search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறுதி போட்டி"

    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் கிரிகோரியாவை வீழ்த்தி சாய்னா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். #DenmarkOpen #SainaNehwal
    ஓடென்ஸ்:

    டென்மார்க் நாட்டின் ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாய்னா நேவால் உலக தரவரிசையில் 19வது இடம் வகிக்கும் கிரிகோரியா மரீஸ்கா துன்ஜங்க் உடன் அரை இறுதியில் விளையாடினார்.

    இந்த போட்டியில் 21-11, 21-12 என்ற செட் கணக்கில் கிரிகோரியாவை வீழ்த்தி சாய்னா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இப்போட்டி 30 நிமிடங்கள் நீடித்தது.

    அவர் இறுதி போட்டியில் உலக தரவரிசையில் முதல் இடம் வகிக்கும் தாய் சூ யிங் உடன் விளையாட இருக்கிறார். #DenmarkOpen #SainaNehwal 
    கரிபியன் பிரீமியர் லீக்கின் இறுதி போட்டியில் ட்ரின்பகோ அணி வெற்றி பெற 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது கயானா அமேசான் அணி. #CPL #GAWvTKR
    டிரினிடாட்:

    கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதி போட்டி டிரினிடாடில் உள்ள பிரையன் லாரா விளையாட்டு மைதானத்தில் இன்று அதிகாலை தொடங்கியது. இதில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

    டாஸ் வென்ற ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, கயானா அமேசான் வாரியர்சின் தொடக்க வீரர்களாக கேமரூன் டெல்போர்ட், லூக் ரோஞ்சி ஆகியோர் களமிறங்கினர்.

    ட்ரின்பகோ அணியின் அலி கான் முதல் பந்தை வீச, கேமரூன் டெல்போர்ட் போல்டாகி டக் அவுட்டாகி வெளியேறினார்.



    அவரை தொடர்ந்து இறங்கிய ஷிம்ரோன் ஹெட்மையர் நிதானமாக ஆடினர். இருவரும் பொறுமையாக ஆடவே இந்த ஜோடி அரை சதத்தை கடந்தது. அணியின் எண்ணிக்கை 52 ஆக இருந்தபோது ஹெட்மையர் அவுட்டாகினார். அதன்பின்னர் வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், கயானா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது.

    ட்ரின்பகோ அணி சார்பில் காரி பியர்ரெ 3 விக்கெட்டும், டுவைன் பிராவோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து, 148 ரன்களை இலக்காக கொண்டு ட்ரின்பகோ அணி விளையாடி வருகிறது. #CPL #GAWvTKR
    அமெரிக்கா ஓபன் டென்னிசின் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகாவை சந்திக்கிறார் செரீனா வில்லியம்ஸ். #USOpen2018 #SerenaWilliams #NaomiOsaka
    நியூயார்க்:

    அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

    இன்று நடைபெற்ற பெண்களுக்கான அரையிறுதி ஒன்றில் லாத்வியாவை சேர்ந்த செவாஸ்டோவாவும், அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்சும் மோதினர்.

    இதில், 6-3 , 6 -0 என்ற கணக்கில் செவாஸ்டோவாவை எளிதாக வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்.



    இதேபோல், மற்றொரு அரையிறுதி போட்டியில், அமெரிக்காவின் மாடிசன் கெய்சும், ஜப்பானின் நவோமி ஒசாகாவும் மோதினர். இந்த போட்டியில், 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மாடிசன் கெய்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் ஒசாகா. 

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், ஜப்பானின் ஒசாகாவும் மோதுகின்றனர். #USOpen2018 #SerenaWilliams #NaomiOsaka
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். #AsianGames2018 #PVSindhu
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான சாய்னா நேவால், பிவி சிந்து இருவரும் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தனர். முதல் அரையிறுதி ஆட்டத்தில் சாய்னா நேவால் போராடித் தோல்வி அடைந்ததால் வெண்கலப் பதக்கத்துடன் ஆசிய போட்டியை நிறைவு செய்தார்.

