search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை அதிபர் சிறிசேனா"

    இந்திய பிரதமர் மோடி அடுத்த மாத துவக்கத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதை அந்நாட்டு அதிபர் சிறிசேனா உறுதி செய்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, வெளிநாட்டுப் பயணத்தில் முதல் நாடாக மாலத்தீவு செல்கிறார். ஜூன் மாத துவக்கத்தில் மாலத்தீவு செல்லும் மோடி, அங்கிருந்து இலங்கைக்கு செல்ல உள்ளார். இத்தகவலை இலங்கை அதிபர் சிறிசேனா இன்று உறுதி செய்துள்ளார். 

    டெல்லியில் மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்றார். அவரை மோடி இன்று சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் பேசினர்.

    மோடியுடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிறிசேனா, மோடியின் இலங்கை பயணத்தை உறுதி செய்தார்.

    இலங்கைக்கு இந்திய பிரதமர் மோடி வருகை தர உள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அவரது வருகையை பெருமையாக கருதுவதாகவும் சிறிசேனா கூறினார். 

    ‘மோடியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். உலகம் முழுவதிலும் பயங்கரவாதம் பல்வேறு வடிவங்களில் தலை தூக்கி உள்ளது. சில நாடுகளில் உள்நாட்டு பயங்கரவாதிகள் உள்ளனர். உலகில் உள்ள அனைத்து ஜனநாயக நாடுகளும் ஒன்றிணைந்தால் தான் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும்’ என்றும் சிறிசேனா கூறினார்.
    நேபாளம், மொரிஷியஸ், பூடான், வங்காளதேசம் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
    புதுடெல்லி:

    நாட்டின் பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறை நேற்று பொறுப்பேற்ற நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த அதிபர்களும் பிரதமர்களும் இந்தியா வந்துள்ளனர்.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து இருநாடுகள் இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    இதைதொடர்ந்து, வங்காளதேசம் அதிபர் அப்துல் ஹமித், மொரிஷியஸ் பிரதமர் பிரவின்ட் குமார், நேபாள பிரதமர் ஷர்மா ஒலி, பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி அந்நாடுகளுடனான இந்தியாவின் பல்வேறுதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகிறார்.
    இலங்கை வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்புள்ளதாக கருதப்படும் மதகுரு ஜக்ரன் ஹசிம் உயிரிழந்து விட்டதாக சிறிசேனா தெரிவித்து உள்ளார். #SriLanka #sirisena
    கொழும்பு:

    இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக இஸ்லாமிய மதகுரு ஜக்ரன் ஹசீம் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில், ஒட்டலில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மதகுரு ஜக்ரன் ஹசீம் உயிரிழந்து விட்டதாக இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்து உள்ளார். 

    தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக ஜக்ரன் ஹசீம் செயல்பட்டு வந்தார் என கூறப்படுகிறது. இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.  #SriLanka #sirisena
    இலங்கையில் இன்று மாலை 6 மணியில் இருந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வதந்திகள் பரவாமல் தடுக்க சமூக வலைத்தளங்களை அரசு முடக்கியது. #SriLankablasts #SriLankacurfew #Colomboblast #SriLankabans #SocialMediaban
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வரிசையில் தெம்மட்டகொடா குடியிருப்பு பகுதியில் இன்று பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் 8-வதாக நிகழந்த மற்றொரு குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

    இதைதொடர்ந்து, இன்று மாலை 6 மணியில் இருந்து நாளை காலை 6 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக இலங்கை அதிபர் மாளிகை அறிவித்தது. பின்னர் ஊரடங்கு உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. நாளையும் நாளை மறுநாளும் (ஏப்ரல் 22,23) அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பான தவறான செய்திகளும், வதந்திகளும் பரவாமல் தடுக்கும் வகையில் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை அரசு முடக்கியது. #SriLankablasts #SriLankacurfew #Colomboblast #SriLankabans #SocialMediaban
      
    இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவை கொல்வதற்கு சதி திட்டம் தீட்டியதாக கடந்த ஆண்டு கைதான இந்தியருக்கு எதிராக போதிய ஆதாரமில்லாததால் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது. #MarceliThomas #Indianheld #plottokill #LankanPresident #plottokillSirisena
    கொழும்பு:

    இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் மர்செலி தாமஸ். இலங்கையில் தங்கி இருந்த இவர் அந்நாட்டின் அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா மற்றும் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் தம்பியும் இலங்கையின் முன்னாள் ராணுவ ஆலோசகருமான கோத்தப்பய ராகபக்சே ஆகியோரை கொல்வதற்கு திட்டமிட்டு வந்ததாக இலங்கை ரகசிய போலீஸ் படையை சேர்ந்த உளவாளியான நாமல் குமாரா என்பவர் போலீசில் புகார் அளித்தார்.

    இதைதொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்ட மர்செலி தாமஸ் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.

    இவர் மீதான வழக்கு கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்தமுறை விசாரணைக்கு வந்தது.

    மர்செலி தாமஸ்-ஐ கைது செய்த ரகசிய போலீசார் தரப்பில் அவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் கோர்ட்டில் சமர்பிக்கப்படாததை சுட்டிக்காட்டிய நீதிபதி, இன்னும் இரு வாரங்களுக்குள் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டிருந்தார்.

    ஆனால், போலீஸ் தரப்பில் சரியான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, இவ்வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்வதாக நீதிபதி ரங்க திசநாயகே இன்று உத்தரவிட்டார்.

    எனினும், தனது விசா காலம் காலாவதியான பின்னரும் அனுமதியின்றி இலங்கையில் தங்கி இருந்த குற்றத்துக்காக மர்செலி தாமஸ் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. #MarceliThomas #Indianheld #plottokill #LankanPresident #plottokillSirisena
    மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை தூக்கிலிடும் வேலைக்கு ஆட்கள் தேவை என இலங்கை சிறைத்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. #SriLankahangmen #hangmenrecruitment #MaithripalaSirisena
    கொழும்பு:

    இலங்கை நாட்டில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இனி கருணை காட்ட மாட்டோம். மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தூக்கிலிட்டு கொல்லப்படுவார்கள் என அந்நாட்டின் அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா சமீபத்தில் பாராளுமன்ற உரையின்போது தெரிவித்திருந்தார்.

    இலங்கையில் கடைசியாக கடந்த 1976-ம் ஆண்டில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் பதவிக்கு வந்த அதிபர்கள் மரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பான எந்த உத்தரவிலும் கையொப்பமிடவில்லை.

    இதனால், கடந்த 42 ஆண்டுகளில் எந்த கைதியும் அங்குள்ள சிறைகளில் தூக்கிலிட்டு கொல்லப்படவில்லை. தற்போதைய நிலவரப்படி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய 48 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களில் 30 பேர் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்து வழக்காடி வருகின்றனர். 18 பேரின் உயிர்கள் அதிபரின் கையொப்பத்துக்கான உத்தரவில் ஊசலாடி வருகிறது.

    இந்நிலையில், அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா சமீபத்தில் அறிவித்திருந்ததுபோல் இலங்கை சிறைகளில் மரண தண்டனையை நிறைவேற்றும் வகையில் தூக்கிலிடும் பணியை செய்து முடிக்க யாரும் தற்போது இல்லை.

    அந்த பணியில் இருந்த ஒருவர் கடந்த 2014-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றப்பிறகு மூன்று பேர் இந்த வேலைக்காக சேர்ந்தனர். ஆனால், அவர்களும் குறுகிய காலத்துக்குள் வேலையை விட்டு நின்று விட்டனர்.

    எனவே, ஒருவேளை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா சிறையில் இருக்கும் கைதிகளில் சிலருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு திடீரென்று உத்தரவிட்டால் அந்த காரியத்தை செய்து முடிப்பதற்காக புதிய கொலையாளிகளை நியமிக்க இலங்கை சிறைத்துறை தீர்மானித்துள்ளது.

    இதுதொடர்பான அறிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் இந்த பணிக்கான இருவரை தேர்வு செய்வதற்காக இன்று (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் அந்நாட்டின் சிறைத்துறை கமிஷனர் தனசிங்கே தெரிவித்துள்ளார். #SriLankahangmen #hangmenrecruitment #MaithripalaSirisena
    இலங்கையில் தேசிய அரசாங்கம் அமைக்க விரும்பவில்லை என்று பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவின் நடவடிக்கைக்கு அதிபர் சிறிசேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். #sirisena #RanilWickramasinghe
    கொழும்பு :

    இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி 2015-ம் ஆண்டு சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியுடன் சேர்ந்து அரசு அமைத்தது. இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார்.

