search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரைச்சல் ஒலியை குறைக்கும் தொழில்நுட்பம்"

    விமானம் இயக்கப்படும் போது ஏற்படும் இரைச்சல் ஒலியை 70 சதவீதம் குறைத்து நாசா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். #NASA #FlightSound #noisereductiontechnology

    வாஷிங்டன்:

    விமானங்கள் இயக்கப்படும் போது அதிக அளவிலான இரைச்சல் சத்தம் ஏற்படும். பொதுவாக வானில் பறக்கும் விமானத்தில் இருந்து வரும் ஒளியை நிலத்தில் இருந்தே கேட்க முடியும். அப்படி இருக்கையில் விமான நிலையத்திற்கு அருகில் வசிப்பவர்கள் இந்த இரைச்சல் சத்தத்தினால் அதிக அளவில் பாதிப்படைகின்றனர். விமானத்தில் செல்லும் பயணிகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும். 

    இந்நிலையில், விமானம் இயக்கப்படும் போது ஏற்படும் இரைச்சல் ஒலியைக் குறைக்க அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் (நாசா) நீண்ட காலமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தது. பல்வேறு சோதனைகளுக்குப் பின் தற்போது அந்த சோதனையில் குறிப்பிடத்தக்க வெற்றியை எட்டியுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. 



    நாசாவின் சோதனை விமானங்களில் நடத்தப்பட்ட பல்வேறு மாற்றங்களுக்குப் பின் அவை இயக்கப்பட்டபோது இரைச்சல் ஒலி 70% குறைந்துள்ளதாகவும், இதற்காக விமான அமைப்பில் மூன்று தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த அளவுக்கு விமானத்தின் இரைச்சல் குறைக்கப்படுவது விமான நிலையத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படாதபடி உதவும் என தெரிவித்துள்ளனர். #NASA #FlightSound #noisereductiontechnology
    ×