என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இந்திய தேர்தல் ஆணையம்
நீங்கள் தேடியது "இந்திய தேர்தல் ஆணையம்"
பிரதமர் மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக கேதார்நாத், பதிரிநாத் சென்றுள்ள நிலையில், கேதார்நாத் யாத்திரை குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி நேற்று உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் மலையில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் அருகே உள்ள புனித குகைக்கு சென்று அவர் தியானம் மேற்கொண்டார். விடிய விடிய தியானத்தில் ஈடுபட்டு இருந்த மோடி இன்று காலை குகையை விட்டு வெளியே வந்தார். பிரதமரின் வருகையையொட்டி கேதர்நாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோதும் கேதார்நாத் பயணத்துக்கு அனுமதி அளித்த தேர்தல் கமிஷனுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு மோடி கூறினார்.
பின்னர் அவர் அங்கிருந்து பத்ரிநாத் சென்று அங்குள்ள கோவிலில் சாமி கும்பிட்டார். இன்று பிற்பகல் மோடி டெல்லி திரும்புகிறார்.
அவர் கேதார்நாத் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த காட்சி டிவி-க்களில் ஒளிபரப்பானது. இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேர்தல் கமிஷனில் புகார் செய்யப்பட்டுள்ளது.
அதில் பிரதமர் நரேந்திர மோடியின் கேதார்நாத் யாத்திரை டெலிவிஷன்களில் ஒளிபரப்பப்பட்டது. அதன் மூலம் மோடி தேர்தல் விதிமுறையை மீறியுள்ளார் என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிக் ஓ’பிரைன் கூறுகையில் ‘‘கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் 17-ந்தேதி மாலை 6 மணியுடன் முடிவடைந்த போதிலும், இரண்டு நாட்களாக மோடியின் கேதார்நாத் யாத்திரை தேசிய மற்றும் உள்ளூர் டிவி-க்களில் ஒளிபரப்பானது ஆச்சர்யத்தை அளிக்கிறது. இது தேர்தல் விதிமுறையை மீறியதாகும்.
அவரது செயல்பாடுகள் நிமிடத்திற்கு நிமிடம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது ஒருவகையில் வாக்காளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈர்க்கக்கூடிய செயலாகும். மோடி பின்பக்கத்தில் இருந்து மோடி, மோடி என்ற கோஷம் எழுப்பப்பட்டது’’ என்றார்.

பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் புகாரில் எனது கருத்தை ஏற்கவில்லை என்று தேர்தல் ஆணையர் அசோக் லவாசா குறிப்பிட்டுள்ளார்.
மராட்டியத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய பிரதமர் மோடி, முதன் முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை, பாகிஸ்தானின் பாலக்கோட்டில் தாக்குதல் நடத்திய வீரர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று பேசினார். மோடியின் இந்த பேச்சு தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என கூறி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல், மேற்கு வங்கத்தில் தேர்தல் கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா, இந்திய பாதுகாப்புப்படை வீரர்களை மோடியின் படை என்று குறிப்பிட்டார். அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார்கள் குறித்து ஆய்வு நடத்திய தேர்தல் ஆணையம், மேற்கண்ட சம்பவங்களில் தேர்தல் நடத்தை விதிகளை மோடி மீறவில்லை என்ற முடிவு எடுத்தது. இதையும் சேர்த்து, மோடிக்கு எதிரான 8 புகார்கள் மீது தேர்தல் ஆணையம் இதுவரை முடிவெடுத்துள்ளது.
மோடி, அமித்ஷாவின் தேர்தல் விதிமீறல்கள் மீதான புகார் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின்போது தேர்தல் ஆணையம் சார்பில் மோடி- அமித்ஷா தேர்தல் விதிமுறைகளை மீறவில்லை என பதில் மனு தாக்கல் செய்தது.
இந்த நிலையில் பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் புகாரில் தேர்தல் ஆணையர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது என தெரியவந்து உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.
எனது கருத்தை அரோரா ஏற்காததால் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் எழுதி உள்ளார்.
அதில் ‘‘பிரதமர் மோடி, அமித்ஷா தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளனர். பிரதமர் மோடி அமித் ஷாவுக்கு எதிரான 6 தேர்தல் விதிமுறை மீறல்களில் எனது கருத்து ஏற்கப்படவில்லை. எனது கருத்துக்களை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏற்றுக்கொள்ளவில்லை. எனது கருத்துக்களை ஏற்று கொள்ளாததால் இனிவரும் தேர்தல் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்ததற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* பல்வேறு விவகாரகளில் பிரதமர் மோடி வெளிப்படையாக பதில் அளிக்கவில்லை.
