search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில்"

    திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஆண்டுதோறும் தாயார் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஊஞ்சல் உற்வசம் தொடங்கி நடந்து வருகிறது.
    திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஆண்டுதோறும் தாயார் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஊஞ்சல் உற்வசம் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளான நேற்று தாயார் ஊஞ்சல் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    ஊஞ்சல் உற்சவத்தையொட்டி வருகிற 25-ந்தேதி வரை மாலை 6 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, 6.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தை சேர்கிறார். அங்கு அலங்காரம் செய்யப்பட்டு, இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் கண்டருளலும், பின்னர் அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பாடும் நடக்கிறது. இரவு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    இதேபோல் 26-ந் தேதி மாலை 6.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் சேர்தல், இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் கண்டருளி, இரவு 8.30 மணிக்கு மண்டபத்தில் இருந்து பல்லக்கில் புறப்பாடு, இரவு 9 மணிக்கு தாயார் பல்லக்குடன் மூலஸ்தானம் சேர்தல் சேவை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

    இதையொட்டி அன்றைய தினம் காலை 8 மணிக்கு காவிரியில் இருந்து பட்டர்கள் புனித நீர் எடுத்து வந்து காலை 9.30 மணிக்கு கோவிலில் திருமஞ்சன குடம் இறக்கி வைக்கப்படுகிறது. காலை 10 மணிக்கு அங்கில் ஒப்புவித்தலும், மாலை 3 மணிக்கு அங்கில் சுத்தம் செய்து ஒப்புவித்தல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு மங்கள ஆரத்தியும் நடைபெறும்.

    மறு நாள் (சனிக்கிழமை) திருப்பாவாடை திருநாளையொட்டி காலை 7 மணிக்கு மடப்பள்ளியில் இருந்து தளிகை போடுதலும், காலை 10.45 மணிக்கு தளிகை அமுது செய்தலும், காலை 11 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டி மற்றும் பிரசாதம் வினியோகம் நடைபெறும். காலை 11 மணி முதல் 12 மணிவரை பொதுஜன சேவைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி 20-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையும், 21-ந்தேதி காலை 11 மணி வரையிலும் பொது ஜனசேவை கிடையாது.

    இதேபோல லால்குடி தாலுகா அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் வருகிற 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஜேஷ்டாபிஷேகம் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு கோவிலில் இருந்து குடம் எடுத்தலும், 9 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து குடம் புறப்படுதலும், 9.30 மணிக்கு கோவிலில் திருமஞ்சன குடம் சேருதலும், 10 மணிக்கு திருமஞ்சனம் கண்டருளலும், பகல் 1.30 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டியும் நடைபெறும்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் மற்றொரு உபகோவிலான திருவெள்ளறை புண்டரீ காட்ச பெருமாள் கோவிலில் வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.45 மணிக்கு கோவிலில் இருந்து தங்க குடம் எடுத்து செல்கிறார்கள். 9.30 மணிக்கு தங்க குடத்தில் புனித நீர் எடுத்து வரப்பட்ட பின்னர் காலை 10.30 மணிக்கு திருமஞ்சன குடங்கள் வீதி வலம் வந்து சன்னதி சேருகிறது. காலை 11 மணிக்கு பெருமாள், தாயார் அங்கில்கள் ஒப்புவித்தலும், இரவு 7 மணிக்கு மங்கள ஆரத்தியும் நடைபெறும். மறு நாள் (25-ந்தேதி) காலை 7 மணிக்கு தளிகை எடுத்தலும், 10 மணிக்கு திருப்பாவாடை அமுது செய்து மங்கள ஆரத்தி கண்டருளலும், 10.15 மணிக்கு தீர்த்த கோஷ்டி மரியாதையும், 10.15 மணி முதல் 12 மணி வரை பொது ஜனசேவைக்கு அனுமதியும் அளிக்கப்படும்.

    இந்த தகவல்களை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்து உள்ளார். 
    ×