    ஆனால் ராஜபக்சேவால் 2 முறை பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், மீண்டும் விக்ரமசிங்கேவையே பிரதமராக நியமிக்க வேண்டிய நிலைக்கு சிறிசேனா தள்ளப்பட்டார். அவர் நியமிக்கப்பட்ட டிசம்பர் மாதத்தில் இருந்து விக்ரமசிங்கே தலைமையிலான அரசு தேவையான பெரும்பான்மை (113 உறுப்பினர்கள்) இல்லாமலேயே செயல்பட்டு வருகிறது.

    சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு ஜனவரி 5-ந் தேதி புதிதாக தேர்தலை நடத்த உத்தரவிட்டதையும் சுப்ரீம் கோர்ட்டு தடுத்துவிட்டது.

    இந்நிலையில் விக்ரமசிங்கே இலங்கையில் தேசிய அரசாங்கம் அமைக்க திட்டமிட்டார். இதற்காக இலங்கை முஸ்லிம் காங்கிரசின் ஒரே ஒரு உறுப்பினருடனும், சிறிசேனாவின் சுதந்திரா கட்சியை சேர்ந்த சிலருடன் ஒரு உடன்பாடு செய்துகொண்டார். இதன்மூலம் மட்டுமே 225 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கும்.

    இலங்கையின் அடுத்த அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதத்தில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் நடத்தப்பட வேண்டும். தற்போதைய அதிபர் சிறிசேனாவுடன் ஏற்பட்ட பிளவு காரணமாக விக்ரமசிங்கேவின் கட்சி மீண்டும் அவரை ஆதரிக்காது என்று ஏற்கனவே அறிவித்துவிட்டது.

    ராஜபக்சே 2 முறை அதிபர் பதவி வகித்துள்ளதால் அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. அவரது புதிய கட்சியான இலங்கை மக்கள் கட்சியும் சிறிசேனாவை ஆதரிக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. எனவே இந்த ஆண்டு இலங்கை அரசியலில் மிகவும் சிக்கலான ஆண்டாகவே இருக்கும் என கருதப்படுகிறது.



    இதற்கிடையே பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கடந்த வெள்ளிக்கிழமை, தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கும்படி சபாநாயகரிடம் கோரிக்கைவிடுத்தார். பிரதமரின் கோரிக்கைக்கு அதிபர் சிறிசேனா இலங்கை சுதந்திர தின விழா உரையில் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக நான் பத்திரிகைகளில் பார்த்தேன். இதனை நான் எதிர்க்கிறேன். தேசிய அரசாங்கம் அமைப்பது என்பது மந்திரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், மக்கள் பணத்தில் மந்திரிகளுக்கு சலுகைகள் வழங்குவதும் மட்டுமே. இது முறையற்றது. மந்திரிகள் 25 பேருக்குள் இருக்க வேண்டும் என்றே மக்கள் விரும்புகிறார்கள்.

    தேர்தல் நடைபெற உள்ள இந்த ஆண்டில் சர்வதேச சக்திகள் இலங்கைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. சர்வதேச பிற்போக்கு சக்திகள் பல்வேறு உருவங்களில் இலங்கைக்குள் வந்துள்ளன.

    இலங்கை சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகள் ஆகியும் தமிழர்கள் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது என்பதே தேசிய அளவில் முக்கிய கேள்வியாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த வாரம் இலங்கை தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வெளிப்படையாக சிறிசேனா எதிர்த்தது குறிப்பிடத்தக்கது. #sirisena #RanilWickramasinghe
    இலங்கையில் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிராம சேவகர் பணி தொடர்பான நிகழ்ச்சியை நிறுத்த அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். #Sirisena
    கொழும்பு:

    இலங்கையில் அரசு தொலைக்காட்சியில் ‘கோப்பி கடை’ என்ற பெயரில் சிங்கள தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

    இதில் “கிராம சேவகருக்கு பைத்தியம்” என்ற பெயரில் ஒரு பாகம் ஒளிபரப்பப்பட்டு வந்தது. அதில் கிராம சேவகருக்கு பைத்தியம் பிடித்து வாள் எடுத்துக் கொண்டு வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