* தேர்தலில் மோடியும் அமித்ஷாவும் மிகப்பெரிய அளவில் பணத்தை செலவு செய்து உள்ளனர்.
* மக்களின் முடிவே எங்களின் முடிவாக இருக்கும். பாஜகவிடம் உள்ள பணத்திற்கும் எங்கள் பக்கம் உள்ள உண்மைக்கும் தான் இந்த தேர்தலில் போட்டி.
* தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை மக்கள் உற்று நோக்குகிறார்கள். மோடி என்ன பேசினாலும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை. மக்கள் தீர்ப்பிற்கு தலைவணங்க காத்திருக்கிறோம்.
அரசியல் விவகாரம் குறித்து பிரதமர் மோடி, என்னுடன் ஏன் விவாதம் நடத்த வில்லை?
* பிரதமர் மோடியின் குடும்பத்தை நான் மதிக்கிறேன். எனது குடும்பத்தை மோடி விமர்சித்ததை பற்றி கவலைப்படவில்லை.
* கறைபடியாத கரம் கொண்டவர் மோடி என்று கூறியதை தவறு என்று நாங்கள் அம்பலப்படுத்தினோம்.
* தேர்தல் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மோடி செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அவரது செய்தியாளர்கள் சந்திப்பை நான் பாராட்டுகிறேன் என கூறினார்.
தேர்தல் ஆணையம் மோடி பிரசாரத்திற்கு ஆதரவாக செயல்படுவது நாட்டுக்கு பேராபத்து என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 6 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற இருக்கிறது.
இந்த தேர்தலில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பா.ஜனதாவுக்கு சாதகமாக செயல்படுவதாக மாநில கட்சிகள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலும் தேர்தல் ஆணையம் மீது சாடியுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் குறித்து கெஜ்ரிவால் கூறுகையில் ‘‘தேர்தல் ஆணையம் மோடியின் பேரணிக்கு அனுமதி அளிக்கிறது. அவரது பேரணிக்குப்பின் பிரசாரம் முடிவடைகிறது. தேர்தல் ஆணையம் முழுவதுமாக ஒருதலை பட்சமாக செயல்படுகிறது என்பது இதில் இருந்து தெளிவாக தெரிகிறது. இது நாட்டுக்கு மிகப்பெரிய பேராபத்து’’ என்றார்.

பாராளுமன்றத்துக்கு 4-வது கட்டமாக 9 மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #LokSabhaElections2019
புதுடெல்லி:
இந்திய பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. முதல் 3 கட்ட தேர்தலில் 302 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்ட நிலையில், இன்று நான்காம் கட்டமாக 9 மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
பீகார் 5, ஜார்கண்ட் 3, மத்திய பிரதேசம் 6, மராட்டியம் 17, ஒடிசா 6, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் தலா 13, மேற்கு வங்காளம் 8, காஷ்மீர் 1 (அனந்தநாக் தொகுதியில் குல்காம் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும்) இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டசபைக்கு 42 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்த தொகுதிகளில் மாநில போலீஸ் படையினரும், மத்திய துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது. இன்று ஓட்டுப்பதிவு நடக்கிற 72 தொகுதிகளில் 45 தொகுதிகளை பாரதீய ஜனதா கட்சி கடந்த 2014 தேர்தலில் கைப்பற்றி இருந்தது. இதைத் தக்க வைத்தாக வேண்டிய நெருக்கடி, அந்த கட்சிக்கு உள்ளது.
பீகார், ஜார்கண்ட், காஷ்மீர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய ஏழு மாநிலங்களில் 51 தொகுதிகளுக்கு 5-வது கட்ட தேர்தல் வருகிற மே மாதம் 6-ந் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019
அனுமதியின்றி பேரணி மேற்கொண்ட கவுதம் காம்பீர் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். #GautamGambhir #bjp
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், தன்னை பா.ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்டார். இதனையடுத்து கிழக்கு டெல்லி பாராளுமன்றத் தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். இப்போது அனுமதியின்றி பேரணி மேற்கொண்ட கவுதம் காம்பீர் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர்.
ஏப்ரல் 25-ம் தேதி டெல்லி ஜக்பூரா பகுதியில் அனுமதியின்றி பேரணியை மேற்கொண்டார். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல் என தேர்தல் ஆணையம் கூறியது.
உள்ளூர் தேர்தல் அதிகாரியிடம், காவல்துறையிடம் புகாரளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனையடுத்து தேர்தல் அதிகாரி தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. #GautamGambhir #bjp
பாராளுமன்ற தேர்தலில் 3-வது கட்டமாக 13 மாநிலம் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் உள்ள 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. #LokSabhaElections2019
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு ஏழு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக கடந்த 11-ம் தேதி 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கும், 18-ம் தேதி 13 மாநிலங்களில் 95 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது.
