என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இந்திய தலைவர்
நீங்கள் தேடியது "இந்திய தலைவர்"
வாட்ஸ்-அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ் என்பவரை வாட்ஸ்-அப் நிறுவனம் நியமித்து இருக்கிறது. #WhatsApp #AbhijitBose #India
புதுடெல்லி:
சமூக வலைத்தளங்களில் ஒன்றான ‘வாட்ஸ்-அப்’ செயலியை கோடிக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் 130 கோடி வாட்ஸ்-அப் வாடிக்கையாளர்களில் சுமார் 20 கோடி பேர் இந்தியர்கள் ஆவர்.
இவ்வாறு மிகப்பெரிய வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ் என்பவரை வாட்ஸ்-அப் நிறுவனம் நியமித்து இருக்கிறது. பிரபல மின்னணு பணப்பரிமாற்ற செயலியான எஸ்டாப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர், வாட்ஸ்-அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
போலி செய்திகள் வேகமாக பரவுவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பதாக வாட்ஸ்-அப் நிறுவனம் மீது இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், இந்த தலைவர் நியமனம் நடந்திருக்கிறது. முன்னதாக குறைதீர் அதிகாரியை நியமிக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் அதிகாரி ஒருவரை வாட்ஸ்-அப் நிறுவனம் சமீபத்தில் நியமித்தது குறிப்பிடத்தக்கது. #WhatsApp #AbhijitBose #India

×

X