search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உண்டியல் வசூல்"

    திருப்பதி கோவிலில் நேற்று பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.4.10 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று வைகாசி விசாகம் சனிக்கிழமை வந்துள்ளதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    ஏழுமலையானை நேற்று முன்தினம் முழுவதும் 79,251 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 38,549 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    நேற்று காலை நிலவரப்படி 39 காத்திருப்பு அறைகளில் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்கள் 18 மணி நேரத்திற்கு பின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நடைபாதை, நேர ஒதுக்கீடு, விரைவு தரிசனம் மற்றும் தேவஸ்தானம் வழங்கும் முதன்மை தரிசனங்களில் பக்தர்கள் 3 மணிநேரத்திற்குள் ஏழுமலையானை தரிசித்துத் திரும்பினர்.

    நேற்று பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.4.10 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர்.

    அவ்வாறு நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பலவித வசதிகளை அளித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம், அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.17 லட்சம், கோசம்ர‌ஷண அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், சர்வஸ்ரேயா அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், வேதபரிர‌ஷண அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம் என ரூ.30 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

    ×