search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர் தூதருக்கு அனுமதி மறுப்பு"

    பாகிஸ்தானில் குருத்வாராவுக்கு சென்ற இந்திய சீக்கிய யாத்ரீகர்களை சந்திக்கச் சென்ற உயர் தூதருக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு பஞ்சாப் முதல் மந்திரி அமரிந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். #Pakistan #GurdwaraPanjaSahib
    சண்டிகர்:

    19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய சீக்கிய அரசர் மகாராஜா ரஞ்சித் சிங்கின் நினைவு அஞ்சலி லாகூரில் உள்ள குருத்வாரா தேரா சாகிப் ஆலயத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜூன் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தியாவில் வாழும் சீக்கிய மதத்தினர் பாகிஸ்தான் சென்றுள்ளனர். அதற்காக 300 சீக்கிய யாத்ரீகர்களுக்கு விசாவும், சிறப்பு ரயில் சேவையும் பாகிஸ்தான் அரசு அறிவித்து இருந்தது.

    இதற்கிடையே, இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்ற சீக்கிய யாத்ரீகர்களை காண சென்ற இந்திய வெளியுறவுத் துறை  உயர் அதிகாரி அஜய் பிசாரியாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இந்த சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராகி பதிலளிக்குமாறு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணை உயர் தூதருக்கு சம்மன் அளித்துள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தானில் குருத்வாராவுக்கு சென்ற இந்திய சீக்கிய யாத்ரீகர்களை சந்திக்கச் சென்ற உயர் தூதருக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு பஞ்சாப் முதல் மந்திரி அமரிந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானின் இந்த செயல் புதுடில்லிக்கு எதிரான குருட்டுத்தனமான மற்றும் முட்டாள்தனமான வெறுப்புணர்வே காரணம். சீக்கிய யாத்ரீகர்களை உயர் அதிகாரி சந்திக்க அனுமதி மறுத்த பாகிஸ்தானுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். #Pakistan #GurdwaraPanjaSahib
    ×