search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய ஜெயில்"

    விஜய் மல்லையாவுக்கு மும்பை ஜெயிலில் டி.வி., காற்றோட்ட வசதி கொண்ட அறை ஒதுக்கப்படுவதாக லண்டன் நீதிமன்றத்தில் சிபிஐ வீடியோ தாக்கல் செய்துள்ளது. #VijayMallya #UKCourt #CBI
    லண்டன்:

    தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் ரூ.9500 கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்று விட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர சி.பி.ஐ. முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பினால் அவர் அங்குள்ள சிறைச்சாலையில் அடைக்கப்படுவார். ஆனால் அங்குள்ள சிறைகளில் போதிய வசதி கிடையாது. அவர் மோசமாக நடத்தப்படுவார் என விஜய் மல்லையாவின் வக்கீல் வெஸட் மினிஸ்டர் கோர்ட்டில் தெரிவித்து இருந்தார்.

    அதைத் தொடர்ந்து இந்திய சிறைச்சாலையின் தன்மை குறித்தும், அதில் உள்ள வசதிகள் குறித்தும் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.

    அதற்கு பதில் அளிக்கும் வகையில் மும்பை ஆர்தர் ரோட்டில் உள்ள ஜெயிலில் அறை எண் 12-ல் உள்ள வசதிகள் குறித்த வீடியோவை சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்தது.

    10 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோ காட்சியில் அவர் அடைக்கப்படும் அறையில் உள்ள அதி நவீன வசதிகள் இடம் பெற்றுள்ளன.

    அங்கு டி.வி.செட், தனியாக கழிவறை வசதி, இயற்கையான சூரிய ஒளி அவர் அறைக்குள் வருவது போன்ற அமைப்பு உள்ளது. அவர் நூல் நிலையம் சென்று படிப்பதற்கான வசதிகள் நடை பயிற்சிக்கான இட வசதி குறித்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


    இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகளிடம் கேட்டதற்கு பதில் சொல்ல மறுத்து விட்டனர். அதே நேரம் மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, “இந்திய சிறைகளில் சுகாதார வசதி இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து அறிய இங்கிலாந்து கோர்ட்டு விரும்பியது.

    இந்திய சிறைகள் சுகாதாரமாக இருக்கிறது என்ற ஆதாரத்துக்காக அந்த வீடியோ கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. விஜய் மல்லையா அடைக்கப்பட இருக்கும் சிறை கிழக்கு பார்த்து உள்ளது. இதனால் அங்கு சூரிய வெளிச்சம் நன்றாக கிடைக்கும் என்றார்.

    மேலும் அவர் கூறும் போது, “சிறை அறையில் எதிர் எதிராக ஜன்னல்கள் மற்றும் காற்றோட்ட வசதி உள்ளது. அதில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் நடைபயிற்சிக்கு ஏற்ற வகையில் இடவசதி உள்ளது. எனவே அவரை இந்தியாவுக்கு அனுப்புவதில் எந்தவித தடையும் இருக்காது.

    இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் இன்னும் 2 மாதத்தில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பும் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார். #VijayMallya #UKCourt #CBI
    ×