என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இந்திய வெளியுறவு அமைச்சகம்
நீங்கள் தேடியது "இந்திய வெளியுறவு அமைச்சகம்"
தூதரக அதிகாரிகளை துன்புறுத்தியதற்காக, பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. #Indiacondemned #embassyofficials
புதுடெல்லி:
பாகிஸ்தானில் உள்ள நான்கானா சாஹிப் குருத்வாரா மற்றும் சச்சா சவுதா குருத்வாரா ஆகியவற்றுக்கு இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 21, 22-ந் தேதிகளில் செல்வது வழக்கம்.
இந்த முறை சீக்கிய பக்தர்கள் சென்றபோது அவர்களை சந்திக்க இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. பாகிஸ்தானின் வெளிநாட்டு அமைச்சகம் முன்அனுமதி வழங்கிய பின்னரும் அவர்கள் தடுக்கப்பட்டனர்.
இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் மிகவும் கவலையும், கண்டனமும் தெரிவித்துள்ளது. ‘இந்தியாவின் இறையாண்மையையும், பிராந்திய நேர்மையையும் வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மதவிரோதத்தை தூண்டிவிடுதல், வெறுப்பு, மற்றும் பிரிவினைவாதிகளை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது’ என இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. #Indiacondemned #embassyofficials
×

X