    இதையடுத்து நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிவி சிந்து, ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை எதிர்கொண்டார். துவக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய பிவி சிந்து, முதல் செட்டை 21-17 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுத்த அகானே யமகுச்சி 2வது செட்டை வசமாக்கினார்.



    அதன்பின்னர் போட்டியின் முடிவை தீர்மானிக்கும் மூன்றாவது செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. கடும் சவாலுக்கு மத்தியிலும் முன்னேறிய பிவி சிந்து, அந்த செட்டை 21-10 என கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் 21-17, 15-21, 21-10 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற பிவி சிந்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். வெள்ளிப் பதக்கத்தையும் உறுதி செய்துள்ளார்.

    தங்கப் பதக்கத்துக்கான இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில், பிவி சிந்து, சீன வீராங்கனை தாய் டி சுயிங் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். #AsianGames2018 #PVSindhu
    சென்னையில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. #TNPL2018 #DDvMP
    சென்னை:

    டிஎன்பிஎல் போட்டியின் இறுதி ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெற்றது. இதில் ஜெகதீசன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின.

    முதலில் ஆடிய திண்டுக்கல் அணி 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து ஆடிய மதுரை பாந்தர்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது.

    திண்டுக்கல் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை கைப்பற்றியது.

    சாம்பியன் பட்டம் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாம் இட்ம் பிடித்த திண்டுக்கல் அணிக்கு 60 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அரை இறுதி வரை தேர்வான அணிகளுக்கு 40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    சென்னையில் இன்று நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல் அணியுடன் மதுரை அணி மோதுகிறது. டிஎன்பிஎல் கோப்பையை வெல்ல இரு அணிகளும் ஆவலுடன் உள்ளதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். #TNPL2018 #DDvMP
    சென்னை:

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 3-வது தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.

    சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம், நெல்லை சங்கர் நகர் ஐ.சி.எல். மைதானம், திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம் ஆகிய 3 இடங்களில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டிகள் நடைபெற்றன.

    கடந்த மாதம் 11-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. 5-ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன.

    இதன் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

    குவாலிபையர்-1 ஆட்டத்தில் திண்டுக்கல் அணி 75 ரன் வித்தியாசத்தில் மதுரையை வீழ்த்தியது. எலிமினேட்டர் போட்டியில் கோவை கிங்ஸ் 24 ரன் வித்தியாசத்தில் காரைக்குடி காளையை வீழ்த்தி வெளியேற்றியது. நேற்று முன்தினம் நடந்த குவாலிபையர்-2 ஆட்டத்தில் மதுரை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கோவையை வீழ்த்தி வெளியேற்றியது.

    இந்நிலையில், டிஎன்பிஎல் போட்டியின் இறுதி ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதுகின்றன.

    இரு அணிகளும் இந்தப் போட்டித் தொடரில் 3-வது முறையாக மோதுகின்றன. இதில் திண்டுக்கல் அணியே 2 முறை வென்றுள்ளது. இதனால் அந்த அணி டிஎன்பிஎல் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றும் நம்பிக்கையுடன் இருக்கிறது.

    இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் இன்றைய இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. #TNPL2018 #NammaOoruNammaGethu
    ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் அணி லிவர்பூல் அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. #2018UEFAChampionsLeague
    ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் கீவ் நகரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) அணியும், லிவர்பூல் (இங்கிலாந்து) அணியும் மோதின.

    போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் அபாரமாக ஆடின. இதனால் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.



    இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் கரிம் பென்சிமா முதல் கோல் அடித்தார். இதற்கு  பதிலடி கொடுக்கும் வகையில் லிவர்பூல் அணியின் சாடியோ மேன் 54-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன.

    தொடர்ந்து ரியல் மாட்ரிட் அணி சிறப்பாக ஆடியது. அந்த அணியின் கரேத் பாலே 63 மற்றும் 82 வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தார். இதனால் ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியது. #2018UEFAChampionsLeague
    ×