search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உபி யோத்தா"

    புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 34-32 என்ற புள்ளி கணக்கில் மும்பைக்கு அதிர்ச்சி அளித்து 7-வது வெற்றியை ருசித்தது. #ProKabaddi #UPYoddha #UMumba
    கொல்கத்தா:

    6-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த 124-வது லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி, முன்னாள் சாம்பியன் யு மும்பாவை (மும்பை அணி) எதிர்கொண்டது. திரிலிங்கான இந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 34-32 என்ற புள்ளி கணக்கில் மும்பைக்கு அதிர்ச்சி அளித்து 7-வது வெற்றியை ருசித்தது. இதில் ஒரு கட்டத்தில் 32-32 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் உ.பி.யோத்தா வீரர் பிரசாந்த் குமார் ராய் 2 பேரை அவுட் செய்து தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். தங்களது கடைசி லீக்கில் ஆடிய மும்பை அணி 22 ஆட்டங்களில் 15 வெற்றி, 5 தோல்வி, 2 டை என்று 86 புள்ளிகளுடன் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 39-23 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சை சாய்த்தது. 10-வது வெற்றியை பதிவு செய்த பெங்கால் அணி இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. இன்றைய ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன. #ProKabaddi  #UPYoddha #UMumba

    புரோ கபடி லீக் தொடரில், பஞ்ச்குலாவில் நேற்றிரவு நடந்த தமிழ் தலைவாஸ்-உ.பி. யோத்தா அணிகள் இடையிலான பரபரப்பான லீக் ஆட்டம் 25-25 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது. #ProKabaddi #TamilThalaivas #UPYoddha
    பஞ்ச்குலா:

    6-வது புரோ கபடி லீக் தொடரில், பஞ்ச்குலாவில் நேற்றிரவு நடந்த தமிழ் தலைவாஸ்-உ.பி. யோத்தா அணிகள் இடையிலான பரபரப்பான லீக் ஆட்டம் 25-25 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமன்) முடிந்தது. தலைவாஸ் அணி 25-23 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், கடைசி நிமிடத்தில் உ.பி. வீரர் பிரசாந்த் குமார் ராய் ‘ரைடு’ மூலம் அடுத்தடுத்து 2 புள்ளி எடுத்து தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.

    பிரசாந்த் குமார் மொத்தம் 12 புள்ளிகள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. ‘பி’ பிரிவில் தமிழ் தலைவாஸ் அணி 5 வெற்றி, 12 தோல்வி, 3 ‘டை’ என்று 38 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பையும் இழந்து விட்டது.

    இன்றைய ஆட்டங்களில் பாட்னா பைரட்ஸ்-உ.பி. யோத்தா (இரவு 8 மணி), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. #ProKabaddi #TamilThalaivas #UPYoddha 
    நேற்றிரவு நடந்த புரோ கபடி லீக் போட்டியில் அரியானா குஜராத்தை வென்றது. இன்று நடக்கும் ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்- உ.பி.யோத்தா, அரியானா ஸ்டீலர்ஸ்-யு மும்பா ஆகிய அணிகள் மோதுகின்றன. #ProKabaddi
    சோனிபட்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் அரியானா மாநிலம் சோனிபட்டில் நேற்றிரவு நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் அசத்தலாக ஆடிய அரியானா அணி 32-25 என்ற புள்ளி கணக்கில் குஜராத்தை சாய்த்து முதலாவது வெற்றியை சுவைத்தது. மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 41-37 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை தோற்கடித்தது.

    இதே மைதானத்தில் இன்று நடக்கும் ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்- உ.பி.யோத்தா (இரவு 8 மணி), அரியானா ஸ்டீலர்ஸ்-யு மும்பா (இரவு 9 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன. #ProKabaddi

    ×