இந்த நிலையில், மூன்றாவது கட்ட தேர்தல் இன்று தொடங்கியது. 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 116 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
கேரளா (20), குஜராத் (26), கோவா (2), அசாம் (4), பீகார் (5), சத்தீஷ்கார் (7), கர்நாடகம் (14), மராட்டியம் (14), ஒடிசா (6), உத்தரபிரதேசம் (10), மேற்கு வங்காளம் (5), காஷ்மீர் (1), திரிபுரா (1) மாநிலங்களிலும் தத்ராநகர் ஹவேலி (1), டாமன் டையூ (1) ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடக்கிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.
ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மற்றும் அமித்ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.
அதேபோல் சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர், சரத்பவார் மகள் சுப்ரியா சுலே, பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ராஜசேகரன் ஆகிய முக்கிய தலைவர்களும் இன்றைய தேர்தலில் களம் காண்கின்றனர். #LokSabhaElections2019
பாராளுமன்றத்துக்கு இரண்டாவது கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று தொடங்கியது. #LokSabhaElections2019 #ParliamentElections
முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த 11-ஆம் தேதி 91 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.
அதேபோல், கர்நாடகா 14, மகாராஷ்டிரா 10, உத்தரபிரதேசம் 8, பீகார் 5, அசாம் 5, ஒடிசா 5, சத்தீஸ்கர் 3, காஷ்மீர் 2, மணிப்பூர் 1 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
சரியாக காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது வாக்கை பதிவு செய்தார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் நிலையில், பதிவாகும் வாக்குகள், வருகிற மே 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். #LokSabhaElections2019 #ParliamentElections
தேர்தல் கமிஷன் செயல்பாடு முற்றிலும் சீர்குலைந்து விட்டதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு முன்னாள் நீதிபதிகள் மற்றும் ராணுவ தளபதிகள் கடிதம் எழுதியுள்ளனர். #ElectionCommission #RamnathKovind
புதுடெல்லி:
மத்திய தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் அதன் நம்பகத்தன்மையை பாதித்து இருப்பதாக ஏற்கனவே முன்னாள் உயர் அதிகாரிகள் பலர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் அனுப்பி இருந்தனர்.
இப்போது முன்னாள் உயர் அதிகாரிகள் 80 பேர் கையெழுத்திட்டு புதிதாக ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் முன்னாள் டெல்லி போலீஸ் கமிஷனர் ஆர்.எஸ்.குப்தா, முன்னாள் விமானப்படை துணை தளபதி ஆர்.சி.பாஜ்பாய், முன்னாள் வெளிவிவகார உயர் அதிகாரி அசோக்குமார், முன்னாள் ராணுவ துணை தளபதி ஏ.கே.ஷானி மற்றும் முன்னாள் உயர் ராணுவ அதிகாரிகள், நீதிபதிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என பலரும் கையெழுத்திட்டு உள்ளனர்.
அந்த கடிதத்தில் அவர்கள் கூறி இருப்பதாவது:-
தேர்தல் கமிஷன் மீது அதிருப்தி தெரிவித்து நாங்கள் ஏற்கனவே தங்களுக்கு கடிதம் அனுப்பி இருந்தோம். இதன் பிறகும் கூட தேர்தல் கமிஷனின் போக்கில் மாற்றம் தென்படவில்லை.
இப்போது தேர்தல் கமிஷன் நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கும் போது அதன் மீதான நம்பகத்தன்மை கவலை அடைய செய்கிறது.
தேர்தல் கமிஷன் மீதான களங்கம் உச்சக்கட்டத்தை அடைந்து இருக்கிறது. இவர்களால் நேர்மையான முறையில் தேர்தல் நடத்த முடியுமா? என்ற சந்தேகம் அதிகரித்து இருக்கிறது. அதற்கான திறன் தேர்தல் கமிஷனிடம் தென்படவில்லை. அதன் செயல்பாடுகள் முற்றிலும் சீர்குலைந்து இருக்கிறது.
நாங்கள் நாட்டின் முக்கியமான குடிமகன்கள் என்ற முறையில் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்கள் கவலையை உங்கள் முன் வைக்கிறோம்.
ஜனநாயகத்தில் தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அதனை தரம் தாழ்த்த சிலர் முயற்சிக்கிறார்கள். அதற்கு தேர்தல் கமிஷன் வளைந்து கொடுத்து பாரபட்சமாக நடக்கிறது.
