என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இலங்கை பெண்
நீங்கள் தேடியது "இலங்கை பெண்"
சபரிமலையில் இலங்கை பெண் சாமி தரிசனம் செய்தார் என்பது போலீசார் வெளியிட்ட வீடியோ பதிவின் மூலம் தற்போது தெரிய வந்துள்ளது. #SabarimalaTemple #SrilankanWoman
திருவனந்தபுரம்:
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு பிந்து, கனகதுர்கா என்ற 2 இளம்பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சென்றனர்.
18-ம் படி ஏறாமல் பின்பக்க பாதை வழியாகச் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து கோவில் நடை மூடப்பட்டு பரிகார பூஜை நடத்தப்பட்டது.
சபரிமலையில் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டமும் நடந்தது.
இந்தநிலையில் இன்று இலங்கை காரத்தீவைச் சேர்ந்த தமிழ் பெண் சசிகலா (வயது 47) என்பவர் சன்னிதானம் சென்று சாமி தரிசனம் செய்தார். இந்த தகவல் வெளியானதும் சபரிமலையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
மரக்கூட்டம் பகுதியில் இலங்கை தமிழ் பெண் சசிகலாவை போராட்டக்காரர்கள் வழிமறித்தனர். அப்போது அவர் சபரிமலை சென்றது உண்மை. ஆனால் 18-ம் படி ஏறவில்லை. சாமி தரிசனமும் செய்யவில்லை என்றார். தன்னுடன் வந்த கணவரும், குழந்தையும் மட்டுமே 18-ம் படியேறி தரிசனத்துக்கு சென்றதாக கூறினார்.
இதனால் இலங்கை தமிழ் பெண் சன்னிதானம் சென்ற 18-ம் படி ஏறி சாமி தரிசனம் செய்தாரா? என்ற கேள்வி எழுந்தது.
இதையடுத்து சபரிமலை சன்னிதானத்தில் உள்ள கண்காணிப்பு காட்சிகள் மற்றும் ஊடகங்கள் பதிவு செய்த காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சசிகலாவின் கணவரும், அவரது மகனும் இன்று காலையில் சன்னிதானம் வழியாக செல்லும் காட்சிகள் காணப்பட்டது. அவர்கள் சென்ற சில நிமிடங்களுக்கு பிறகு சசிகலா தனியாக நடந்து செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.
இதுபற்றி போலீசாரிடம் நிருபர்கள் கேட்டபோது அவர்கள் அதை மறுக்கவில்லை. மாறாக இலங்கை பெண் சசிகலாவுக்கு 47 வயதே ஆவதால் அவரை போராட்டக்காரர்கள் தடுத்து அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்பதால் மறுப்பு தெரிவித்து கூறியதாக தெரிவித்தனர். போராட்டக்காரர்களுக்கு பயந்தே சசிகலாவும் சாமி தரிசனம் செய்ததை மறுத்ததாகவும் கூறப்பட்டது.
சசிகலாவுக்கு 47 வயதே ஆனாலும் அவர் உடல் நலக்குறைவால் கர்ப்பப்பை அகற்றப்பட்டவர். அதற்கான மருத்துவ சான்றிதழையும் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
காலையில் தரிசனம் செய்த சசிகலா, போலீஸ் பாதுகாப்புடன் பம்பை சென்றார். அங்கு ஏற்கனவே தயாராக இருந்த மற்றொரு போலீஸ் குழுவுடன் அவர் மின்னல் வேகத்தில் கொச்சி விமான நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு உடனடியாக விமானம் மூலம் இலங்கைக்கு புறப்பட்டார். சசிகலா புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்துக்கு பிறகே அவர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவை போலீசார் வெளியிட்டனர். இதன் மூலம் சசிகலாவை போலீசார் திட்டமிட்டே சன்னிதானம் அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வைத்ததாக பக்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இலங்கை பெண் தரிசனம் செய்ததை உறுதி செய்த போலீசார் அவர் 18-ம் படி ஏறினாரா? என்பதை கூற மறுத்தனர்.
இதற்கிடையே இன்று சபரிமலை சென்ற திருநங்கை ஒருவரும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் காரணமாக சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை. அவரது பெயர் கயல்.
சபரிமலைக்கு தரிசனம் செய்ய சென்ற அவரை ஐயப்ப பக்தர்கள் தடுத்து போராட்டம் நடத்தியதால் ஏமாற்றத்துடன் அவர் திரும்பினார். #SabarimalaTemple #SrilankanWoman

சபரிமலைக்கு மருத்துவ சான்றிதழுடன் வந்த 46 வயது இலங்கை பெண் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. #SabarimalaTemple #SrilankanWoman
திருவனந்தபுரம்:
இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண்ணான சசிகலா இதுபற்றி கூறுகையில், “நான் ஐயப்ப பக்தை. முறையாக 48 நாட்கள் விரதமிருந்து வந்துள்ளேன். நான் என்னுடைய கர்ப்பப் பையை மருத்துவ காரணங்களுக்காக எடுத்துவிட்டேன். அதற்கான மருத்துவ சான்றிதழும் என்னிடம் இருக்கிறது. ஆனாலும், என்னை திருப்பி அனுப்பிவிட்டனர். 18 படிகள் மட்டுமே ஏறினேன், சாமி தரிசனம் செய்ய என்னை அனுமதிக்கவில்லை” என்றார்.
ஆனால், அவர் ஐயப்பனை நிச்சயம் தரிசனம் செய்திருப்பார் என போலீசார் கூறுகின்றனர்.
இதேபோல் சபரிமலை கோயிலுக்கு சென்ற தேனி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை ஒருவர் ஏமாற்றத்துடன் திரும்பினார். பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக கோயிலில் வழிபடாமல் பம்பையில் இருந்து திரும்பி சென்றுள்ளார். #SabarimalaTemple #SrilankanWoman
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கேரளாவைச் சேர்ந்த 2 பெண்கள் தரிசனம் செய்ததையடுத்து இந்து அமைப்புகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின்போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக ஏராளமானோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இலங்கையைச் சேர்ந்த 46 வயது பெண் பக்தை சசிகலா தன் கணவருடன் வந்து நேற்று இரவு 18 படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்ததாக தகவல் வெளியானது. ஆனால் அவர் 18 படி மட்டுமே ஏறியதாகவும், தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண்ணான சசிகலா இதுபற்றி கூறுகையில், “நான் ஐயப்ப பக்தை. முறையாக 48 நாட்கள் விரதமிருந்து வந்துள்ளேன். நான் என்னுடைய கர்ப்பப் பையை மருத்துவ காரணங்களுக்காக எடுத்துவிட்டேன். அதற்கான மருத்துவ சான்றிதழும் என்னிடம் இருக்கிறது. ஆனாலும், என்னை திருப்பி அனுப்பிவிட்டனர். 18 படிகள் மட்டுமே ஏறினேன், சாமி தரிசனம் செய்ய என்னை அனுமதிக்கவில்லை” என்றார்.
ஆனால், அவர் ஐயப்பனை நிச்சயம் தரிசனம் செய்திருப்பார் என போலீசார் கூறுகின்றனர்.
இதேபோல் சபரிமலை கோயிலுக்கு சென்ற தேனி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை ஒருவர் ஏமாற்றத்துடன் திரும்பினார். பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக கோயிலில் வழிபடாமல் பம்பையில் இருந்து திரும்பி சென்றுள்ளார். #SabarimalaTemple #SrilankanWoman
×

X