என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » உலக பயணம்
நீங்கள் தேடியது "உலக பயணம்"
உலக கோப்பை கால்பந்து கோப்பை 50 நாடுகளில் சுமார் 1,43,000 கிலோ மீட்டர் பயணத்தை முடித்துகொண்டு போட்டி நடைபெற இருக்கும் மாஸ்கோ நகருக்கு வந்தடைந்தது. #FIFA2018 #FIFAWorldCup #WorldTour
மாஸ்கோ:
உலக கோப்பை கால்பந்து தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடந்த 2014ல் இத்தொடர் பிரேசிலில் நடந்தது. இதில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த ஆண்டுக்கான தொடர் வரும் ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை ரஷியாவில் நடக்கிறது. சுமார் 32 அணிகள் பங்கேற்கும் 64 போட்டிகளை கொண்ட இத்தொடர் ரஷியாவின் 11 முக்கிய நகரங்களில் நடக்கிறது. இதன் இறுதிப்போட்டி மாஸ்கோவின் லுஸ்நிகி மைதானத்தில் ஜூலை 15-ம் தேதி நடக்கவுள்ளது.
ஒவ்வொரு முறை உலக கோப்பை கால்பந்து தொடர் தொடங்குவதற்கு முன் 36 செண்டி மீட்டர் உயரம் கொண்ட உலக கோப்பை, உலகை சுற்றி எடுத்து வரப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான சுற்றுப்பயணம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தொடங்கியது.
அந்த கோப்பையானது ஆறு கண்டங்களில் சுமார் 50 நாடுகளில் சுமார் 1,43,000 கிலோ மீட்டர் துாரம் பயணம் செய்து ரஷியா வந்தடைந்தது. தற்போது ரஷியாவில் உள்ள நகரங்களை சுற்றி வருகிறது. இந்த பயணம் நாளையுடன் முடிகிறது. அதன்பின் இறுதிப்போட்டி நடைபெறும் லுஸ்நிகி மைதானத்தில் கோப்பை பாதுகாப்பாக வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. #FIFA2018 #FIFAWorldCup #WorldTour
×

X