ஒரு குறிப்பிட்ட நபர்களின் நலனுக்கு தேர்தல் கமிஷன் உதவியாக இருக்கிறது. இதன் மூலம் தேர்தல் கமிஷனின் மரியாதை தரம் தாழ்த்தப்பட்டு உள்ளது. ஆளும் கட்சி தேர்தல் விதி மீறல்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கடிதத்தில் கூறி உள்ளனர். #ElectionCommission #RamnathKovind

டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னம் தரமுடியாது என சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. #ElectionCommission #dinakaran #supremecourt
புதுடெல்லி:
தலைமை தேர்தல் கமிஷன் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ந்தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அணியை அதிகாரப்பூர்வ அ.தி.மு.க.வாக அறிவித்து, அந்த அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது.
இதை எதிர்த்து டி.டி.வி.தினகரன் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை தற்போது டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் டி.டி.வி.தினகரன் இடைக்கால மனு ஒன்றை டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில், தான் ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டி, உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் விதத்தில் இரட்டை இலை சின்னம் வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை தனக்கு பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்கும் படியும், தனது அணிக்கான பெயரை தான் குறிப்பிட்டுள்ள 3 பெயர்களில் இருந்து ஒன்றை அனுமதிக்கும்படியும் தேர்தல் கமிஷனுக்கு கோர்ட்டு உத்தரவிடக்கோரி இருந்தார்.
அவருடைய இந்த கோரிக்கையை டெல்லி ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டு, பிரஷர் குக்கர் சின்னத்தை டி.டி.வி. தினகரனுக்கு ஒதுக்கீடு செய்யும்படி தேர்தல் கமிஷனுக்கு கடந்த ஆண்டு மார்ச் 9-ந்தேதி உத்தரவிட்டது.
டெல்லி ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மதுசூதனன் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி ஏ.எம். கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் டி.டி.வி. தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்க டெல்லி ஐகோர்ட்டு ஆணை பிறப்பித்தது தவறு என்று கூறி, அந்த உத்தரவுக்கு கடந்த ஆண்டு மார்ச் 28-ந்தேதி இடைக்கால தடை விதித்தது.
அத்துடன், சுப்ரீம் கோர்ட்டில் இந்த பிரச்சினை மீது அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் வரை பிரஷர் குக்கர் சின்னத்தை டி.டி.வி. தினகரன் தலைமையிலான அணி பயன்படுத்தக்கூடாது என்றும் நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கட்சி பதிவு செய்யப்படாததால், டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க.வுக்கு பொதுச்சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் இந்திய தேர்தல் ஆணையம் வாதம் செய்தது. இதைத்தொடர்ந்து விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை தர முடியாது என உச்சநீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அ.ம.மு.க. பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் பொது சின்னத்தை வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ElectionCommission #dinakaran #supremecourt
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்திற்கு சிறப்பு செலவின பார்வையாளராக மதுமகாஜன் என்பவரை தேர்தல் ஆணையம் இன்று நியமனம் செய்துள்ளது. #LSpolls #MadhuMahajan #SpecialExpenditureObservers
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிரமாக வேலை செய்து வருகின்றன.
பாராளுமன்ற தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கான வேலைகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாநில தேர்தல் ஆணையர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்திற்கு சிறப்பு செலவின பார்வையாளராக மது மகாஜன் என்பவரை நியமனம் செய்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்திற்கும் தேர்தல் பார்வையாளராக ஷைலேந்திர ஹண்டா என்பவரை நியமனம் செய்துள்ளது.
தேர்தல் காலத்தில் பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. #LSpolls #MadhuMahajan #SpecialExpenditureObservers
பாராளுமன்ற தேர்தலில் இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க முன்வர வேண்டும் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அனைத்துக் கட்சிகளுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். #ParliamentElection #PMModi
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார்.
இந்நிலையில், வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க முன்வர வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியதாவது:
ஜனநாயகத்துக்கான தேர்தல் திருவிழா துவங்கியது. 2019 லோக்சபா தேர்தலில் அனைவரும் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும். இத்தேர்தல் வரலாற்று திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்புகிறேன். இந்திய குடிமகன்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். குறிப்பாக, முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் தங்களது வாக்குகளைப் பதிவுசெய்து சாதனையை உருவாக்க வேண்டும்.
பல வருடங்களாக தேர்தல்களை சிறப்பாக நடத்தி வரும் தேர்தல் கமிஷனால் இந்தியாவுக்கு பெருமை கிடைத்துள்ளது. தேர்தலை சிறப்பான முறையில் நடத்த தேர்தல் கமிஷன், அதிகாரிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
2019 லோக்சபா தேர்தலை சந்திக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். கட்சிகளால் நாம் வேறுபட்டு இருந்தாலும் அனைவரது குறிக்கோளும் ஒன்றே. அது இந்தியாவின் வளர்ச்சி மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் அதிகாரமளிக்க வேண்டும் என்பதுதான் என பதிவிட்டுள்ளார். #ParliamentElection #PMModi
×

X