    இந்த தொலைக்காட்சி தொடர் பற்றி அறிந்த அதிபர் சிறிசேனா உடனடியாக தொடரை நிறுத்த உத்தரவிட்டார். இதையடுத்து அந்த தொடரின் “கிராம சேவகருக்கு பைத்தியம்” என்ற பெயரில் ஒளிபரப்பான பாகம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

    இதற்கான காரணம் பற்றி விசாரித்தபோது, ருசிகர தகவல் வெளியானது. அதிபர் சிறிசேனா, ஆரம்பத்தில் பொலன்நறுவை கிராமத்தில் கிராம சேவகராக பணியாற்றினார். அதுதான் அவரது முதலாவது அரசு பணியாகும். இதனால் தனது முதலாவது அரசு பணியை அவமதிக்கும் விதமாக டி.வி. தொடர் எடுக்கப்பட்டு இருந்ததால் அதை நிறுத்த உத்தரவிட்டதாக தெரிய வந்தது.

    கோப்பி கடை என்ற சிங்கள தொடர் அன்றாட அரசியல் நிகழ்வுகள் மற்றும் சமூக நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டு வருகிறது.  #Sirisena
    கடும் நெருக்கடி கொடுத்தால் நாட்டு மக்களுக்கு உரையாற்றி விட்டு எனது அதிபர் பதவியை ராஜினாமா செய்வேன் என சிறிசேனா கூறியதாக முன்னாள் மந்திரி தெரிவித்துள்ளார். #SriLanka #sirisena #ManoGanesan
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்கிரம சிங்கேவை அதிபர் சிறிசேனா திடீரென நீக்கினார். அப்பதவியில் முன்னாள் அதிபர் மகிந்த ராகபக்சேவை நியமித்தார்.

    இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ராகபக்சேவுக்கு போதிய மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். அதற்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. ராஜபக்சேவும் பிரதமராக தொடரவும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

    இதனால் இலங்கை அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 2 தடவை நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் ராஜபக்சேவை எதிர்க்கட்சிகள் தோற்கடித்துள்ளன. இருந்தும் அவரை சிறிசேனா நீக்கவில்லை.

    அதேநேரத்தில் ரனில் விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்கவும் மறுப்பு தெரிவித்து வருகிறார். இத்தகைய சூழ்நிலையில் ரனில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி கட்சி தலைவர்கள் அதிபர் சிறிசேனாவை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

    அப்போது ரனில் விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனால் அதிபர் சிறிசேனா உணர்ச்சி வசப்பட்டார்.

    ‘‘என்னை மேலும் அதிக நெருக்கடிக்கு ஆளாக்காதீர்கள். இதுபோன்று தொடர்ந்தால் நாட்டு மக்களுக்கு உரையாற்றி விட்டு எனது அதிபர் பதவியை ராஜினாமா செய்வேன்.

    மனோ கணேசன்

    எனது பொலொன்னறுவை பண்ணைக்கு செல்வேன்’’ என்றார். இந்த தகவலை முன்னாள் மந்திரி மனோ கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #SriLanka #sirisena #ManoGanesan
    ஹிட்லர் போல நடந்து கொள்ளாதீர்கள் என இலங்கை அதிபர் சிறிசேனாவை ரனில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். #RanilWickremesinghe #Sirisena #Hitler
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி விட்டு புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா நியமித்தார். ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத் தேர்தல் நடத்தவும் சிறிசேனா உத்தரவிட்டார்.

    ஆனால் அதிபரின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில் ரனில் விக்ரமசிங்கேயை மீண்டும் பிரதமர் பதவியில் நியமிக்க முடியாது என்று சிறிசேனா பிடிவாதமாக கூறி வருகிறார்.



    இதுபற்றி விக்ரமசிங்கே கூறுகையில், “அரசாங்கத்தில் உள்ள நாம் அனைவரும் அரசியல் சட்டத்தை காப்போம். அரசியலமைப்புடன் யாரும் விளையாட வேண்டாம். நீங்கள்(சிறிசேனா) சர்வாதிகாரி ஹிட்லர் போல நடந்து கொள்ளக் கூடாது. நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும் என்றால் அதை சட்டப்பூர்வ அரசுதான் முடிவு செய்யவேண்டும். தேர்தலுக்கு நாங்கள் பயந்தவர்கள் அல்ல. எந்த தேர்தலையும் சந்திக்கத் தயார். அதேநேரம் சிறிசேனா கோர்ட்டு உத்தரவுப்படி நடந்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்கவேண்டி வரும்” என்றார். #RanilWickremesinghe #Sirisena #Hitler

