார்.
    கராச்சி:

    இந்திய கிரிக்கெட் வாரியம், தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இரு நாடுகள் இடையிலான போட்டி தொடரில் விளையாடவில்லை. எனவே இந்த போட்டி தொடர்கள் நடைபெறாததால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு நஷ்ட ஈடாக இந்திய கிரிக்கெட் வாரியம் தங்களுக்கு ரூ.481 கோடி வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) பிரச்சினை தீர்ப்பாய கமிட்டியில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இதனை விசாரித்த ஐ.சி.சி. தீர்ப்பாய கமிட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், இந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஏற்பட்ட வழக்கு உள்ளிட்ட செலவுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எதிரான வழக்கில் தோல்வியை சந்தித்ததால் வழங்க வேண்டிய இழப்பீடு தொகை ரூ.11 கோடியை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வழங்கி விட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஷான் மணி தெரிவித்துள்ளார். 
    கிரிக்கெட் மட்டுமல்ல எல்லா வகையான போட்டிகளிலும் பாகிஸ்தானுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    காஷ்மீரில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் இந்திய துணை ராணுவப்படையினர் மீது நடத்திய கொடூர தாக்குதல் எதிரொலியாக உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த ஆட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் சிலர் கூறியுள்ளனர்.

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜூன் 16-ந்தேதி தான் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. அதற்கு இன்னும் அதிக நாட்கள் இருப்பதால் உரிய நேரத்தில் பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே கூறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் விளையாடாவிட்டால் சிக்கல் நமக்கு தான் ஏற்படும். எங்களது இலக்கு எதுவென்றால், ஒரு கிரிக்கெட் தேசமான பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாட்டுடன் வருங்காலத்தில் எந்தவிதமான உறவும் வைத்துக் கொள்ளாதீர்கள் என்று கிரிக்கெட் விளையாடும் நாடுகளை ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம். இனவெறி கொள்கை காரணமாக தென்ஆப்பிரிக்காவுக்கு 1970-ம் ஆண்டு 1991-ம் ஆண்டு வரை சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதே போன்று பாகிஸ்தான் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். அதாவது கிரிக்கெட் மட்டுமல்ல எல்லா வகையான போட்டிகளிலும் பாகிஸ்தானுக்கு தடை விதிக்கப்பட வேண்டும். விளையாட்டில் இருந்து பாகிஸ்தானை தனிமைப்படுத்துவது அரசாங்க ரீதியாகத் தான் செய்ய முடியும். இதற்காக மற்ற நாடுகளுடன் பேச்சுவாத்தை நடத்தி கருத்து ஒற்றுமை ஏற்படுத்த அரசு முயற்சித்து வருகிறது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைமை நிர்வாக கமிட்டி உறுப்பினர்களின் கூட்டம் துபாயில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் காஷ்மீர் தாக்குதல் பற்றிய எங்களது கவலையையும், உலக கோப்பை போட்டிக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் எடுத்துக் கூறுவோம்.

    இவ்வாறு வினோத் ராய் கூறினார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை அதிகாரியாக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயினை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #BCCI #Ombudsman #DKJain
    புதுடெல்லி:

    டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்து அவமரியாதையாக கருத்து தெரிவித்தது சர்ச்சையாக வெடித்தது. இதைத் தொடர்ந்து இருவரும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதன் பிறகு விசாரணை முடியும் வரை இருவரும் தொடர்ந்து விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்தது. இதற்கிடையில் இருவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு என்று விசாரணை அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று நிர்வாக கமிட்டி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, ஏ.எம்.சாப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை அதிகாரியாக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயினை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். கிரிக்கெட் வாரியத்துக்கு விசாரணை அதிகாரி நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

    மேலும், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் வினோத்ராய், டயானா எடுல்ஜி ஆகியோர் தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டை வெளிப்படையாக பேசி வருவது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் இதுபோல் மீண்டும் நடந்து கொள்ளக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அத்துடன் நிர்வாக கமிட்டியின் 3-வது உறுப்பினராக ராணுவத்தில் பணியாற்றிய லெப்டினன்ட் ஜெனரல் ரவி தோட்ஜ் நியமிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர்.
    மத்திய அரசின் ஒப்புதல் இன்றி, தேசிய மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா என்ற பெயரை பிரதிநிதித்துவப்படுத்துவதால் பிசிசிஐக்கு தடை விதிக்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #BCCI
    மத்திய அரசிடம் இருந்து முறையான அங்கீகாரம் இன்றி நாட்டின் பிரதிநிதியாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் செயல்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த கீதா ராணி என்பவர் இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.


