என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » உயிரிழப்பு அதிகரிப்பு
நீங்கள் தேடியது "உயிரிழப்பு அதிகரிப்பு"
இலங்கையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #SriLankaTerrorAttacks #SriLankaBombings
கொழும்பு:
இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் தகர்க்கப்பட்டன. பிரார்த்தனைக்காக தேவாலயங்களில் திரண்டிருந்த பொதுமக்கள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் கொத்துக் கொத்தாக உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் நேற்று மாலை நிலவரப்படி, 321 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.
ஈவு இரக்கமின்றி பொதுமக்களை கொன்று குவித்த, இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக 40 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று இரவு மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இலங்கையில் மேலும் பலர் பதுங்கியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எச்சரித்துள்ளார். எனவே, வாகன சோதனை மற்றும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #SriLankaTerrorAttacks #SriLankaBombings

அதன்பின்னர், பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் சிகிச்சை பலனின்றி மேலும் பலர் உயிரிழந்தனர். இன்று காலை நிலவரப்படி உயிரிழப்பு 359 ஆக உயர்ந்துள்ளது. இதில் 45 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈவு இரக்கமின்றி பொதுமக்களை கொன்று குவித்த, இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக 40 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று இரவு மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இலங்கையில் மேலும் பலர் பதுங்கியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எச்சரித்துள்ளார். எனவே, வாகன சோதனை மற்றும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #SriLankaTerrorAttacks #SriLankaBombings
ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ தீவை கடந்த வாரம் தாக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்று 44 ஆக அதிகரித்துள்ளது. #Japanquake #Hokkaidoquake
டோக்கியோ:
ஜப்பான் நாட்டை கடந்த 4-ந் தேதி தாக்கிய ‘ஜெபி’ புயலால் ஏற்பட்ட பாதிப்பு மறைவதற்குள் கடந்த 6-ம் தேதி அதிகாலை 3.08 மணிக்கு ஹொக்கைடோ தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பல முறை அதிர்வுகள் ஏற்பட்டன.
மலைப்பகுதிகள் சூழ்ந்த கிராமப்பகுதியான அட்சுமா உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் கட்டிடங்கள் தரைமட்டமாகின. பாலங்கள் பிளவுபட்டன. சாலைகள் பெருத்த சேதம் அடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன.
தகவல் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 30 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின.
இந்நிலையில், இன்றைய (திங்கட்கிழமை) நிலவரப்படி புதையுண்ட வீடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அப்பகுதியில் மின்சார வினியோகம் இன்னும் சீரடையாததால் அந்நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான டோயோட்டா தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. #Japanquake #Hokkaidoquake
ஜப்பான் நாட்டை கடந்த 4-ந் தேதி தாக்கிய ‘ஜெபி’ புயலால் ஏற்பட்ட பாதிப்பு மறைவதற்குள் கடந்த 6-ம் தேதி அதிகாலை 3.08 மணிக்கு ஹொக்கைடோ தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பல முறை அதிர்வுகள் ஏற்பட்டன.
மலைப்பகுதிகள் சூழ்ந்த கிராமப்பகுதியான அட்சுமா உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் கட்டிடங்கள் தரைமட்டமாகின. பாலங்கள் பிளவுபட்டன. சாலைகள் பெருத்த சேதம் அடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன.
தகவல் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 30 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின.
நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த வீடுகளுக்குள் சிக்கியிருந்த மக்களை மீட்பதற்காக தன்னார்வலர்கள் உள்பட சுமார் 40 ஆயிரம் பேர் இரவு-பகலாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக புல்டோஸர் வாகனங்கள், மோப்ப நாய்கள் மற்றும் 75 ஹெலிகாப்டர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
அப்பகுதியில் மின்சார வினியோகம் இன்னும் சீரடையாததால் அந்நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான டோயோட்டா தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. #Japanquake #Hokkaidoquake
×

X