search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இர்பான் பதான்"

    இந்தியாவின் இடது கை வேகப்பந்து கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் கரீபியர் பிரிமீயர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரைவு பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
    பிசிசிஐ ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை நடத்துவது போல், ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் வாரியமும் 20 ஓவர் லீக் தொடரை நடத்தி வருகிறது.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் கரீபியன் பிரிமீயர் லீக் என்ற பெயரில் நடத்தி வருகிறது. பொதுவாக இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த வீரர்களை வெளிநாட்டு தொடரில் விளையாட அனுமதிப்பதில்லை.

    இந்நிலையில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான், கரீபியன் பிரிமீயர் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரைவு பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ஏதாவது ஒரு அணி இவரை ஏலத்தில் எடுத்தால், கரீபியன் லீக்கில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.



    கரீபியன் பிரிமீயர் லீக் தொடர் செப்டம்பர் மாதம் 4-ந்தேதியில் இருந்து அக்டோபர் 12-ந்தேதி வரை நடக்கிறது.
    கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், டோனி இந்திய கிரிக்கெட் அணியின் கல்தூண் என புகழ்மாலை சூட்டியுள்ளார். #Dhoni #IrfanPathan
    ஸ்ரீநகர்:

    இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இன்று தனியார் கல்லூரி ஒன்றில் 23 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வதற்கான முகாம் நடத்தப்பட்டது.

    இந்த முகாமைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இர்பான் பதானிடம் அவர் விளையாடியபோது வழிநடத்திய சிறந்த கிரிக்கெட் கேப்டன் யார் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த இர்ஃபான் பதான், அனைத்து கேப்டன்களும் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்றும், ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.



    மேலும், கங்குலி தலைமையில் விளையாடும் போது அது ஒரு வித்தியாசமான அனுபவம் என்றும், என்றென்றும் பாராட்டுக்குரிய வகையில் அவரது தலைமை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் கேப்டன் டோனியின் தலைமை போற்றுதலுக்கு உரியது என்றும், அவர் இந்திய கிரிக்கெட் அணியின் கல்தூண் எனவும் வர்ணித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய இர்ஃபான் பதான், தற்போது கேப்டனாக இருக்கும் விராட் கோலியும் சிறப்பாக செயல்படுவதாகவும், அவர் புதிய கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிப்பது பாராட்டத்தக்க ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளார். #Dhoni #IrfanPathan
    ×