    பிசிசிஐ அமைப்புக்கு எதிராகவும், அதன் அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கும்படி மனுதாரர் கோரியுள்ளார். மேலும் பிசிசிஐ அமைப்பில் வீரர்கள் தேர்வில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும், எப்போதும் பாகுபாடு இருப்பதாகவும் புகார் கூறியுள்ளார். மற்ற விளையாட்டுக்களைப் போன்று கிரிக்கெட்டும் மத்திய விளையாட்டுத் துறையால் நேரடியாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வழக்கில் பிசிசிஐ மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிப்ரவரி 7-ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்துள்ளனர். #BCCI
    மிதாலிராஜ் நீக்கப்பட்டது தொடர்பாக பயிற்சியாளர் ரமேஷ் பவார் மும்பையில் நேற்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் சபா கரிம் ஆகியோரை சந்தித்து விளக்கம் அளித்தார். #MitaliRaj #RameshPowar #BCCI
    மும்பை:

    வெஸ்ட் இண்டீசில் சமீபத்தில் நடந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய பயிற்சியாளர் ரமேஷ் பவார் தன்னை பலமுறை அவமதித்து உதாசீனப்படுத்தியதாகவும், இதனால் மனம் உடைந்து கண்ணீர் சிந்தியதாகவும் மூத்த வீராங்கனை மிதாலிராஜ் பரபரப்பான புகார்களை தெரிவித்தார்.

    இங்கிலாந்துக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் தன்னை வேண்டுமென்றே அவர் நீக்கியதாகவும் கூறினார். இதனால் சிக்கலுக்குள்ளான பயிற்சியாளர் ரமேஷ் பவார் மும்பையில் நேற்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் சபா கரிம் (கிரிக்கெட் ஆபரேட்டிங்) ஆகியோரை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது தொழில்முறை ரீதியாக எங்களுக்கு இடையே நெருக்கமான உறவு இல்லை என்பதை ஒப்புக்கொண்டார். மிதாலிராஜ் எப்போதும் மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருந்ததால் அவரை கையாளுவது கடினமாக இருந்தது என்றும் பவார் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடம் தெரிவித்தார். அவரது சந்திப்பு குறித்து பெயர் வெளியிட விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-



    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்ற அணியை மாற்றமின்றி அப்படியே இறக்க வேண்டும் என்று முடிவு மேற்கொண்டோம். மேலும் அதிரடியாக ஆடுவதில் மிதாலியின் ‘ஸ்டிரைக்ரேட்’ மோசமாக இருந்தது. இதன் காரணமாகவே அவரை அரைஇறுதி ஆட்டத்தில் சேர்க்கவில்லை. மற்றபடி அவர் மீது எந்த வித பாகுபாடும் காட்டவில்லை என்று பவார் கூறியுள்ளார். மிதாலியை நீக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் யாரும் நெருக்கடி கொடுத்தார்களா? என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் இல்லை என்று பதில் அளித்தார். அதே சமயம் கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரமிக்க பதவியில் உள்ள ஒரு நபர், அணியின் மேலாளர் (திருப்தி பட்டாச்சார்யா) மற்றும் தேர்வாளர் (சுதா ஷா) ஆகியோருடன் தொடர்பில் இருந்தார் என்றும் கூறினார். இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.
    இருநாடுகளுக்கு இடையில் தொடரை நடத்த விரும்பாத பிசிசிஐ-யிடம் 447 கோடி ரூபாய் கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்த வழக்கை ஐசிசி தள்ளுபடி செய்தது. #BCCI #PCB
    கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு உண்டு. இருநாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடத்துவதன் மூலம் இரு கிரிக்கெட் வாரியத்திற்கும் கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கும்.

    பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய எல்லையில் தொடர் தாக்குதல் நடத்தியதால் இந்தியா இருநாடுகளுக்கு இடையிலான தொடரில் விளையாட மறுத்துவிட்டது. இதனால் பாகிஸ்தானுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டது.



    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான நஜம் சேதி இருநாடுகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் தொடர் நடத்த தீவிர முயற்சி எடுத்தார். இதன் காரணமாக 2015 முதல் 2023 வரை இருநாடுகளுக்கும் இடையில் 6 தொடர் நடத்த பிசிசிஐ - பிசிபி இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.

