search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக ஜூனியர் தடகளம்"

    உலக ஜூனியர் தடகளத்தில் தங்கம் வென்று சாதனை படைத்த ஹிமா தாசுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அசாம் அரசு அறிவித்துள்ளது. #HimaDas #WorldJuniorAthletics
    கவுகாத்தி:

    பின்லாந்தில் நடந்த உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் (20 வயதுக்கு உட்பட்டோர்) இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 400 மீட்டர் ஓட்டத்தில் 51.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். இதன் மூலம் உலக அளவிலான தடகளத்தில் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்த முதல் இந்திய மங்கை என்ற புதிய சரித்திர சாதனையை அவர் படைத்தார்.

    விவசாய குடும்பத்தை சேர்ந்த ஹிமாதாசின் சொந்த ஊர், அசாம் மாநிலம் நாகாவ்ன் மாவட்டத்தில் உள்ள திங் கிராமம் ஆகும். உடன் பிறந்தவர்கள் 4 பேர். ஹிமா தாசின் மகத்தான வெற்றியால் அந்த கிராமமே உற்சாகம் பூண்டுள்ளது.

    இதுதொடர்பாக ஹிமா தாஸ் கூறுகையில், தேசத்திற்காக பதக்கத்தை கொண்டு வருவது மிகப்பெரிய சாதனையாகும். இந்திய மக்களுக்கு இந்த பரிசை அளிப்பது மிகவும் பெருமை அளிக்கிறது. அடுத்து வரும் ஆசிய விளையாட்டிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிபேன்’ என்றார்.

    தங்கம் வென்ற வீராங்கனை ஹிமாதாசுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்பட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், உலக ஜூனியர் தடகளத்தில் தங்கம் வென்று சாதனை படைத்த ஹிமா தாசுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அசாம் அரசு அறிவித்துள்ளது.

    அசாம் முதல் மந்திரி சர்பானந்தா சோனோவால் ஹிமா தாசுக்கு50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்து அதற்கான உத்தரவை வெளியிட்டார்.

    ஏற்கனவே முன்னாள் முதல் மந்திரி தருண் கோகோய் ஒரு லட்சமும், அசாம் அத்லெடிக் அசோசியேஷன் 2 லட்சமும், முன்னாள் மந்திரி கவுதம் ராய் ஒரு லட்சமும் அளித்துள்ளனர் எனப்து குறிப்பிடத்தக்கது. #HimaDas #WorldJuniorAthletics
    உலக ஜூனியர் தடகளத்தில் தங்கம் வென்று சாதனை படைத்த ஹிமா தாசுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து தெரிவித்தனர். #HimaDas #WorldJuniorAthletics #Modi
    தாம்ப்ரே:

    பின்லாந்தில் நடந்து வரும் உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் (20 வயதுக்குட்பட்டோர்) இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 400 மீட்டர் ஓட்டத்தில் 51.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். இதன் மூலம் உலக அளவிலான தடகளத்தில் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்த முதல் இந்திய மங்கை என்ற புதிய சரித்திர சாதனையை அவர் படைத்தார். தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, பதக்கமேடையில் நின்ற அவரது கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது. ஏழ்மையான விவசாய குடும்பத்தை சேர்ந்த ஹிமாதாசின் சொந்த ஊர், அசாம் மாநிலம் நாகாவ்ன் மாவட்டத்தில் உள்ள திங் கிராமம் ஆகும். உடன் பிறந்தவர்கள் 4 பேர். ஹிமா தாசின் மகத்தான வெற்றியால் அந்த கிராமமே உற்சாகம் பூண்டுள்ளது. 18 வயதான ஹிமா தாஸ் கூறுகையில் ‘தேசத்திற்காக பதக்கத்தை கொண்டு வருவது மிகப்பெரிய சாதனையாகும். இந்திய மக்களுக்கு இந்த பரிசை அளிப்பது மிகவும் பெருமை அளிக்கிறது. உலக சாம்பியன் ஆனதன் மூலம் எனது கனவு நனவாகி உள்ளது. அடுத்து வரும் ஆசிய விளையாட்டிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிபேன்’ என்றார்.



    புயல்வேக ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமாதாசுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



    பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஹிமா தாசின் வரலாற்று சிறப்பு மிக்க சாதனையால் தேசம் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறது. அவரது சாதனை இளம் வீரர், வீராங்கனைகளுக்கு நிச்சயம் உந்து சக்தியாக இருக்கும்’ என்று கூறியுள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது வாழ்த்து செய்தியில், ‘51.46 வினாடிகளில் இலக்கை எட்டியது என்பது அவரது கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு. புதிய சகாப்தத்தில் இது வெறும் தொடக்கம் தான். இன்னும் நிறைய பதக்கங்களை அவர் வெல்வார்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். #HimaDas #WorldJuniorAthletics #Modi
    ×