search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா ஹாங்காங் கிரிக்கெட்"

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா நாளை தனது முதல் ஆட்டத்தில் கத்துக்குட்டி அணியான ஹாங் காங்கை எதிர்கொள்கிறது. #AsiaCup2018 #INDvHK
    இந்தியா உள்பட 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய், அபுதாபி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. தொடக்க ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள இலங்கை அணி வங்காள தேசத்திடம் 137 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. நேற்று நடந்த 2-வது ‘லீக்’ ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹாங் காங்கை வீழ்த்தியது.

    3-வது ‘லீக்’ ஆட்டம் அபுதாபியில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் ‘ஏ’ பிரிவில் உள்ள இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இலங்கை அணிக்கு இருக்கிறது. தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.

    முதல் ஆட்டத்தில் வங்காள தேசத்திடம் தோற்றதால் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் இலங்கை வீரர்கள் வெறறிக்காக போராடுவார்கள். அதேபோல் ஆப்கானிஸ்தான் அணி இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்து வெளயேற்றும் ஆர்வத்துடன் உள்ளது.

    ஆசிய கோப்பை போட்டியின் 4-வது ‘லீக்’ ஆட்டம் துபாயில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் ‘பி’ பிரிவில் உள்ள இந்தியா - ஹாங் காங் அணிகள் மோதுகின்றன.



    கேப்டன் விராட் கோலிக்கு ஆசிய கோப்பையில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் 3 ஒருநாள் தொடரை கைப்பற்றி இருக்கிறார். இதனால் இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற முடியும் என்ற நம்பிக்கையோடு உள்ளது.

    கத்துக் குட்டியான ஹாங் காங்கை இந்திய அணி எளிதில் வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி இடத்தில் இடம் பெற போவது யார்? என்ற ஆர்வத்துடன் எதிரநோக்கப்படுகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் அம்பதி ராயுடு கோலியின் இடமான 3-வது வரிசையில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. இதேபோல் லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே ஆகியோரும் போட்டியில் உள்ளனர்.
    ×