    இந்தியா நடத்தும் தொடரை இந்தியாவிலும், பாகிஸ்தான் நடத்தும் தொடரை பொதுவான ஒரு இடத்திலும் நடத்தலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும்போது, எல்லையில் தீவிரவாத தாக்குதல் இருக்கும்வரை கிரிக்கெட் தொடர் கிடையாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.



    இதனால் வழியில்லாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 447 கோடி ரூபாய் பிசிசிஐ-யிடம் நஷ்டஈடு கேட்டு ஐசிசி-யில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை ஐசிசி-யின் மூன்று பேர் கொண்ட தீர்வு கமிட்டி விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை ஐசிசி இன்று தள்ளுபடி செய்தது.
    தனியார் அமைப்பு என்பதால் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என கூறிவந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவந்து அதிரடி காட்டியுள்ளது மத்திய தகவல் ஆணையம். #CIC #BCCI #RTI
    புதுடெல்லி :

    இந்திய கிரிக்கெட் வாரியம் அரசு சாரா ஒரு தனியார் அமைப்பு என்று சொல்லப்பட்டாலும், இந்திய வீரர்கள் மூவர்ண நிறம் தாங்கிய சீருடையை அணிந்து, அசோகா சக்கரம் பொறிக்கப்பட்ட ஹெல்மெட்டுடன் இதுநாள்வரை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்கள்.

    கிரிக்கெட்டை பொருத்தவரை தேசத்தின் பிரதிநிதியாக இருக்கும் இவர்கள், கிரிக்கெட் வாரிய நிர்வாகம் தொடர்பாக கேள்வி எழுப்பும் பட்சத்தில் தாங்கள் தனியார் அமைப்பு எங்களைக் கட்டுப்படுத்த முடியாது, கேள்விக்குப் பதில் அளிக்கக் கடமைப்பட்டவர்கள் இல்லை எனத் தெரிவித்து நழுவி வந்தனர்.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்துக்குள் கொண்டுவந்து அதிரடி காட்டியுள்ளது மத்திய தகவல் ஆணையம். இதனால், கிரிக்கெட் வீரர்களின் ஊதியம், வாரியத்தின் ஆண்டு வருமானம், வீரர்கள் தேர்வு செய்யும் முறை பற்றிய பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.

    மற்ற தேசிய விளையாட்டு அமைப்புகள் அனைத்தும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையில் கிரிக்கெட் வாரியத்தையும் ஏன் அதற்கு உட்படுத்தக்கூடாது என்று கேள்வி எழுப்பிய சட்ட ஆணையம், 1997-ம் ஆண்டில் இருந்து 2007-ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் வாரியம் மத்திய அரசிடம் இருந்து ரூ.2,168 கோடிக்கு வரிச்சலுகை பெற்றிருப்பதை குறிப்பிட்டு, வாரியத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்த நிலையில் மத்திய தகவல் ஆணையம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #CIC #BCCI #RTI
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைகள் தமிழ்நாடு சங்கங்களின் பதிவாளரிடம் நேற்று பதிவு செய்யப்பட்டதாக கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #IndianCricketBoard
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரியத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களுடன் கூடிய புதிய விதிமுறைகளை 4 வார காலத்திற்குள் சென்னையில் உள்ள தமிழ்நாடு சங்கங்களின் பதிவாளரிடம் முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 9-ந்தேதி உத்தரவிட்டு இருந்தது. அதன்படி நேற்று பதிவு செய்யப்பட்டதாக கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய விதிமுறைகளை மாநில கிரிக்கெட் சங்கங்கள் 30 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் கோர்ட்டு ஆணையிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.  #IndianCricketBoard
    உத்தரபிரதேச கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க வீரரிடம் பணம் கேட்டதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லாவின் நிர்வாக உதவியாளரை இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க வீரரிடம் பணம் கேட்டதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லாவின் நிர்வாக உதவியாளரை இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஐ.பி.எல். சேர்மனான ராஜீவ் சுக்லா உத்தரபிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்தின் இயக்குனராகவும் இருக்கிறார். இவரது நிர்வாக உதவியாளராக அக்ரம் சைபி என்பவர் இருந்தார். இவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.