    இலங்கை பிரதமராக தொடர இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து இலங்கை உயர் நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்யப்படும் என ராஜபக்சே கூறினார். #Rajapaksa #sirisena #ranilwickramasinghe
    கொழும்பு:

    இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ரம சிங்கேயுக்கும் இடையேயான பனிப்போரில் கடந்த அக்டோபர் மாதம் 26ந்தேதி அதிரடி திருப்பம் ஏற்பட்டது. பிரதமர் பதவியில் இருந்து ரனிலை நீக்கியும், முன்னாள் அதிபர் ராஜபக்சேயை பிரதமர் பதவியில் அமர்த்தியும் சிறிசேனா உத்தரவிட்டார்.  நாடாளுமன்றத்தையும் முடக்கினார்.

    ஆனால் நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பல தரப்பிலும் குரல் வலுத்தது. அதை தொடர்ந்து நாடாளுமன்றத்தை 14ந்தேதி கூட்டி சிறிசேனா அறிவிப்பு வெளியிட்டார். இருப்பினும் ராஜபக்சே குதிரைப்பேரம் நடத்தியும், பெரும்பான்மையை நிரூபிக்கத்தக்க அளவுக்கு தேவையான எம்.பி.க்கள் கிடைக்கவில்லை.

    இதையடுத்து நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா கடந்த 9ந்தேதி உத்தரவிட்டார். நாடாளுமன்றத்துக்கு ஜனவரி 5ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் கருத்தை அறியாமல் பொதுத்தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரியா குறிப்பிட்டார்.

    இதற்கிடையில் ரனில் விக்ரமசிங்கே உள்ளிட்ட அந்நாட்டு எம்.பி.க்கள் 122 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ராஜபக்சே பிரதமராக செயல்படவும், அமைச்சரவை கூட்டம் நடத்தவும் இடைக்கால தடை விதித்தது. ராஜபக்சேவும், அவரால் அமைச்சராக நியமிக்கப்பட்டவர்களும், டிசம்பர் 12ம் தேதி ஆஜராகவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இலங்கை பிரதமராக தொடர இடைக்கால தடை விதித்ததை ஏற்கமாட்டோம். இதனை எதிர்த்து இலங்கை உயர்நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்யப்படும் என ராஜபக்சே கூறினார். #Rajapaksa #sirisena #ranilwickramasinghe
    இலங்கையில் அரசியல் குழப்பம் தீர பாராளுமன்றத்தை கலைத்து விட்டு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என மகிந்த ராஜபக்சே மீண்டும் வலியுறுத்தி உள்ளார். #MahindaRajapaksa #sirisena
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்கிரமசிங் கேவை அதிபர் சிறிசேனா நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை நியமித்தார்.

    அதை ஏற்க ரனில் விக்கிரமசிங்கே மறுத்து விட்டார். ராஜபக்சேவுக்கு மெஜாரிட்டி இல்லாததால் பாராளுமன்றத்தை கலைத்தார். அதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. ராஜபக்சேவை பிரதமராக நியமித்தது செல்லாது என்றும் அறிவித்தது.

    அதையடுத்து நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் ராஜபக்சே மீது எதிர்க் கட்சிகள் 2 தடவை கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. இருந்தும் ராஜபக்சேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க சிறிசேனா மறுத்து வருகிறார். இதனால் இலங்கையில் அரசியல் குழப்பம் நிலவுகிறது.

    இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாணும்படி அதிபர் சிறிசேனாவை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தநிலையில் அரசியல் குழப்பம் தீர பாராளுமன்றத்தை கலைத்து விட்டு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ராஜபக்சேவை வலியுறுத்தி உள்ளனர்.

    இக்கருத்தை ஏற்கனவே அவர் கூறி இருந்தார். தற்போது மீண்டும் அதை வலியுறுத்தி இருக்கிறார்.

    இந்தநிலையில் இலங்கை பாராளுமன்றம் வருகிற 5-ந்தேதி மீண்டும் கூடுகிறது. அப்போது ராஜபக்சே அரசு மீது 3-வது தடவையாக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதில் தீர்மானம் வெற்றி பெற்றால் புதிய பிரதமரையும், மந்திரிகளையும் அதிபர் சிறிசேனா நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். #MahindaRajapaksa #sirisena
    ×