    இந்த நிலையில் அக்ரம் சைபி மீது உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ராகுல் ஷர்மா திடுக்கிடும் புகார் தெரிவித்துள்ளார். ‘உத்தரபிரதேச மாநில கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் பணம் மற்றும் இதர வகையில் தன்னை கவனிக்க வேண்டும் என்று அக்ரம் சைபி என்னிடம் தெரிவித்தார். மேலும் அவர் போலி வயது சான்றிதழ் அளித்து வருகிறார்’ என்றும் குற்றம் சாட்டி இருந்தார். அத்துடன் அக்ரம் சைபி, ராகுல் ஷர்மா ஆகியோர் இடையிலான உரையாடல் இந்தி சேனலில் ஒளிபரப்பானதால் சர்ச்சை கிளம்பியது.

    இதைத் தொடர்ந்து ராஜீவ் சுக்லாவின் நிர்வாக உதவியாளர் அக்ரம் சைபியை இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த கமிஷனர் ஒருவரை நியமிக்கவும் இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. கமிஷனர் நியமிக்கப்பட்டதும் அவர் அக்ரம் சபியிடம் விசாரணை நடத்தி தனது அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிப்பார். அந்த அறிக்கையை ஆய்வு செய்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு இறுதி தீர்ப்பை வழங்கும்.

    இந்த பிரச்சினை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் அஜித்சிங்கிடம் கேட்ட போது, ‘டெலிவிஷனில் வெளியான ஆடியோ உள்பட அனைத்து விஷயங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்படும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தும் முன்பு நாங்கள் கருத்து எதுவும் சொல்ல முடியாது’ என்று தெரிவித்தார்.

    உத்தரபிரதேச மாநில கிரிக்கெட் சங்க இணைசெயலாளர் யுத்வீர் சிங் கருத்து தெரிவிக்கையில், ‘அணி தேர்வில் தவறு எதுவும் நடக்கவில்லை. எந்த மாதிரியான விசாரணைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். அணி தேர்வு விஷயத்தில் உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கம் வெளிப்படையான முறையில் தான் செயல்படுகிறது. அவர்கள் இருவர் இடையே நடந்த உரையாடல் குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட விஷயமாகும். ராகுல் ஷர்மா மாநில அணியின் உத்தேச பட்டியலில் கூட ஒருபோதும் இடம் பிடித்தது கிடையாது. அதற்குரிய தகுதியும் அவருக்கு இல்லை’ என்றார்.

    இந்திய அணியின் முன்னாள் வீரரும், உத்தரபிரதேச அணியின் முன்னாள் கேப்டனுமான முகமது கைப் தனது டுவிட்டர் பதிவில், ‘உத்தரபிரதேச கிரிக்கெட் அணி தேர்வில் ஊழல் நடப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடைபெறுவதை ராஜீவ் சுக்லா உறுதி செய்வார் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே தன் மீதான புகாரை மறுத்துள்ள அக்ரம் சைபி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
    இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு லோதா கமிட்டி பரிந்துரை செய்த சிபாரிசு தொடர்பான வழக்கு விசாரணையை ஜூலை 4-ந் தேதிக்கு தள்ளிவைப்பதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அறிவித்தனர். #BCCI #Supremecourt
    புதுடெல்லி:

    லோதா கமிட்டி சிபாரிசின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக விதிமுறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

    கடந்த 1-ந் தேதி நடந்த விசாரணையின் போது, ‘இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைகளை வகுப்பது குறித்த தங்களது ஆலோசனைகளை மாநில கிரிக்கெட் சங்கமும், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் மே 11-ந் தேதிக்குள் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் புதிய விதிமுறையின் இறுதி வடிவம் கோர்ட்டு உத்தரவுக்கு உட்பட்டதாகும்’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறை குறித்து, மாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் தங்களது ஆலோசனைகளை, இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்டுள்ள சீனியர் வக்கீல் கோபால் சுப்பிரமணியத்திடம் அறிக்கையாக சமீபத்தில் தாக்கல் செய்தனர்.

    அந்த அறிக்கையில், ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிர்வாகிகளாக இருக்கக்கூடாது. ஒருவர் தொடர்ந்து 2 முறைக்கு மேல் ஒரு பதவியில் தொடர வேண்டும் என்றால் 3 ஆண்டு கால இடைவெளி விட்டு தான் போட்டியிட முடியும் உள்ளிட்ட லோதா கமிட்டியின் முக்கியமான பரிந்துரைகளுக்கு பெரும்பாலான மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளன.

    இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை ஜூலை 4-ந் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். #BCCI #Supremecourt
    ×